Wheat Noodles in Tamil: பொதுவாக எல்லா குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றாலே மிகவும் பிடிக்கும். ஆனால் நூடுல்ஸில் குழந்தைகளின் உடல் நலனுக்கு கேடான மைதா கலந்துள்ளது, மெழுகு பூசப்பட்டுள்ளது மற்றும் அதில் உள்ள மசாலாக்களில் பிரசர்வேட்டிவ்ஸ் கலந்துள்ளது என குழந்தைகளுக்கு நாம் நூடுல்ஸ் வாங்கி தருவதற்கு யோசிப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எப்பொழுதாவது குழந்தைகள் குழந்தைகள் அழுது அடம் பிடிக்கும் பொழுது அரிதாக மட்டுமே நம் மனதிற்கு ஒப்பாமல் செய்து கொடுப்போம். இதற்காக ஏதேனும் வழி சொல்லுங்களேன் என பல அம்மாக்கள் என்னிடம் கேட்டதுண்டு.
அதற்காகவே தான் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் வீட்(கோதுமை) நூடுல்ஸ், மல்டி மில்லட்(சிறு தானியங்கள்) நூடுல்ஸ், சோயா நூடுல்ஸ், திணை நூடுல்ஸ், சிவப்பு அரிசி நூடுல்ஸ் ,கொள்ளு நூடுல்ஸ், சாமை நூடுல்ஸ், வரகு நூடுல்ஸ் போன்ற பல்வேறு வகையான நூடுல்ஸ்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறோம்.
இதில் எல்லாம் மைதா சேர்க்கவில்லை என்பதே தனிச்சிறப்பு. எனவே இனி குழந்தைகள் நூடுல்ஸ் கேட்டால் நீங்கள் பயப்படாமல் செய்து கொடுக்கலாம். நாம் சாதாரண நூடுல்ஸ் சென்றால் தண்ணீரை கொதிக்க வைத்து அப்படியே எடுத்து விடுவோம்.
இந்த நூடுல்ஸ்களை எப்படி செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். அதனால் தான் கோதுமை நூடுல்ஸ் வைத்து உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக எப்படி ரெசிபி செய்து கொடுப்பது என்பதை நாம் இப்பொழுது பார்க்கலாம்.
Wheat Noodles in Tamil:
![Wheat Noodles in Tamil Wheat Noodles in Tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2025/02/fb-tamil-8.jpg)
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- கோதுமையில் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாது.
- மற்ற நூடுல்ஸ்களில் எல்லாம் மைதா சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் மைதா சிறிதளவும் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு தைரியமாக கொடுக்கலாம்.
- உடலுக்கு நன்மை அளிக்கும் வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ள இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் பி போன்றவை இதில் காணப்படுகின்றன.
- கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றது.
- நார்சத்து மற்றும் புரோட்டின் நிறைந்துள்ளதால் சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய திருப்தியை தருவதால் குழந்தைகளுக்கு கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கும். எனவே உடல் எடையும் அதிகரிக்காது.
- எல்லாவற்றிற்கும் மேலாக எந்தவிதமான பிரசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படவில்லை என்பதால் இதை தைரியமாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Wheat Noodles in Tamil:
- காலிபிளவர் இதழ்கள்- 1 கப்
- நறுக்கிய கேரட்- 1
- நறுக்கிய தக்காளி-1
- கடலை எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்
- மை லிட்டில் மொப்பெட் கோதுமை நூடுல்ஸ்– 1 கப் (வேகவைத்தது)
- மிளகு- அரை டீஸ்பூன்
- வெண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
Wheat Noodles in Tamil:
செய்முறை
- கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காலிபிளவர் இதழ்கள், கேரட் மற்றும் தக்காளி சேர்க்கவும்.
2.மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
3.காய்கறிகளை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
4.திரும்பவும் கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து அரைத்த காய்கறி மசியலை சேர்த்து கலக்கவும்.
5.வேகவைத்து எடுத்துக் கொண்ட நூடுல்ஸ் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
6.நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை மேலே தூவும்.
7.காய்கறிகளை முழுமையாக வேக வைக்காமல் இப்படி அரைத்து சேர்த்தால் காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளை சாப்பிட வைக்கலாம். குழந்தைகள் காய்கறிகள் சாப்பிடுவார்கள் என்றால் நீங்கள் காய்கறிகளை மிக்ஸியில் அரைக்காமல் வதக்கியவுடன் அதனுடன் நூடுல்ஸ் சேர்த்து கொடுக்கலாம்.
மேலும் இந்த நூடுல்ஸ் மைதா மற்றும் எந்தவிதமான பிரசர்வேட்டிவ்ஸ் சேர்க்கப்படாதது என்பதால் நீங்கள் வாரம் ஒரு முறையோ அல்லது இரண்டு வாரத்துக்கு ஒரு முறையோ குழந்தைகளை விருப்பப்படி செய்து கொடுக்கலாம்.
Wheat Noodles in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு எந்த வயதில் இருந்து நூடுல்ஸ் கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த கோதுமை நூடுல்ஸ் கொடுக்கலாம். அதற்கு முன்னால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தொண்டையில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது என்பதால் கொடுக்க வேண்டாம்.
இந்த நூடுல்ஸ் ரெசிபியினை மேலும் ஆரோக்கியமாக எப்படி கொடுக்கலாம்?
நீங்கள் மேலும் ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தால் கேரட், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் கீரை ஆகியவற்றை சேர்த்து கொடுக்கலாம்.
இதனுடன் சாஸ் சேர்த்து கொடுக்கலாமா?
நீங்கள் விருப்பப்பட்டால் வீட்டிலேயே தயாரித்த தக்காளி சாஸ் கொடுத்துக் கொள்ளலாம்.
ஆரோக்கியமான வெஜிடபிள் கோதுமை நூடுல்ஸ்
Ingredients
- காலிபிளவர் இதழ்கள்- ஒரு கப்
- நறுக்கிய கேரட்- ஒன்று
- நறுக்கிய தக்காளி-1
- கடலை எண்ணெய்- ஒரு டேபிள் ஸ்பூன்
- மை லிட்டில் மொப்பெட் கோதுமை நூடுல்ஸ்- ஒரு கப் வேகவைத்தது
- மிளகு- அரை டீஸ்பூன்
- வெண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
Notes
மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
காய்கறிகளை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
திரும்பவும் கடாயில் சிறிதளவு பட்டர் சேர்த்து அரைத்த காய்கறி மசியலை சேர்த்து கலக்கவும்.
வேகவைத்து எடுத்துக் கொண்ட நூடுல்ஸ் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
நறுக்கி வைத்த கொத்தமல்லி இலைகளை மேலே தூவும்.
Leave a Reply