Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இனிப்பு என்றால் அலாதி பிரியம்.நாம் நினைத்தால் வித விதமான இனிப்பு வகைகளைசாப்பிட முடியும்.ஆனால் குழந்தைகளுக்கு அப்படியல்ல.ஒரு வயதிற்கு முன்னால் பால்,சர்க்கரை முதலிய கண்டிப்பாக சேர்க்க கூடாது.ஆனால் இவை எல்லாம் இல்லாமல் இனிப்புகள் சாத்தியமில்லை என்று எண்ணுகிறீர்கள் அப்படித்தானே? அப்படியென்றால் அதற்கான தீர்வுதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.8 மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கான ஸ்பெஷல் இனிப்பு ரெசிபிதான் இந்த ராகி வாழைப்பழ அல்வா.சர்க்கரைக்கு பதிலாக வாழைப்பழம் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.இதை நாம் எளிதாக செய்ய முடியும் என்பதே இதன் மற்றொரு சிறப்பு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Kulanthaikalukkana Ragi Vazhaipala Alva in Tamil
- ராகி மாவு – 2 டே.ஸ்பூன்
- மசித்த வாழைப்பழம் – ½
- தண்ணீர் – 1 கப்
- நெய் – 1 டீ.ஸ்பூன்
இதையும் படிங்க: பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டியவை…மற்றும் தவிர்க்க வேண்டியவை…
செய்முறை
1.ஒரு பானில் 2 டே.ஸ்பூன் ராகி பவுடருடன் 2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலக்கவும்.
2.பாத்திரத்தை மிதமான மிதமான தீயில் சூடுபடுத்தவும்.கலவையை கட்டிகள் இல்லாமல் 2-3 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.
3.கலவையில் நெய் சேர்க்கவும்.ஒரு கிளறு கிளறி மசித்த வாழைப்பழத்தை சேர்க்கவும்.
4.மேலும் 1-2 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நன்கு கிளறவும்.அடுப்பை அணைக்கவும்.
5.இளஞ்சூட்டுடன் குழந்தைக்கு பரிமாறவும்.
இதையும் படிங்க: சத்தான பேரிச்சம்பழம் எள் லட்டு
குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய மிகவும் சத்தான மற்றும்எளிமையான ரெசிபி இந்த ராகி வாழைப்பழ அல்வா.குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியோர்களும் சாப்பிடக்கூடிய சத்தான ரெசிபி.
- ராகியில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால் குழந்தைகளின் எலும்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.
- உடலில் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
- வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.
- வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலை உடனடியாகக் கொடுக்கும்.
Leave a Reply