Pasiparuppu Ulundhu Dosai in Tamil:“தோசையம்மா தோசை! இது அம்மா சுட்ட தோசை….” என்ற மழலை பாடல் சிறு வயதிலிருந்தே நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இந்த பாடலுக்கேற்ப நம் வீடுகளில் காலை மற்றும் இரவு நேரங்களில் டிஃபன் என்றாலே பெரும்பாலும் தோசை மற்றும் இட்லியாகத்தான் இருக்கும்.சில நேரங்களில் சப்பாத்தி மற்றும் பூரியும் உண்டு.
தோசை மற்றும் இட்லி போன்றவை போர் அடிக்காமல் இருக்க நாம் வித விதமான சட்னி செய்வதுண்டு.இப்பொழுது சற்று வித்யாசமாக தோசையை மாற்றி பார்ப்போம்.ஆம்!நாம் வழக்கமாக செய்யும் அரிசி உளுந்து தோசையை காட்டிலும் சற்று வித்தியாசமானது பாசிப்பருப்பு உளுந்து தோசை.
பாசிப்பருப்பு மற்றும் உளுந்து இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமளிக்க கூடியது.எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தோசையினை உண்ணலாம்.
சத்தான பாசிப்பருப்பு உளுந்து தோசை
Pasiparuppu Ulundhu Dosai in Tamil
- நெய் – 1 டீ.ஸ்பூன்
- உளுந்து – 1 கப்
- பாசிப்பருப்பு – 1 கப்
- துருவிய கேரட் – 1/4 கப்
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
- பச்சை மிளகாய் – 1
- இஞ்சி -சிறிதளவு
- கொத்தமல்லி இலைகள் -சிறிதளவு
இதையும் படிங்க: ட்ரை புரூட்ஸ் எனெர்ஜி பார்
Pasiparuppu Ulundhu Dosai in Tamil
செய்முறை
1.பாசிப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பினை நன்றாக கழுவி 1-2 மணி நேரம் ஊற வைக்கவும்.
2.இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து ஊற வைத்த பருப்பினை மிக்சியில் அரைக்கவும்.
3.மாவினை பவுலில் ஊற்றவும்.
4.நறுக்கிய கேரட் ,வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்க்கவும்.
இதையும் படிங்க: வயிற்று போக்கிற்கான எளிய வீட்டு வைத்தியம்
5.நன்றாக கலக்கவும்.
6.தோசை சட்டியினை சூடாக்கி மாவினை ஊற்றவும்.
7.நெய் ஊற்றி இரு புறமும் பொன்னிறமாகும்வரை வார்த்து எடுக்கவும்.
8.விருப்பமான சட்னியுடன் பரிமாறவும்.
கேரட்டிற்கு பதிலாக உங்கள் குழந்தைகள் விரும்பும் காய்கறிகளை சேர்த்து நீங்கள் கொடுக்கலாம்.வழக்கமாக செய்து கொடுக்கும் தோசையை காட்டிலும் சுவையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.சுவையோடு ஆரோக்கியமும் கூடிய ரெசிபி என்றால் நாமும் மகிழ்ச்சியோடு செய்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply