Kosuvai Viratum Iyarkai Valigal: மழைக்காலம் வந்தாலே கொசுக்களின் ஆதிக்கம் அதிகரித்து விடும்.மனிதர்களுக்கு வரும் வித விதமான காய்ச்சல்களுக்கு கொசுக்கள் முக்கிய காரணியாக அமைகின்றது.மேலும் டெங்கு,மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்களை பரப்புவது கொசுக்கள் மட்டுமே.இவற்றிலிருந்து குழந்தைகளை காப்பதே நமக்கு பெரிய சவால்.வீட்டில் நாம் கொசுக்களை விரட்ட பல வகையான செயற்கை விரட்டிகள்,கிரீம்கள் ஆகியவற்றை பயன்படுத்தினாலும் அவற்றில் கலந்துள்ள ரசாயனங்கள் நம் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்பது மறுக்கமுடியாத உண்மை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ரசாயனம் கலந்த வாயுக்களை நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கே தெரியாமல் பல்வேறு விதமான உபாதைகளை ஏற்படுத்துகின்றன.இதற்கு வேற என்ன மாற்று வழி? இந்த கொடிய கொசுக்களிடமிருந்து என் குழந்தைகளை காப்பது எப்படி என்று நீங்கள் சிந்தித்தால் இதோ உங்களுக்கான இயற்கையான வழிமுறைகள்.இதை நாம் பயன்படுத்துவதால் ஒரே கல்லில் மூன்று மாங்காய். ஆம்! கொசுக்களை விரட்டலாம்,உடல் உபாதைகளை தவிர்க்கலாம் மேலும் நம் மாத பட்ஜெட்டில் பெரும் பணத்தை சேமிக்கலாம். வாருங்கள்!இப்பொழுது நாம் கொசுக்களை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளை பார்க்கலாம்.
Kosuvai Viratum Iyarkai Valigal:
வேம்பு
கொசுக்களை இயற்கையாக விரட்டுவதில் முதன்மையான பங்கு வேப்பிலைக்கு உண்டு.வேம்பில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு தன்மை அதிகமிருப்பதால் இது இயற்கை கொசு விரட்டியாக பயன்படுகின்றது.வேப்ப எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தின் மீது தடவும் பொழுது கொசுக்கள் அண்டாது.குழந்தைகள் வெளியில் விளையாட செல்லும் பொழுது கொசுக்கள் கடிக்கும் இடத்தில இந்த எண்ணெயை பூசி அனுப்பினால் கொசுக்கள் கடிக்காது.மேலும் கொசு கடித்து தடிப்பு ஏற்பட்ட இடத்தில வேப்பிலை சாற்றை தடவினால் விரைவில் குணமாகும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல்… ஈஸி டிப்ஸ்
எலுமிச்சை
கொசுக்களுக்கு பிடிக்காத வாசனை ஒன்று எலுமிச்சை.எலுமிச்சையை பாதியாக வெட்டி அதில் கிராம்பை நட்டு வைத்தால் கொசுக்கள் அண்டாது.
துளசி
துளசியில் இயற்கையாகவே ஆன்டி பயோட்டிக் இருப்பதால் துளசி செடியை நாம் வீட்டில் வளர்க்கும் பொழுது கொசுக்கள் அண்டாது.துளசி எண்ணெயினை உடலில் பூசி கொண்டாலும் கொசுக்கள் அருகில் வராது.
பூண்டு
கொசுக்களுக்கு பிடிக்காத வாசனைகளில் ஒன்று பூண்டு வாசனை.சிறிது தண்ணீரில் பூண்டை நசுக்கி கொதிக்க வைத்து அந்த தண்ணீரை வீட்டின் அறைகளில் தெளிக்கும் பொழுது கொசுக்கள் அண்டாமல் தடுக்கலாம்.
இதையும் படிங்க : குழந்தைகளுக்கான கொத்தமல்லி தயிர் கிச்சடி
புதினா
புதினாவை தண்ணீருடன் சேர்த்து அரைத்து அந்த நீரை வடிகட்டி வீடு முழுவதும் தெளிக்கும் பொழுது கொசுக்கள் அண்டாது.கொசுக்கள் அதிகமாக கடிக்கும் இடத்தில் புதினா எண்ணெய் மற்றும் புதினா சாறு தேய்க்கும் பொழுதும் கொசுக்கள் கடிக்காது.
கற்பூரம்
ஒரு பவுலில் வெது வெதுப்பான தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு முதல் மூன்று கற்பூர வில்லைகளை போடவும்.தண்ணீர் ஆவியாகும் பொழுது அதில் வரும் கற்பூரத்தின் மணத்தால் கொசுக்கள் அண்டாது.
மூலிகை புகை
கிராம புறங்களில் பெரும்பாலும் இந்த புகையைத்தான் கொசு விரட்டியாக பயன்படுத்துவார்கள்.காய்ந்த வேப்பிலைகளை நெருப்பில் இட்டால் அதில் வரும் புகை கொசு விரட்டியாக அமையும்.ஒரு மண் சட்டியில் நெருப்பு கங்குகளை எடுத்து கொண்டு அதில் பச்சை வேப்பிலை,நொச்சி இலைகள் ஆகியவற்றை போட்டும் புகை மூட்டலாம். கற்பூரத்துடன் சிறிது சாம்பிராணியைச் சேர்த்து புகையாகப் போட்டால் கொசுக்கள் எட்டிப்பார்க்காது.
கொசுக்களை விரட்டும் செடிகள்
பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் கொசுக்கள் மற்றும் நச்சு பூச்சிகளை தவிர்க்க பல்வேறு மூலிகை செடிகளை வீட்டின் அருகில் வலது வந்தார்கள்.புதினா, கேந்தி ஆகிய செடிகளைத் தொட்டியில் வளர்த்து அவற்றை மாலை நேரங்களில் ஜன்னல்களின் அருகே வைத்தால் கொசுக்கள் வீட்டுக்குள் புகாது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களில் மாரிகோல்ட எனப்படும் மஞ்சள் சாமந்தி பூ செடியை வளர்த்தல் அந்த வாசனைக்கு கொசுக்கள் அண்டாது.
மூலிகை தைலம்
வேப்ப இலை, நொச்சி, ஆடுதொடா, குப்பைமேனி போன்ற இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்ச வேண்டும்.இந்த எண்ணெயை உடலில் பூசி கொண்டால் கொசுக்கள் பை சொல்லலாம்.
மேலே கூறப்பட்ட அனைத்து வழிமுறைகளும் கொசுக்களை ஒழிப்பதோடல்லாமல் உடலுக்கும் சருமத்திற்கும் நன்மை விளைவிப்பவை.இவை மட்டுமல்லாமல் நம் சுற்றுப்புறத்தை கொசுக்கள் அண்டாமல் சுகாதாரமாக பராமரிப்பதும் நம் கடமையாகும்.வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் தடுப்பதும்,தண்ணீர் உள்ள தொட்டி மற்றும் குடம் போன்றவற்றை மூடி வைப்பதும் நம் கடமையாகும்.ஜன்னல்கள் வழியே கொசுக்கள் புகாமல் இருக்க வலை அமைக்கலாம்.
செயற்கை கொசுவிரட்டிகளை தவிர்த்திடுவோம்!நம் ஆரோக்கியத்தினை காத்திடுவோம்!
Leave a Reply