Ulundhu Paal: இப்பொழுது எல்லாம் சிறிதளவு கடுமையாக வேலை செய்தாலும் அங்கங்கே இடுப்பு கைகால் என்று நமக்கு பிடிப்பு ஏற்படுகின்றது. ஆனால் அந்த காலத்தில் அவ்வளவு கடுமையான வேலைகளை நம் முன்னோர்கள் எப்படி செய்தார்கள் என்று ஒரு நிமிடம் நாம் அனைவரும் நினைத்துப் பார்ப்பது உண்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்பொழுதெல்லாம் விதவிதமான ஹெல்த் ட்ரிங்க்கள், வைட்டமின் மாத்திரைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இல்லாத காலத்திலேயே நம் முன்னோர்கள் வலுவான உடல் அமைப்புடன் வாழ்ந்தார்கள்.
எலும்புகளுக்கு வலுக்கொடுப்பதற்கு நம் முன்னோர்கள் உணவு பட்டியலில் தவறாமல் அடிக்கடி சேர்த்துக் கொண்ட உணவு என்று சொன்னால் அது உளுந்து என்று தான் சொல்லலாம். நம் எலும்புகளுக்கு தேவையான கால்சியத்தை அழிப்பதில் உளுந்துக்கு முக்கிய பங்கு உண்டு.
எனவேதான் அதன் அருமை தெரிந்து பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒரு முறை உளுந்தங்களி செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் களி என்றால் சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவ்வாறென்றால் உளுந்தை குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்பதற்கான மாற்று ரெசிபி தான் இந்த உளுந்து பால்.
திரவ வடிவில் இருப்பதால் குழந்தைகளை எளிதாக குடிக்க வைக்க முடியும். மேலும் இதில் தேங்காய் பால், சர்க்கரை போன்றவை சேர்த்துள்ளதால் சுவையும் நன்றாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். இந்த ஆரோக்கியமான உளுந்து பாலை குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் சத்து கிடைக்கும்.
Ulundhu Paal:
உளுந்து பால் ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் உளுந்தில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Ulundhu Paal

- உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களுக்கு தேவையான கால்சியம் சத்தை உளுந்து கொடுக்கின்றது.
- இதில் புரோட்டின் சத்து அதிகம் என்பதால் தசைகளுக்கு தேவையான புரோட்டினை அளித்து உடல் எடை ஆரோக்கியமாக அதிகரிப்பதற்கு உதவுகின்றது.
- குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை அளிக்க வல்லது.
- உடலுக்கு தேவையான இரும்புச்சத்தினை உளுந்து கொடுக்கின்றது.
- எளிதாக நன்றாக வெந்துவிடும் என்பதால் குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவு ஏற்படாது.
- உளுந்தில் நிறைந்துள்ள பண்புகள் கிருமிகளை எதிர்த்து போராட உதவுகின்றது.
- உளுந்து- 2 டேபிள்ஸ்பூன்
- தேங்காய் பால்- 1 கப்
- நாட்டு சர்க்கரை- 2-3 டேபிள் ஸ்பூன்
- சுக்கு- ஒரு சிட்டிகை
- ஏலக்காய் தூள்- ஒரு சிட்டிகை
- தண்ணீர்- தேவையான அளவு
Ulundhu Paal
செய்முறை
- உளுந்தை நன்றாக கழுவ வேண்டும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நான்கு விசில் வரும் அளவிற்கு வேக வைக்க வேண்டும்.
- வேக வைத்த உளுந்தை நன்றாக மசித்து கொள்ளலாம் அல்லது மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.
- மற்றும் ஒரு கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி அழுக்கு போக வடிகட்டி எடுக்கவும்.
- சர்க்கரை பாகை உளுந்துடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- தேங்காய் பால், சுக்கு மற்றும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து சூடாக்கி பின்பு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியோர்களும் வாரம் இரு முறை இது மாதிரியான உளுந்து பால் செய்து குடித்தால் கால்சியம் சத்து குறைபாடு ஏற்படாது.
குழந்தைகளுக்கு சிறு வயது முதல் கொடுக்க ஆரம்பித்தால் பிற்காலத்தில் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம். இதில் சுக்கு மற்றும் ஏலக்காய் இரண்டும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு செரிமான தொந்தரவு ஏற்படாது.
நீங்கள் இதனை வாரம் வாரம் தவறாமல் கொடுக்கும் பொழுதே குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். குழந்தைகள் வழக்கமாக காணப்படுவதை விட ஆற்றலுடன் காணப்படுவதை நீங்களே கண்கூடாக காணலாம்.
Ulundhu Paal

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. குழந்தைகளுக்கு எத்தனை வயதிலிருந்து உளுந்து பாலை கொடுக்கலாம்?
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த உளுந்து பாலையும் கொடுக்கலாம். ஆனால் இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் தனித்தனியே ஏற்கனவே குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
2. எத்தனை முறை இதனை கொடுக்கலாம்?
வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை கொடுத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
3. தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாமா?
தேங்காய் பால் சேர்க்காமல் செய்யலாம். தேங்காய் பால் குழந்தைகளுக்கு தேவையான நல்ல கொழுப்பை கொடுக்கும் என்பதாலும், சுவையைக் கூட்டும் என்பதாலும் இதில் சேர்த்து உள்ளேன்.











Leave a Reply