walnut milkshake: குழந்தைகளை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட வைப்பதற்குள் நாம் ஒரு வழியாகி விடுவோம். அவர்களுடன் ஒரு குட்டி போராட்டமே நடத்த வேண்டியது இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் அதை குழந்தைகளுக்கு பிடித்தவாறு செய்து கொடுத்தால் நாம் சிரமப்பட வேண்டிய தேவையில்லை. அப்படி ஒரு டேஸ்டியான ரெசிபி தான் இந்த கேரட் வால்நட் மில்க் ஷேக்.
சுவை நிறைந்த இந்த மில்க் ஷேக்கினை குழந்தைகளுக்கு காலை உணவாக தரலாம்.தற்பொழுது கோடை காலமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை மதிய நேரத்தில் சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.
கேரட் மட்டும் வால்நட் இவை இரண்டுமே தனித்தனியாக சுவை மிக்கவைதான் இவற்றுடன் பால் மற்றும் பேரிச்சை சேர்த்து கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
நமக்கும் காய், பழம், நட்ஸ் இவை அனைத்தையும் ஒரே ரெசிபியில் கொடுத்த திருப்தி இருக்கும்.
walnut milkshake:
கேரட் மட்டும் வால்நட்டின் நன்மைகள்
- கேரட்டில் இயற்கையாகவே வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் பார்வை திறன், தோல் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆகியவற்றை வலுவாகக் கூடியது.
- வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததாகும்.
- எனவே குழந்தைகளின் கற்றல் திறனை அதிகரிக்க கூடியது.
- கேரட்டில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் உணவினை எளிதாக செரிமானமடைய செய்கின்றது.
- மேலும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- கேரட்டில் ஆன்டி-ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வல்லது.
- கேரட், வால்நட், மில்க் ஷேக் போன்றவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் நாள் முழுதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியினை தரவல்லது.
- மேலும் இதில் புரோட்டின் சத்துக்கள் அதிகம் இருப்பதால் தசையினை வலுவடையச் செய்கின்றது.
எனவே இந்த சுவையான கேரட் வால்நட் மில்க் ஷேக் ஆனது குழந்தைகளை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு அல்லாமல் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான உணவினை உட்கொண்ட மகிழ்ச்சியையும் கொடுக்கும்.
walnut milkshake
- கேரட் (தோல் நீக்கி சீவியது)-1
- வால்நட்- கால் கப்
- பால் -1 கப்
- பேரிச்சை- 2
- ஏலக்காய் தூள்-இம்மியளவு.
walnut milkshake
செய்முறை
1.கொட்டை நீக்கிய பேரிச்சை மற்றும் வால்நட் இவை இரண்டையும் அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
2.மிக்ஸியில் துருவிய கேரட், வால்நட், பேரிச்சை மற்றும் ஏலக்காய் தூள் இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
3.ஒன்றாக அரைத்து பின்பு தேவையான அளவு பால் சேர்த்து பின்பு மீண்டும் நைசாக அரைக்கவும்.
4.மில்க் ஷேக்கினை டம்ளரில் ஊற்றி அதன் மேல் நட்சினை தூவவும்.
walnut milkshake:
குழந்தைகளுக்கு பிடிக்கும் என்றால் தேன் சேர்த்தும் கொடுக்கலாம். ஆனால் ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு அதனை கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஹெல்த்தியான கேரட் வால்நட் மில்க் ஷேக் ரெடி.
இதில் பால் சேர்த்துள்ளதால் இந்த மில்க் ஷேக் ஆனது ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது.
மேலும் இதில் கேரட் ,வால்நட், பால் போன்றவை சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் ஆகியவற்றினை கொடுக்கின்றது.
மேலும் இதில் வைட்டமின் ஏ ,ஒமேகா கொழுப்பு அமிலங்கள், பைபர், ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் புரோட்டின் ஆகியவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் சத்தானதாகும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு வால்நட் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
வால்நட்டில் மீன்களில் இருக்கக்கூடிய ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியினை அதிகரிக்க கூடியது.
கேரட் மில்க் ஷேக்கினை எப்பொழுது கொடுக்கலாம்?
கேரட் மில்க் ஷேக்கில் பால் சேர்த்துள்ளதால் ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்றது.
கேரட்டினை குழந்தைகளுக்கு எப்பொழுது அறிமுகப்படுத்தலாம்?
கேரட்டினை ஆவியில் வேகவைத்து மசித்து ஆறு மாத காலம் முடிவடைந்த உடன் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
வால்நட்டினை எப்பொழுது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு பொதுவாக நட்ஸினை பவுடராக செய்து 8 மாதத்திற்கு மேல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
ஆனால் வால்நட்டானது சில குழந்தைகளுக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும் என்பதால் முதலில் அலர்ஜி ஏற்படுகிறதா என்று சரி பார்த்துக் கொண்டு பின்பு கொடுப்பது சிறந்தது.
கேரட் வால்நட் மில்க் ஷேக்
Ingredients
- கேரட்(தோல் நீக்கி சீவியது)-1
- வால்நட்- கால் கப்
- பால்-1 கப்
- பேரிச்சை-2
- ஏலக்காய் தூள்-இம்மியளவு
Notes
- கொட்டை நீக்கிய பேரிச்சை மற்றும் வால்நட் இவை இரண்டையும் அரை மணி நேரத்திற்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
- மிக்ஸியில் துருவிய கேரட், வால்நட், பேரிச்சை மற்றும் ஏலக்காய் தூள் இவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
- ஒன்றாக அரைத்து பின்பு தேவையான அளவு பால் சேர்த்து பின்பு மீண்டும் நைசாக அரைக்கவும்.
- மில்க் ஷேக்கினை டம்ளரில் ஊற்றி அதன் மேல் நட்சினை தூவவும்.
Leave a Reply