Strawberry Puree for 6 Months Babies: ஆறு மாத காலம் ஆரம்பித்துவிட்டால் குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பேரிக்காய் கூழ்,வாழைப்பழ கூழ்,தர்பூசணி பழக்கூழ் என கொடுப்பதற்கேற்ற பல வகையான கூழ் வகைகளை நாம் பார்த்துவிட்டோம்.இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கேற்ற மற்றுமொரு ஹெல்தியான,டேஸ்டியான மற்றும் கலர்ஃபுல்லான ரெசிபிதான் இந்த ஸ்ட்ராவ்பெரி பழக்கூழ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு ஸ்ட்ராவ்பெரி பிளேவர் என்றல் மிகவும் பிடிக்கும்.அதுவும் இதுவரை இனிப்பு சுவையுள்ள பழங்களை ருசித்த குழந்தைகளுக்கு இனிப்பும்,புளிப்பும் கலந்த இந்த சுவையானது கண்டிப்பாக பிடிக்காமல் இருக்காது.இதன் நறுமணமும் பிளேவரும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.சுவை மட்டுமல்லாமல் எண்ணற்ற சத்துக்களையும் உள்ளடக்கியது ஸ்ட்ராவ்பெரி.
ஸ்ட்ராவ்பெரி நன்மைகள்:
- ஸ்டாபெரியில் வைட்டமின்-சி சத்துக்கள் அதிகமாக உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கவல்லது.
- பைபர்,மாங்கனீசு,பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிகமாக உள்ளன.
குழந்தைகளுக்கான ஸ்ட்ராவ்பெரி மசியல்
Strawberry Puree for 6 Months Babies:
தேவையானவை
- ஸ்ட்ராவ்பெரி
குழந்தைகளுக்கான ஸ்ட்ராவ்பெரி மசியல்
செய்முறை
1.ஸ்ட்ராவ்பெரியினை நன்றாக கழுவவும்.
2.மேலே உள்ள அரும்புகளை சுத்தம் செய்யவும்.
3. 3-5 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
4.கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
5.ஸ்ட்ராவ்பெரி மசியல் ரெடி.
குழந்தைகளுக்கு முதலுனவினை அறிமுகபடுத்திய பின்பு இந்த ஸ்ட்ராவ்பெரி பழக்கூழினை கொடுக்கலாம்.சிலருக்கு அலர்ஜியினை ஏற்படுத்தும் என்பதால் முதலில் சிறிதளவு கொடுத்த பின்னர் சிறிதுசிறிதாக அதிகப்படுத்தலாம்.முதலில் ஒரு ஸ்பூன் கொடுத்து பார்த்து விட்டு பின்பு படி படியாக 2 ஸ்பூன் மற்றும் 3 ஸ்பூன் என அதிகப்படுத்தலாம்.குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்கும்பொழுது மூன்று நாள் விதிமுறையினை பயன்படுத்துவது நல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply