Wheat Strawberry Banana Pancake in Tamil: நம் குழந்தைகளை காலை உணவு சாப்பிட வைப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடுவோம்.வழக்கமாக கொடுக்கும் இட்லி,தோசையினை கொடுக்கும்பொழுது “அம்மா போர் அடிக்குதும்மா” என்று சொல்லாத குழந்தைகள் இல்லை.உங்கள் குழந்தைகள் காலை உணவினை விரும்பி ருசித்து சாப்பிட வேண்டுமா? அதற்கு பான்கேக்தான் சரியான தேர்வாக இருக்கும்.அதிலும் கோதுமை ஸ்ட்ராவ்பெரி மற்றும் வாழைப்பழம் கலந்த பான்கேக் குழந்தைகளுக்கு சத்தான காலைஉணவாக இருக்குமென்பதில் ஐயமில்லை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Wheat Strawberry Banana Pancake in Tamil
- கோதுமை மாவு – 1 கப்
- பேக்கிங் பவுடர் – 1 டீ. ஸ்பூன்
- பேக்கிங் சோடா – ½ டீ. ஸ்பூன்
- உப்பு- இம்மியளவு
- வாழைப்பழம்-2
- ஸ்ட்ராவ்பெரிஸ்-10
- முட்டை -1
- மோர் – 1 கப்
- வெண்ணிலா எசென்ஸ் – 1 டே.ஸ்பூன்
- கோகனட் சுகர்- 1 டே.ஸ்பூன்.
இதையும் படிங்க : பச்சைப்பயறு கம்பு தோசை
கோதுமை ஸ்ட்ராவ்பெரி பனானா பான்கேக்
செய்முறை
1.கோதுமை மாவுடன் உப்பு , பேக்கிங் பவுடர் , பேக்கிங் சோடா ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஓரமாக வைக்கவும்.
2.மிக்சியில் ஸ்ட்ராவ்பெரி பழங்கள் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து அரைக்கவும்.
3.அதனுடன் முட்டை மோர் , வெண்ணிலா எசென்ஸ் மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.
4.ஒரு நிமிடத்திற்கு அரைக்கவும். கலவை நீர்த்து போய் இருக்கும். அதனால் சிறிதளவு மாவு சேர்த்து கலக்கவும்.
5.நான்ஸ்டிக் பானை அடுப்பில் வைத்து எண்ணெய் அல்லது வெண்ணெய் தடவவும்.
6.1/4 கப் மாவினை பானில் ஊற்றி கீழே காட்டியுள்ளவாறு கரண்டியால் பரப்பவும்.
7.மாவு வெந்து பபுள்ஸ் வரும்வரை காத்திருக்கவும்.
8.கரண்டியால் திருப்பி போடவும்.
9.ப்ரவுன் நிறத்திற்கு வரும்வரை காத்திருக்கவும்.
10.உங்கள் குழந்தைகள் விரும்பினால் நீங்கள் விருப்பப்படும் ஷேப்பில் கட் செய்து கொள்ளலாம்.
11.குழந்தைகளுக்கு தேன் ஊற்றி கொடுக்கலாம் அல்லது கிரீம் சேர்த்து கொடுக்கலாம்.
12.ஸ்ட்ராவ்பெரிக்கு பதிலாக எந்த பழம் சீசனில் உள்ளதோ அந்த பழத்தினை கொடுக்கலாம்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு உண்டாகும் வறட்டு இருமலுக்கான வீட்டு மருத்துவம்
நன்கு பழுத்த வாழைப்பழமாக இருந்தால் வாழைப்பழத்தின் இனிப்பு சுவையே போதுமானது , சர்க்கரை சேர்க்க தேவையில்லை.கோகொனட் சுகர்க்கு பதிலாக நாட்டு சர்க்கரை அல்லது டேட்ஸ் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply