Wheat Apple Halwa in Tamil: குழந்தைகளுக்கான சர்க்கரை சேர்க்காத ஆரோக்கியமான அல்வா ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அல்வா என்றாலே நம் அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும்.வாயில் இட்டவுடனே நாவிற்கு சுவை சேர்த்து தொண்டையில் நழுவி செல்லும் அல்வாவை விரும்பாதவர்களே கிடையாது.ஆனால் இத்தனை சுவை மிகுந்த அல்வாவை நம்மால் மட்டுமே சுவைக்க இயலும்.ஆறு மாதத்திலிருந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க இயலாது.ஏனென்றால் அதில் அதில் சர்க்கரை கலந்திருக்கும்.அதே சமயம் அல்வாவிற்கு மாற்றாக சர்க்கரை சேர்க்காமல் ஏதாவது இனிப்பு கொடுக்க வேண்டுமென்று நினைத்தால் கோதுமை ஆப்பிள் அல்வா செய்து கொடுக்கலாம்.
இனிப்பு சுவைக்காக சர்க்கரைக்கு பதில் ஆப்பிள் கூழ் சேர்த்துள்ளேன்.உலர் தானியங்களை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படும் என்பதால் டிரை ஃபுரூட்ஸ் பவுடர் சேர்த்துள்ளேன். கோதுமை ரவை மற்றும் ஆப்பிள் கூழ் கலந்த எளிமையான அல்வா எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உணவில் எப்போது எப்படி மசாலாவை சேர்க்கலாம்?
Wheat Apple Halwa in Tamil
- கோதுமை ரவை – 3 டே.ஸ்பூன்
- ஆப்பிள் கூழ்- 1 டே.ஸ்பூன்
- நெய் – 1 டீ.ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் – இம்மியளவு
- ட்ரை ஃபுரூட்ஸ் பவுடர்– 1 டீ.ஸ்பூன்

மை லிட்டில் மொப்பெட் ட்ரை ஃபுரூட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
செய்முறை
1.குக்கரை அடுப்பில் வைத்து 1 டீ.ஸ்பூன் நெய்யை எடுத்து கொள்ளவும்.

2. கோதுமை ரவையை அதில் போட்டு சில நிமிடங்களுக்கு வறுக்கவும்.

3.வறுத்த ரவையில் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கிளறவும்.

இதையும் படிங்க: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
4.குக்கரை மூடி 2-3 விசில் வைக்கவும்.

5.குக்கரை திறந்ததும் ரவை நன்றாக வெந்துள்ளதா என்று பார்க்கவும்.

6.வெந்த கோதுமை ரவையை நன்றாக மசிக்கவும்.
7.ஆப்பிள் கூழை அதனுடன் சேர்க்கவும்.

8.ட்ரை ஃபுரூட்ஸ் பவுடர் சேர்க்கவும்.( 8 மாத குழந்தைகளுக்கு மேல் சேர்க்கலாம்)

9.கடைசியாக ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

10.நன்கு கலக்கவும்.

11. சத்தான டேஸ்டியான கோதுமை ஆப்பிள் அல்வா ரெசிபி ரெடி

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடமே செல்ல வேண்டாம் என்ற பழமொழிக்கிணங்க எண்ணற்ற நற்குணங்களை உள்ளடக்கியது ஆப்பிள்.இது குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்களை உள்ளடக்கியது.மேலும் கோதுமை ரவையில் குழந்தைகளுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் எளிதாக செய்து முடிக்க கூடிய சத்தான ரெசிபி.என்ன அம்மாக்களே! நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த சத்தான அல்வாவை செய்து கொடுக்க ரெடி ஆகிவிட்டீர்கள்தானே?

Leave a Reply