oats omelette : குழந்தைகளுக்கு காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். குழந்தைகள் நாள் முழுவதும் இயங்குவதற்கு தேவையான ஆற்றல் காலை உணவில் இருந்து தான் கிடைக்கின்றது என்பதால் எல்லா சத்துக்களும் நிறைந்த உணவாக காலை உணவு அமைய வேண்டும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் நாம் அவசர அவசரமாக குழந்தைகளை பள்ளிக்கு கிளம்பி விடும்பொழுது காலை உணவாக பெரும்பாலும் இட்லி மற்றும் தோசையை தான் கொடுக்கின்றோம்.
அவ்வாறு கொடுத்தாலும் பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில் பெரும்பாலான குழந்தைகள் அரை குறையாக தான் சாப்பிடுகிறார்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் காலை உணவு எளிதாகவும் இருக்க வேண்டும் அதே நேரமும் சத்தாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இது உங்களுக்கான ரெசிபி தான்.
இன்று நாம் பார்க்க போகும் ரெசிபி சற்றே வித்தியாசமான ஓட்ஸ் ஆம்லெட். பொதுவாக ஓட்ஸ் என்றாலே பெரியவர்கள் உண்ணும் உணவு என்றுதான் நாம் நினைத்திருப்போம்.
ஆனால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கும் ஏற்ற உணவு தான் ஓட்ஸ் என்பது பலருக்கும் தெரியாது. ஆனால் அதனை கஞ்சியாக கொடுக்கும் பொழுது குழந்தைகள் கட்டாயம் சாப்பிட மாட்டார்கள். எனவே தான் வித்தியாசமாக ஆம்லெட் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இதனை குழந்தைகளுக்கு காலை உணவாகவும் பள்ளி முடித்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆகவும் கொடுக்கலாம்.

oats omelette:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கும் முன்னால் ஓட்ஸ் கஞ்சியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- குழந்தைகள் ஆற்றலுடன் இயங்குவதற்கு தேவையான எனர்ஜியை தருகின்றது.
- நார் சத்துக்கள் நிறைந்தது என்பதால் மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின் நிறைந்துள்ளதால் குழந்தைகள் தசைகள் நன்றாக வளர்வதற்கு தேவையான சத்துக்களை கொடுக்கின்றது.
- இதிலிருந்து உள்ள இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- இதில் உள்ள கால்சியம் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை வலிமையான எலும்புகளுக்கு உதவுகின்றது.
- இதில் நிறைந்துள்ள பீட்டா குழுக்கான் இதயத்தினை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றது.
- ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வல்லது.
- இவ்வாறு ஆம்லெட் ஆக மட்டுமல்லாமல் ஓட்ஸ் தானியத்தை வைத்து விதவிதமான ரெசிபிகள் செய்து கொடுக்கலாம் என்பதால் குழந்தைகளுக்கு ஏற்றது.
oats omelette:
- ஓட்ஸ் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்
- முட்டை-1
- நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள்ஸ்பூன்
- தக்காளி (பொடியாக நறுக்கியது)- 2 டேபிள்ஸ்பூன்
- கேரட் (நறுக்கியது)- 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
- எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
செய்முறை
- ஓட்சை நன்றாக பவுடர் செய்து கொள்ளவும்
- ஒரு பவுலில் முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
- அதனுடன் பவுடர் செய்த ஓட்ஸ், வெட்டி வைத்த காய்கறிகள், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பானை சூடாக்கவும். - ஆம்லெட் போன்று ஊற்றவும். பொன்னிறமானதும் திருப்பி போடவும்.
- இதில் ஓட்ஸ் மற்றும் முட்டை மட்டுமல்லாமல் காய்கறிகளும் கலந்துள்ளதால் குழந்தைகளுக்கான சத்தான காலை உணவாக இது அமையும்.
மேலும் மற்ற ரெசிபிகளை செய்வது போல் இது மிகவும் மெனக்கிடவும் தேவையில்லை. இரண்டே நிமிடத்தில் தயார் செய்து விடலாம் என்பதால் குறைவான நேரத்தில் ஆரோக்கியமான ரெசிபியை கொடுப்பதற்கு இதனை தேர்வு செய்யலாம்.
oats omelette
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
oats omelette
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எத்தனை வயதில் இருந்து இந்த ஓட்ஸ் ஆம்லெட் ரெசிபியை கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இதனை செய்து கொடுக்கலாம்.
இதனை இரவு நேரத்தில் கொடுக்கலாமா?
இது மிகவும் எளிதான உணவு என்பதால் காலை நேரத்தில் மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் கொடுக்கலாம்.
சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு இதனை எவ்வாறு கொடுப்பது?
கலர் கலரான காய்கறிகளை வெட்டி குழந்தைகளை கவரும் விதமாக ஆம்லெட்டின் மேலே தூவி கொடுக்கலாம்.
ஆரோக்கியமான ஓட்ஸ் ஆம்லெட்
Ingredients
- ஓட்ஸ் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்
- முட்டை-1
- நறுக்கிய வெங்காயம்- 2 டேபிள்ஸ்பூன்
- தக்காளி பொடியாக நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்
- கேரட் நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
- எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
Notes
ஒரு பவுலில் முட்டை சேர்த்து நன்கு கலக்கவும்
அதனுடன் பவுடர் செய்த ஓட்ஸ், வெட்டி வைத்த காய்கறிகள், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
பானை சூடாக்கவும்.
ஆம்லெட் போன்று ஊற்றவும். பொன்னிறமானதும் திருப்பி போடவும்.
Leave a Reply