Thengai Paal Sadam : குழந்தைகளுக்கு நீங்கள் வழக்கமாக கொடுக்கும் சாத வகைகள் கொஞ்சம் போர் அடித்து விட்டால் இந்த தேங்காய் சாதத்தை கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகளுக்கு இப்பொழுதெல்லாம் சாதம், குழம்பு மற்றும் பொரியல் ஆகியவற்றை வைத்து சாப்பிடுவதை காட்டிலும், எளிதாக சாத வகைகள் தான் விரும்புகின்றனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால், குழம்பு மற்றும் பொரியல் வைக்கும் பொழுது காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அனைத்தும் குழந்தைகளுக்கு கிடைக்கும். ஆனால் நான் தயிர் சாதம், லெமன் சாதம் போன்ற சாத வகைகள் செய்து கொடுக்கும் பொழுது அதில் சுவை மட்டுமே அதிகமாக இருக்குமே தவிர குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும்.
ஆனால் குழந்தைகள் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் பொழுது, அதனை எப்படி ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்பதை தான் நாம் பார்க்க வேண்டும். அப்படி ஒரு ஹெல்தியான ரெசிபி தான் இந்த தேங்காய் பால் சாதம்.
தேங்காய்ப்பால் என்பது இயற்கையிலேயே எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. அதனுடன் ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை சேர்ந்து கொடுக்கும்பொழுது ஆரோக்கியமான மதிய உணவு அல்லது காலை உணவாக இந்த தேங்காய் பால் சாதம் இருக்கும்.
Thengai Paal Sadam:
Thengai Paal Sadam:
காய்கறிகள் மற்றும் தேங்காய் பாலின் நற்குணங்கள் நிறைந்த இந்த தேங்காய்ப்பால் சாதத்தினை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- தேங்காய் பால் சாதத்தில் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. குறிப்பாக சொல்லப் போனால் வைட்டமின் சி, போலேட், இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் மாங்கனிஸ் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
- தேங்காய் பாலில் mct எனப்படும் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பானது உடனடியாக கரைந்து உடலுக்கு தேவையான எனர்ஜியை கொடுக்க வல்லது. குறிப்பாக மூளை வளர்ச்சிக்கு இந்த கொழுப்பு மிகவும் அவசியமாகும்.
- பசும்பால் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு தேங்காய்ப்பால் என்பது சிறந்த மாற்றாக இருக்கும். பசும்பாலில் உள்ள சத்துக்களை போலவே இதிலும் சத்துக்கள் அதிகம் என்பதால் பசும்பாலுக்கு பதிலாக இதனை குழந்தைகள் எடுத்துக் கொள்ளலாம்.
- இதில் இயற்கையிலேயே நிறைந்திருக்கும் லாரிக் அமிலம் எனப்படும் அமிலம் நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டதாகும். எனவே உடலில் ஏற்படும் காயங்களை இயற்கையாகவே ஆற்றும் தன்மை தேங்காய் பாலுக்கு உண்டு.
- மேலும் இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகமாக உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
- இயற்கையிலேயே காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களான வைட்டமின் சி ,வைட்டமின் ஈ மற்றும் செலினியம் நிறைந்துள்ளன. இவை உடலில் செல்கள் சிதை உடையாமல் பாதுகாக்கின்றன.
- தேங்காய் பாலில் நீர் சத்துக்கள் அதிகம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்கின்றது.
Thengai Paal Sadam:
- அரிசி – 1 கப்
- நறுக்கிய வெங்காயம்-1
- பச்சை மிளகாய்- ஒரு துண்டு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
- காய்கறிகள்( பீன்ஸ் கேரட் பச்சை பட்டாணி)- அரைக்கப்
- தேங்காய் பால்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
தாளிப்பதற்கு
- நெய்- 2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
- கிராம்பு-2
- பட்டை-1
- சீரகம்-1/2 டீஸ்பூன்
- முந்திரி- ஒன்றரை டேபிள் ஸ்பூன்
Thengai Paal Sadam
செய்முறை
1. அரிசியை இரண்டு முதல் மூன்று தடவை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2. குக்கரில் நெய் ஊற்றி தாளிப்பதற்கு தேவையானவற்றை போட்டு தாளிக்கவும்.
3. முந்திரிப் பருப்பை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
4. வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
5. தேவையான காய்கறிகள் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
6. அரிசியை சேர்த்து கிளறவும்.
7. 1.5 கப் தேங்காய் பால் சேர்க்கவும்.
8. மூன்று விசில் வரும் அளவிற்கு வேக விடவும்.
9. குழந்தைகளுக்கு வெதுவெதுப்பாக பரிமாறவும்.
குழந்தைகளுக்கு சத்தான காலை உணவாக, மதிய உணவாக அல்லது இரவு உணவாக எப்பொழுது வேண்டுமானாலும் இந்த தேங்காய்ப்பால் சாதத்தை கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த அரிசி வேண்டுமானாலும் உபயோகிக்கலாமா?
நீங்கள் வீட்டில் உபயோகிக்கும் எந்த வகை அரிசியை உபயோகிக்கலாம். ஆனால் தண்ணீரின் அளவு மற்றும் சமைக்கும் நேரம் மாறுபடும்.
வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
குக்கர் விசிலில் எளிதில் வெந்து போகின்ற காய்கறிகளை சேர்க்கலாம்.
தேங்காய்பால் சாதம்
Ingredients
- தேவையானவை
- அரிசி - 1 கப்
- நறுக்கிய வெங்காயம்-1
- பச்சை மிளகாய்- ஒரு துண்டு
- இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 டேபிள் ஸ்பூன்
- காய்கறிகள் பீன்ஸ் கேரட் பச்சை பட்டாணி- அரை கப்
- தேங்காய் பால்- 1.5 கப்
- உப்பு- தேவையான அளவு
- தாளிப்பதற்கு
- நெய் -இரண்டு டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
- கிராம்பு-2
- பட்டை-1
- சீரகம்-1/2 டீஸ்பூன்
- முந்திரி- ஒன்றரை டேபிள் ஸ்பூன்
Leave a Reply