Tricolour Idly in Tamil: குழந்தைகளுக்கு நாம் வழக்கமாக காலையில் கொடுக்கும் உணவு இட்லி என்றாலும் பல வண்ணங்களுடன் குழந்தைகளை குதூகலப்படுத்தும் ரெசிபிதான் தான் இந்த கலர் இட்லி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாகவே இட்லி என்றாலே ஆயிரம் வாட்ஸ் பல்பு போன்று இருக்கும் நம் குழந்தைகளின் முகம் சட்டென்று சுருங்கிவிடும். இட்லியை நாம் இப்படி வித்யாசமாக செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
மேலும் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமளிக்கும் கேரட் கூழ் மற்றும் கீரை கூழ் ஆகியவை இதில் கலந்திருப்பதுடன் தேசிய கொடியின் மூன்று வண்ணங்களுடன் குழந்தைகளின் மனதில் நாட்டு பற்றினையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.
Tricolour Idly in Tamil
- இட்லி மாவு -1 கப்
- கேரட் கூழ்- 1 கப்
- கீரை கூழ்- 1 கப்
செய்முறை
1.இட்லி மாவினை 3 பவுலில் நிரப்பவும்.
2.ஒரு பவுலில் கேரட் கூழ் மற்றொரு பவுலில் கீரை கூழ் சேர்க்கவும்.
3.நன்றாக கலக்கவும்.
4.மினி இட்லி தட்டில் நெய் தடவவும்.
5.தயாரித்த மாவினை அதில் நிரப்பவும்.
6.இட்லி பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
7.இட்லி தட்டினை அதற்கு மேல் வைக்கவும்.
8.ஐந்து நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைக்கவும்.
9.இட்லி வெந்து உள்ளதா என சரி பார்க்கவும்.
10.இட்லியை எடுக்கவும்.
11.சட்னியுடன் பரிமாறவும்.
இதில் காவி வண்ணத்திற்காக கேரட்டும் பச்சை வண்ணத்திற்காக கீரை மசியல் சேர்த்துள்ளேன்.நீங்கள் விருப்பத்தால் பீட்ரூட் கலந்தும் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.வழக்கமாக இட்லியை கண்டால் போரடிக்கும் குழந்தைகளுக்கு இந்த மினி ட்ரை கலர் இட்லிகளை கொடுத்து பாருங்கள்.தட்டில் உள்ள அத்தனை இட்லிகளும் காணாமல் போய்விடும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply