Vegetable Sandwich in Tamil: பொதுவாகவே குழந்தைகளுக்கு ஆரோக்கிய உணவினை கொடுக்க வேண்டும் என்ற அம்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான அதேசமயம் குழந்தைகளை கவரும் வகையில் ஒவ்வொரு உணவாக பார்த்து பார்த்து கொடுத்து வருகின்றோம். இதுவரை ஏராளமான லஞ்ச் பாக்ஸ் மற்றும் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். ஏராளமான அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க இன்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Vegetable Sandwich in Tamil
ஏனென்றால் ஸ்னாக்ஸ் என்று வந்தாலே பெரும்பாலும் கடைகளில் விற்கும் பாக்கெட் வகைகள் தான் குழந்தைகள் விரும்புகின்றார்கள். ஆனால் நாம் வித்தியாசமாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் கட்டாயமாக குழந்தைகள் விரும்பி உண்பார்கள். அப்படி ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியான எல்லா குழந்தைகளுக்கும் பிடித்த சாண்ட்விச் ரெசிபியை தான் நாம் பார்க்க போகின்றோம். சாண்ட்விச் உடன் குழந்தைகளின் வயிறுக்கு இதமான தயிர் மற்றும் காய்கறிகளை சேர்த்து எப்படி பிடித்தவாறு செய்து கொடுக்கலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
வழக்கமான சாண்ட்விச்சினை சாப்பிட்டு பழகிய குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்துப் பாருங்கள். தயிருடன் கேரட், வெள்ளரிக்காய், மிளகுத்தூள் சேர்த்துள்ளதால் குழந்தைகளின் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.
Vegetable Sandwich in Tamil
- தயிரில் கால்சியம் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் எலும்புகள் ஆரோக்கியமாக வளர்ச்சி அடைவதற்கு தேவையான சக்தியினை வழங்குகின்றது.
- தயிரில் புரோபயாட்டிக்ஸ் எனப்படும் வேதிப்பொருள் நிறைந்துள்ளதால் இது நாம் உண்ணும் உணவினை எளிதாக செரிமானமடைய செய்கின்றது.
- தயிரில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியவை ஆகும்.
- தயிரில் புரோட்டீன்கள் நிறைந்துள்ளதால் தசைகள் மற்றும் உறுப்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- தயிரில் நிறைந்துள்ள வைட்டமின் பி மற்றும் இதர சத்துக்கள் குழந்தைகளின் மூளைதிறனை அதிகரிக்க கூடியது.
- இவை மட்டுமல்லாமல் இதனுடன் வைட்டமின் ஏ, மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ள கேரட்,வெள்ளரிக்காய் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தரக்கூடிய உணவாக இது அமையும்.
Vegetable Sandwich in Tamil
- பிரட் துண்டுகள்-2
- தயிர்- அரை கப்
- துருவிய கேரட்- கால் கப்
- பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய் -கால் கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்- சுவைக்கு ஏற்ப
- எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்
Vegetable Sandwich in Tamil
செய்முறை
- ஒரு பவுலில் கெட்டியான தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு பிசையவும்.
- லெமன் ஜூஸ் அதற்கு மேல் ஊற்றவும்.
- உப்பு மற்றும் மிளகுத்தூளை சுவைக்கு ஏற்ப மேலே தூவவும்.
- பிரட் துண்டுகளை எடுத்து அதற்கு மேல் தயார் செய்து வைத்த தயிர் கலவையை தடவி அதற்கு மேல் இன்னொரு பிரட் துண்டை வைக்கவும்.
- சாண்ட்விச் இதமாக வேண்டும் என்று நினைத்தால் லேசாக கடாயில் பட்டர் ஊற்றி சூடேற்றி சாப்பிடலாம்.
- பிரட் தூண்டினை நீங்கள் விருப்பப்பட்டவாறு பாதியாக கட் செய்து சாண்ட்விச்னை சுவைத்து மகிழலாம்.
இந்த சாண்ட்விச்னை பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் ஆகவோ அல்லது காலை நேர டிபன் ஆகவோ கொடுக்கலாம். குழந்தைகளுக்கு தயிர், கேரட், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளுடன் ஒரு சத்தான ஸ்நாக்ஸ் கொடுத்தது போன்ற திருப்தி நமக்கு ஏற்படும். மேலும் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமான உணவு வேண்டுமென்றால் ஹோட்டலுக்கு செல்லாமல் அம்மாவிடமே கேட்கலாம் என்ற மகிழ்ச்சியும் ஏற்படும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Vegetable Sandwich in Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சாண்ட்விச் செய்வதற்கு எந்த பிரட் சரியாக இருக்கும்?
உங்கள் சுவைக்கு ஏற்றவாறு வெள்ளை பிரெட், முழு கோதுமை பிரட் போன்ற எந்த வகையாக பிரட் ஆக இருந்தாலும் அதனை வைத்து சாண்ட்விச் செய்யலாம்.
சிறு குழந்தைகளுக்கு பிடித்தவாறு சாண்ட்விச் எப்படி செய்வது?
நீங்கள் சிறு குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு பழங்களை நறுக்கி சாண்ட்விச்சின் மேலே தூவலாம்.
சாண்ட்விச்னை மேலும் ஆரோக்கியமாக கொடுக்க என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் குழந்தைகளுக்கு மேலும் ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் புரோட்டீன்கள் நிறைந்த கடலை பருப்பு, பாதாம் முந்திரி போன்ற நட்ஸ்களை மேலே தூவி கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு தயிர் எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
குழந்தைகளுக்கு எப்பொழுது திட உணவு கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ அப்பொழுது இருந்தே தயிரை தாராளமாக கொடுக்கலாம். பொதுவாக ஆறு மாதம் முடிந்தவுடன் திட உணவு ஆரம்பிப்போம் அப்பொழுதே குழந்தைகளுக்கு சுடு சாதத்தில் தயிரை சேர்ந்து பிசைந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
சுவையான ஆரோக்கியமான தயிர் சாண்ட்விச்
Ingredients
- பிரட் துண்டுகள்-2
- தயிர்- அரைகப்
- துருவிய கேரட்-கால் கப்
- பொடியாக நறுக்கியவெள்ளரிக்காய் -கால் கப்
- பொடியாக நறுக்கியவெங்காயம்- 2 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லிஇலைகள்- 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு மற்றும்மிளகுத்தூள்- சுவைக்கு ஏற்ப
- எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
Notes
- ஒரு பவுலில் கெட்டியான தயிர், துருவிய கேரட், நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகுத்தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு பிசையவும்.
- லெமன் ஜூஸ் அதற்கு மேல் ஊற்றவும்.
- உப்பு மற்றும் மிளகுத்தூளை சுவைக்கு ஏற்ப மேலே தூவவும்.
- பிரட் துண்டுகளை எடுத்து அதற்கு மேல் தயார் செய்து வைத்த தயிர் கலவையை தடவி அதற்கு மேல் இன்னொரு பிரட் துண்டை வைக்கவும்.
- சாண்ட்விச் இதமாக வேண்டும் என்று நினைத்தால் லேசாக கடாயில் பட்டர் ஊற்றி சூடேற்றி சாப்பிடலாம்.
- பிரட் தூண்டினை நீங்கள் விருப்பப்பட்டவாறு பாதியாக கட் செய்து சாண்ட்விச்னை சுவைத்து மகிழலாம்.
Leave a Reply