Ulundhu Ragi Kanji: பழங்காலம் முதலே தானியங்களுக்கு நம் உணவு பட்டியலில் நீங்க இடம் உண்டு.துரித உணவுகள் வருவதற்கு முன்னால் உடலுக்கு வலு சேர்க்கும் தானியங்களையே நம் முன்னோர்கள் முழு நேர உணவாக உட்கொண்டனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கும் தானிய உணவினையே முதல் உணவாக அறிமுகபடுத்தினர்.அவற்றுள் முதலிடம் வகிப்பது ராகி மற்றும் உளுந்து.இதனை கஞ்சியாக செய்து குழந்தைங்களுக்கு கொடுக்கும் பொழுது உடல் வலுப்பெறும். உளுந்து மற்றும் ராகி கலந்த மாவினை அரைத்து தயாராக வைத்து கொண்டு தேவையான பொழுது கஞ்சி தயாரித்து கொள்ளலாம்.
உளுந்து ராகி கஞ்சி கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து மிகவும் நல்லது.
- உளுந்து உடல் சூட்டை தணிக்கும்.
- இடுப்பு எலும்பிற்கு பலம் சேர்க்கக்கூடியது.குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
- கேழ்வரகு புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும்.
- நார்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் சீராக நடைபெற உதவுகிறது.
- கேழ்வரகில் கால்சியம் அதிகம் உள்ளதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
இதையும் படிங்க: கருவிலிருக்கும் குழந்தைக்கு பிடிக்காத விஷயங்கள்
உளுந்து மற்றும் ராகி மாவு தயாரிக்க தேவையானவை:
- ராகி – ½ கப்
- உளுந்து ½ கப்
- ஏலக்காய்
உளுந்து ராகி கஞ்சி தயாரிக்க தேவையானவை:
- உளுந்து ராகி மாவு – 1 டே.ஸ்பூன்
- தண்ணீர் – 1 கப்
- ஏலக்காய் பொடி- இம்மியளவு
செய்முறை
1.உளுந்தை பானில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
2. அடுத்து ராகியை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்கவும்.
3.வறுத்த ராகி மற்றும் உளுந்தை ஆற விடவும்.
4. ராகி மற்றும் உளுந்தை ஜாரில் போட்டு நல்ல பவுடராக அரைக்கவும்
5. பானில் 1 கப் தண்ணீரை ஊற்றவும்.
6.1 டே.ஸ்பூன் அரைத்து வைத்த மாவை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
7. பாத்திரத்தை அடுப்பில் வைத்து கலவையை 10 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.
8.அடுப்பை அணைக்கவும்.
9.இம்மியளவு ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
10.கஞ்சியை வெது வெதுப்பாக பரிமாறவும்.
இதையும் படிங்க: ஈசி கஸ்டர்ட் பழ சாலட்
ஒரு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சர்க்கரை சேர்க்க வேண்டாம்.இனிப்பு சுவைக்கு ஆப்பிள் கூழ் போன்ற பழக்கலவைகளை கலந்து கொடுக்கலாம். ஒரு வயத்திற்கு மேலான குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது இனிப்பு சுவைக்கு நாட்டு சர்க்கரை,டேட்ஸ் பவுடர், கோகோனட் சுகர் போன்றவை கலந்து கொடுக்கலாம்.மேலும் சுவையை கூட்ட ட்ரை புரூஃட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
Leave a Reply