Cucumber Rice: வெயில் காலத்தில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினம் என்றால் அதைவிட கடினம் அவர்களுக்கு விருப்பமான உணவுகளை சமைத்து தருவது தான். பள்ளிக்குச் செல்லும் பொழுது அவசர அவசரமாக காலை உணவு உண்டு விட்டு, நாம் கொடுக்கும் மதிய உணவை டிபன் பாக்ஸில் கொண்டு செல்வார்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதனால் நமக்கு அவ்வளவாக சிரமம் தெரியாது. ஆனால் வீட்டில் இருக்கும் பொழுது குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கு தனித்திறமை வேண்டும். குழந்தைகள் நம்மை ஹோட்டல் செஃப் ஆக மாற்றி ஒவ்வொன்றாக ஆர்டர் செய்ய ஆரம்பிப்பார்கள்.
அவர்களுக்கு பிடித்த உணவாகவும் இருக்க வேண்டும் அதேசமயம் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் உணவாகவும் இருக்க வேண்டும்.
கோடை காலத்தில் பொதுவாகவே குளிர்ச்சியான உணவுகளை தர வேண்டும். குளிர்ச்சியான உணவுகள் என்றால் குளிர்பானம், ஐஸ்கிரீம்கள் ஆகியவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவு பொருட்கள் மூலம் உடலில் குளிர்ச்சியை உருவாக்குவதே ஆரோக்கியம்.
ஆனால் அவற்றை நேரடியாக கொடுத்தால் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். மாறாக அவர்கள் விரும்பி சுவைக்கும் வண்ணம் உணவோடு சேர்ந்து கொடுத்தால் கட்டாயம் விரும்பி உண்பார்கள். அப்படி குழந்தைகளின் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய ஒரு அற்புதமான ரெசிபி தான் வெள்ளரிக்காய் எலுமிச்சை சாதம்.
வெள்ளரிக்காயை பொதுவாக வெயில் காலங்களில் அப்படியே சாப்பிடுவோம். உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காயை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். கோடை காலத்தில் எளிதில் கிடைக்கும் உணவு பொருளை வைத்து ஆரோக்கியமாக செய்து கொடுக்கக் கூடிய சிம்பிளான ரெசிபி தான் இந்த வெள்ளரிக்காய் எலுமிச்சை சாதம்.
Cucumber Rice:
Cucumber Rice:
இந்த சாதத்தை பார்ப்பதற்கு முன்னால் வெள்ளரிக்காயில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- வெள்ளரிக்காயில் கிட்டத்தட்ட 96 சதவீதம் தண்ணீர் மட்டுமே இருப்பதால் கோடை காலத்தில் உடலில் தண்ணீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும் தன்மையுடையது.
- வெள்ளரிக்காயில் இருக்கும் தண்ணீர் சத்து மற்றும் அதிகப்படியான நார் சத்துக்கள் உடலில் உணவினை நன்றாக செரிமானமடைய செய்து மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்கின்றது.
- வெள்ளரிக்காயில் உள்ள வைட்டமின் கே எலும்புகளுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் ரத்தத்தை உறைய வைக்க உதவுகின்றது. அவை மட்டுமல்லாமல் வெள்ளரிக்காயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் போலிக் ஆசிட் நிறைந்துள்ளன.
- வெள்ளரிக்காயில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சிலிக்கா போன்றவை தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. எனவே சருமத்தை வெள்ளரிக்காய் பளபளக்க செய்கின்றது.
- கடித்து சாப்பிடும் பொழுது வெள்ளரிக்காயில் உள்ள நற்குணங்கள் பற்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
Cucumber Rice:
- வெள்ளரிக்காய்- மிதமான அளவு-1
- எலுமிச்சை-1/2
- இஞ்சி- இம்மியளவு
- வத்தல்-3
- தேங்காய் துருவியது- ஒரு டேபிள் ஸ்பூன்
- புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
- சீரகம்- அரை டீஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்
- சமையல் எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
- சீரக சம்பா சாதம்- ஒரு கப்
- உப்பு- தேவையான அளவு
Cucumber Rice:
செய்முறை
- சாதத்தை முன்னரே வடித்துக் கொண்டு ஆறவிடவும்.
- மிக்ஸி ஜாரில் சீரகம், தேங்காய், வத்தல், வெள்ளரிக்காய், உத்தமபாளையம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்று இரண்டாக அடிக்கவும்.
- சிறிதளவு வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
- அதில் பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதனை சேர்த்து என்னை பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக வதக்கவும்.
- ஆற வைத்த சாதத்தில் இந்த கலவையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- சிறிதளவு லெமன் சாற்றினை ஊற்றி நன்றாக கிளறவும். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மதிய உணவு ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Cucumber Rice:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
வெள்ளரிக்காயினை குழந்தைகளுக்கு எப்பொழுது கொடுக்க ஆரம்பிக்கலாம்?
வெள்ளரிக்காய் ஆறு மாத காலத்திற்கு பின்பு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது நன்கு மசித்து கொடுக்கலாம்.
வெள்ளரிக்காய் சாதத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
இதில் உப்பு சேர்த்துள்ளதால் வருவதற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு சாதத்தை நீங்கள் கொடுக்கலாம்.
சாதத்தை எப்பொழுது வரை வைத்து இருக்கலாம்?
தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கும் என்பதால் சாதம் செய்த உடனே நீங்கள் சாப்பிட்டு முடித்து விடுவது நல்லது
இந்த சாதத்தில் வேறு காய்கறிகள் சேர்க்கலாமா?
தாராளமாக உங்கள் குழந்தைகளுக்கு பிடித்த காய்கறிகளான கேரட், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
வெயிலுக்கேற்ற வெள்ளரிக்காய் சாதம்
Ingredients
- வெள்ளரிக்காய்- மிதமான அளவு-1
- எலுமிச்சை-1/2
- இஞ்சி- இம்மியளவு
- வத்தல்-3
- தேங்காய் துருவியது- ஒரு டேபிள் ஸ்பூன்
- புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
- சீரகம்- அரை டீஸ்பூன்
- கடுகு- அரை டீஸ்பூன்
- பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்
- சமையல் எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
- சீரகச் சம்பா சாதம்- ஒரு கப்
- உப்பு -தேவையான அளவு
Notes
1.சாதத்தை முன்னரே வடித்துக் கொண்டு ஆறவிடவும். 2.மிக்ஸி ஜாரில் சீரகம், தேங்காய், வத்தல், வெள்ளரிக்காய், உத்தமபாளையம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்று இரண்டாக அடிக்கவும். 3.சிறிதளவு வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும். 4.கடாயில் எண்ணெய் ஊற்றவும். 5.அதில் பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதனை சேர்த்து என்னை பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக வதக்கவும். 6.ஆற வைத்த சாதத்தில் இந்த கலவையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். 7.சிறிதளவு லெமன் சாற்றினை ஊற்றி நன்றாக கிளறவும். 8.குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மதிய உணவு ரெடி.
Leave a Reply