Instant baby food in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் அம்மாக்களின் கவனம் முழுவதும் குழந்தைகளுக்கு சத்துள்ளதாக என்னென்ன உணவு கொடுக்கலாம் என்பதிலேயே இருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதேசமயம் அதுவரை குழந்தைகளை நெடுந்தூர பயணத்திற்கு எடுத்துச் செல்லும்போது என்ன உணவு கொடுக்கலாம் என்பதைப்பற்றி சிந்தித்து இருக்க மாட்டோம்.
ஏனென்றால் தாய்ப்பால் மட்டுமே கொடுத்தவரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவினை பற்றி நாம் கவலைப்பட்டு இருக்க மாட்டோம்.
ஆனால் திட உணவு கொடுக்க ஆரம்பித்ததும் குழந்தைகளுக்கு பயணத்தின் போது என்ன உணவு கொடுக்கலாம் என்பது பெரும் கேள்விக்குறியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கான உணவினை உடனடியாக தயாரித்துக் கொடுப்பது தான் நல்லது.
வீட்டில் நாம் காய்கறி,பழங்கள் ஆகியவற்றினை மசியலாக செய்து கொடுத்து பழக்கி இருப்போம்.ஆனால் பயணத்தின்போது இது முடியாத விஷயம்.
எனவே இன்ஸ்டன்ட் பொடியினை தயாரித்து வைத்துக்கொண்டால் நாம் பயணத்தின் போது பிளாஸ்கில் சுடுதண்ணீர் மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.
மேலும் நாம் வீட்டில் இருக்கும் போதும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வேளை உணவினை ஐந்து நிமிடத்தில் செய்து கொடுப்பதற்கு எளிதாக இருக்கும்.
குழந்தைகளுக்கு ஊட்டி ஊட்டி அலுத்துப்போன அம்மாக்களுக்கு இந்த ஒருவேளை இன்ஸ்டன்ட் உணவானது பெரும் உதவியாக இருக்கும். மேலும் அவல் பாசிப்பருப்பு பவுடரினை செய்வதும் மிக எளிது .வீட்டிலுள்ள இரண்டே இரண்டு பொருட்கள் போதும்.
Instant baby food in Tamil:
பாசிப்பருப்பு மற்றும் அவலில் உள்ள சத்துக்கள்:
அவலில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது .
மேலும் இதில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து,வைட்டமின் பி இருப்பதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரவல்லது.
பாசிபருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும்.
மேலும் இதில் புரோட்டின்,பொட்டாசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.
வைட்டமின்கள் ஏ, பி1, பி2,பி6 மற்றும் சி போன்றவையும் அதிகம் உள்ளன.
Instant baby food in Tamil:
- அவல் – 100 கிராம்
- பாசிப்பருப்பு- 30 கிராம்
செய்முறை
1.பாசிப்பருப்பை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2.பின்பு அவலினை லேசாக நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும்.
3.இரண்டையும் மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
4.பின்பு ஒன்றாக கலக்கவும்.
5.தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி பவுடர் ரெடி.
இன்ஸ்டன்ட் கஞ்சி தயாரிப்பது எப்படி?
1.ஒரு டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும்
2.அதில் நன்கு சூடான தண்ணீரை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
3.குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்காக பழக்கூழ் சேர்த்துக் கொள்ளலாம்.
4. 5 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும்.
5.குழந்தைகளுக்கு தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி ரெடி.
குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு மேல் அவல் கஞ்சியில் சுவைக்காக காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொடுக்கலாம். 8 மாத காலத்திற்கு மேல் டேட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
ஒரு வயதிற்கு பிறகு தேன் கலந்து கொடுக்கலாம். குழந்தைகளை நெடுந்தூர பயணத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லும்போது இந்த இன்ஸ்டன்ட் அவல் பாசிப் பருப்பு கஞ்சி உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம். நீங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது கருத்தினை கமெண்டில் தெரிவிக்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்?
குழந்தைகளுக்கு எந்த அவல் கொடுக்கலாம் ?
வெள்ளை மற்றும் சிவப்பு அவல் இரண்டும் கொடுப்பதற்கு ஏற்றதுதான்.ஆனால் சிவப்பு அவல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
குழந்தைகளுக்கு பாசிப்பருப்பு கொடுக்கலாமா?
பாசிப்பருப்பில் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டசத்துக்கள், வைட்டமின்கள் ஆகியவை நிறைந்துள்ளன.எனவே ஆறு மாத காலத்திற்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சத்துள்ள உணவு தான் பாசிப்பருப்பு.
கஞ்சியில் சர்க்கரை சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு கீழ் சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை சேர்க்கக்கூடாது. எனவே இனிப்புச் சுவைக்கு நீங்கள் பழக்கூழ் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு வயதிற்கு மேல் நீங்கள் நாட்டுச்சக்கரை போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
சுடு தண்ணீர் மட்டும் சேர்த்தால் போதுமானதா?
ஆம். சுடு தண்ணீரை நன்கு கொதிக்க கொதிக்க காயவைத்து பிளாஸ்கில் ஊற்றிக் கொள்ள வேண்டும். நன்கு சூடான தண்ணீரை பவுடரில் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொண்டால் போதுமானது.
குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அவல் பாசிப்பருப்பு பவுடர்
Ingredients
- அவல்- 100 கிராம்
- பாசிப்பருப்பு-30 கிராம்
Notes
பின்பு அவலை லேசாக நிறம் மாறும் அளவிற்கு வறுக்கவும். இரண்டையும் மிக்ஸியில் தனித்தனியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு ஒன்றாக கலக்கவும். தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி பவுடர் ரெடி இன்ஸ்டன்ட் கஞ்சி தயாரிப்பது எப்படி? ஒரு டேபிள் ஸ்பூன் கஞ்சி பவுடரை எடுத்துக் கொள்ளவும் அதில் நன்கு சூடான தண்ணீரை சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும் குழந்தைகளுக்கு தேவைப்பட்டால் இனிப்பு சுவைக்காக பழக்கூழ் சேர்த்துக் கொள்ளலாம் 5 நிமிடங்கள் அதனை மூடி வைக்கவும். குழந்தைகளுக்கு தேவையான இன்ஸ்டன்ட் கஞ்சி ரெடி.
Leave a Reply