Varagu Arisi Pongal :உணவே மருந்து என்று நாம் உணர ஆரம்பித்து இருக்கின்ற இந்த காலகட்டத்தில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்ற வரப்பிரசாதம் சிறுதானியங்கள் என்றால் அது சற்றும் மிகையாகாது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் பெயர்கூட வைக்காத பல புது நோய்கள் நம்மை ஆட்கொள்ளும் பட்சத்தில் நம் ஆரோக்யத்தை பேணிக்காக்க உணவு ஆய்வாளர்களும் தற்பொழுது பரிந்துரைப்பது சிறுதானியங்களை தான்.
அரிசி மற்றும் கோதுமை உணவினை தவிர ஆரோக்கியமாக குழந்தைகளுக்கு நாம் என்ன கொடுக்கலாம் என்று யோசிக்கும்பொழுது அனைவரின் கவனமும் தற்போது சிறுதானியங்களின் பக்கம் திரும்பி வருகின்றது.
அரிசி உணவைப் போலவே சிறுதானியங்களை வைத்தும் அனைத்து வகையான ரெசிபிகளையும் நம்மால் செய்ய முடியும். இப்போது குழந்தைகளுக்கு சிறு தானியங்களில் ஒன்றான வரகினைவைத்து வெண்பொங்கல் எப்படி சமைத்து கொடுக்கலாம் என்பதை நாம் காணலாம்.
Varagu Arisi Pongal
- வரகு அரிசி- ஒரு கப்
- பாசிப்பருப்பு -2 டேபிள்ஸ்பூன்
- மிளகு -1 டீஸ்பூன்
- சீரகத்தூள் -1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- மஞ்சள்தூள்- இம்மியளவு
- தண்ணீர் -தேவையானளவு
- இஞ்சி (நறுக்கியது)-1 டேபிள்ஸ்பூன்
- நெய் -1 டேபிள்ஸ்பூன்
- முந்திரிப்பருப்பு -5
Varagu Arisi Pongal
செய்முறை
Varagu Arisi Pongal
1.வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
3.கருவேப்பிலை சேர்க்கவும்.
4.இஞ்சி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
5.பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
6.வரகு அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
7.தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
8.குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு மிதமான தீயில் சூடாக்கவும்.
9.பானில் சிறிதளவு நெய் ஊற்றவும்.
10.முந்திரிப் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
11.வறுத்த முந்திரிப்பை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பொங்கலில் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
12.குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்.
இதனை குழந்தைகளுக்கு காலை மற்றும் மதிய உணவாக கொடுக்கலாம். சிறுதானியத்துடன் பாசிப்பயறும் சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு சுவையை அளிப்பதுடன் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தையும் அளிக்கக்கூடியது.
குழந்தைகள் மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் காலை நேர டிபனாக செய்வதற்கு ஏற்ற ரெசிபி இது. இனி இட்லி,தோசை மற்றும் சப்பாத்தியை தவிர்த்து வேறு ஏதேனும் புதுவிதமாக உணவு சமைக்க வேண்டும் என்று எண்ணினால் இந்த வரகு பொங்கலை கட்டாயம் செய்து பாருங்கள்.
Varagu Arisi Pongal
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான வரகு அரிசி பொங்கல்
Ingredients
- 1 கப் வரகு அரிசி
- 2 டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு
- 1 டீ.ஸ்பூன் மிளகு
- 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- சிறிதளவு கறிவேப்பிலை
- இம்மியளவு மஞ்சள்தூள்
- தேவையானளவு தண்ணீர்
- 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி (நறுக்கியது)-
- 1 டேபிள்ஸ்பூன் நெய்
- 5 முந்திரிப்பருப்பு
Notes
- வரகு அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் நன்றாக கழுவி ஒரு மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மிளகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடவும்.
- கருவேப்பிலை சேர்க்கவும்.
- இஞ்சி,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
- பாசிப்பருப்பை சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- வரகு அரிசி சேர்த்து ஒரு கிளறு கிளறவும்
- தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்
- குக்கரில் 3 முதல் 4 விசில் வரும் அளவிற்கு மிதமான தீயில் சூடாக்கவும்
- பானில் சிறிதளவு நெய் ஊற்றவும்.
- முந்திரிப் பருப்பை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்
- வறுத்த முந்திரிப்பை ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த பொங்கலில் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
- குழந்தைகளுக்கு இதமாக பரிமாறவும்
Leave a Reply