Walker
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு வாக்கர் ஏன் பயன்படுத்த கூடாது?
கைகளை தூக்கிக் கொண்டு, மிளிரும் கண்களோடு, தத்தி தத்தி குழந்தைகள் நடந்து வருவதே அழகுதான். தங்கள் மடியில் தவழ்ந்த குழந்தை தானாகவே நடக்கத் தொடங்கும் சாகசத்தை பார்க்கும் ஆர்வம் பெற்றோருக்கும் அதிகம். இந்த அதீத ஆர்வத்தின் வெளிப்பாடுதான் பேபி வாக்கர்.
குழந்தைகள் தவழ ஆரம்பித்த உடனே அவர்களை தரையிலிருந்து வாக்கருக்கு மாற்றி விடும் அவசரம் சரி தானா? மற்ற குழந்தைகளை விட வாக்கர் பயன்படுத்தும் குழந்தைகள் உண்மையிலே வேகமாக நடந்து விடுவார்களா? வாக்கர் பயன்படுத்துவதால் குழந்தைகளின் வளர்ச்சியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா? வாக்கர் குறித்த கேள்விகளுக்கு விடைக் காணலாம்.
இயற்கையான நடைக்கு செயற்கையான வாக்கர் அவசியமா?
ஒவ்வொரு குழந்தையும் பிறந்தது முதல் வளர்ச்சியின் ஒவ்வொரு பருவத்திலும் எதை எப்போது செய்ய வேண்டும் என்பது உடலியல் ரீதியாக முன்பே தீர்மானிக்கப்படும். இது இயற்கை. உடலியக்கங்கள் இயற்கையாகவே சீராக நடக்கும். சீராக நடக்க வேண்டும் என்பது அவசியமும்கூட.
தலையைத் தூக்கி பார்ப்பது, உட்காருவது, தவழுவது, நிற்பது, நடப்பது என அனைத்துமே குறிப்பிட்ட மாதங்களில்தான் நிகழும். அதற்கேற்ற மாதிரிதான் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் இருக்கும். குழந்தைகள் இயற்கையில் நடைப் பழகுவதற்கு முன்னரே வாக்கரை அறிமுகப்படுத்தும்போது அவர்களின் மூளை வளர்ச்சியானது அதற்கேற்ற முறையில் இருப்பதில்லை. இதனால் உடலுக்கும் தசைகளுக்கும் ஒருங்கிணைப்பு இல்லாமல் வேகமாக நடந்து சிறு சிறு விபத்துகள் ஏற்படும்.
தவழ வேண்டிய பருவத்தில் தவழாமல் முட்டிப் போடுவது, முட்டிப் போடாமல் நடப்பது போன்ற இப்படியான செயல்முறைகளால் பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது தெரியவில்லை என்றாலும் வளர்ந்த பின்னரும் தெரிய வரலாம். Gross Motor Skills, Fine motor Skills, Language skills, Thinking Skills and Social Interaction போன்ற ஸ்கில்ஸ் ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியம். இவையெல்லாம இயல்பாக வர குழந்தையின் செயல்முறைகளான தவழுவது, முட்டிப் போடுவது, அமருவது, நடப்பது போன்ற செயல்முறைகளைத் தடுக்க கூடாது.
மேலும், வாக்கரில் நடக்கும்போது குழந்தைகள் முழு பாதத்தையும் தரையில் ஊன்றி நடப்பதில்லை. கட்டை விரல்களை வைத்து மட்டுமே நடக்கின்றனர். வாக்கரை எடுத்த பிறகும் கூட கட்டை விரல்களை மட்டுமே பயன்படுத்தும் பழக்கம் நீடிக்கும். இதனால் கால் தசைகள் இறுகி விடும்.
வாக்கர், குழந்தைகளின் கால்களின் கீழ்ப்பாகத்திலுள்ள தசைகளை மட்டுமே வலுப்படுத்தும். கால்களின் மேல் பாகத்தையோ இடுப்பில் உள்ள தசைகளையோ வலுப்படுத்தாது. ஆனால் குழந்தைகள் நன்றாக நடப்பதற்கு இடுப்பில் இருந்து கால்கள் வரையில் உள்ள தசைகள் வலுப்பட வேண்டியது மிக மிக அவசியம்.
குழந்தைகள் தானாக நடக்கத் தொடங்கினால்தான் ஒவ்வொரு முறை கீழே விழும்போதும் எழுவதற்கு முயல்வார்கள். ஆனால் வாக்கரில் இதற்கான அவசியமே இல்லை. இதனால் வாக்கர் இல்லாமல் நடந்தால் உடலின் நிலைத்தன்மை இல்லாமல் அதிகமாக கீழே விழ வாய்ப்புகள் உண்டு. இதனால், நடக்க பயம் ஏற்படலாம். நடைப் பழகுவதற்கும் தாமதமாகும்.
வாக்கரில் நிற்கும் நிலையோ உட்காரும் நிலையோ குழந்தைக்கு அசௌகரியத்தைத் தரும்.
வேகமாக ஓடி வாக்கருடன் படிகளில் உருண்டு விழுவது, சுவரில் முட்டிக் கொள்வது போன்ற அபாயங்களும் அதிகம்.
குழந்தைக்கு நடக்கும் பருவம் வந்ததும் முன்பு நாம் பயன்படுத்திய நடைவண்டி நல்ல சாய்ஸ். அதில் வேகமும் கிடையாது வாக்கரில் இருக்க கூடிய ஆபத்துகளும் கிடையாது. அதைப் பயன்படுத்துவது நல்லது.
குழந்தை நடக்கும் பருவத்துக்கு வந்த பிறகு நீங்கள் குழந்தையின் கைவிரல்களைப் பிடித்து மெதுவாக நடக்க விடுங்கள். முதல் நாள் 4 நிமிடம், இரண்டாம் நாள் 5 நிமிடம் எனப் பழக்கப்படுத்துங்கள். குறைந்தது 10 நிமிடங்கள் வரை குழந்தையை நடக்க பழக்கலாம். அதற்கு மேல் அவர்களே பழகி கொள்வார்கள்…
குழந்தையின் ஒவ்வொரு பருவமும் மிகவும் முக்கியம். அதை அவர்கள் சரியாக கடக்க அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளும், உங்களின் அன்பையும் கொடுத்து அவர்களை ஆரோக்கியமான வழியில் வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply