Vegetable Biryani for Kids in Tamil: வழக்கமாக சமைக்கும் சாதத்திற்கு பதிலாக ஸ்பெஷலாக எதாவது செய்ய வேண்டுமென்றால் நம் மனதில் கணநேரத்தில் உதயமாவது பிரியாணி.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பதார்த்தம்தான் பிரியாணி.நாம் பிரியாணி சமைக்கும் பொழுது பலவித மசாலா பொருட்கள் சேர்த்து நன்கு காரசாரமாக செய்வது வழக்கம்.மேலும் சுவையை கூட்ட கடைகளில் வாங்கும் மசாலா பொருட்களை கூட சில சமயம் உபயோகிப்பதுண்டு.ஆனால் காரமாக இருந்தால் பெரும்பாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள் .மேலும் கடைகளில் விற்கப்படும் மசாலாக்கள் குழந்தைகளுக்கும் நல்லதல்ல.எனவே வீட்டிலேயே இருக்கும் பாரம்பரிய மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஹெல்தியான வெஜிடபிள் பிரியாணி ரெசிபியை பார்க்கலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Vegetable Biryani for Kids in Tamil:
- பாசுமதி அரிசி – ½ கப்
- மசாலா பொருட்கள் (பிரியாணி இலை,மிளகு,சீரகம்,கிராம்பு,அன்னாசி பூ)
- பச்சை பட்டாணி – 2 டே.ஸ்பூன்
- பிரெஞ்சு பீன்ஸ் – 1 டே.ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம்- 1
- புதினா இலைகள்- ¼ கப்
- கொத்தமல்லி இலைகள் – ¼ கப்
- பச்சை மிளகாய் – 1 (தேவைப்பட்டால்)
- இஞ்சி – ½ இன்ச்
- நெய் – 1 டே.ஸ்பூன்
- முந்திரி- 4-5
- தயிர் – 2-3 டே.ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
Vegetable Biryani for Kids in Tamil:
செய்முறை
1.பாசுமதி அரிசியை நன்றாக கழுவி 10-15 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்
2.கொத்தமல்லி இலைகள்,புதினா,பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து ஓரமாக வைக்கவும்.
3.குக்கரில் நெய்யை எடுத்துக்கொள்ளவும்.அதில் முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து ஓரமாக வைக்கவும்.
4.குக்கரில் மசாலா பொருட்களை (பிரியாணி இலை,மிளகு,சீரகம்,கிராம்பு,அன்னாசி பூ) போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும்.
5.அதில் வெங்காயத்தை சேர்த்து 1-2 நிமிடங்கள் வதக்கவும். பின்பு நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்த்து 2-3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும்.
6.கொத்தமல்லி,புதினா பேஸ்டை அதனுடன் சேர்த்து வதக்கவும். அதைதொடர்ந்து தயிர் சேர்த்து கலக்கவும்.
7.ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
8.குக்கரில் 1 கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும். குக்கரை மூடி 2 விசில் வைத்து இறக்கவும்.
9. முந்திரி பருப்பை தூவி பரிமாறவும்.
இதையும் படிங்க: சத்துமாவு பர்பி
மசாலா பொருட்கள் மற்றும் காரம் குறைவாக சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பர்.அதுமட்டுமல்லாமல் கொத்தமல்லி இலைகள்,புதினா, பச்சை பட்டாணி,கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸிலும் இந்த ஸ்பெஷல் வெஜிடபிள் பிரியாணியை நீங்கள் கொடுத்து அனுப்பலாம்.உங்கள் குழந்தைகள் கண்டிப்பாக மிச்சம் வைக்காமல் உண்பார்கள்.
Leave a Reply