Oats Milk Recipe: உங்கள் குழந்தைகள் பசும்பால் குடித்து போரடித்து விட்டதா? அப்படி என்றால் இந்த ஓட்ஸ் மில்க்கை நீங்கள் கொடுத்துப் பாருங்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சில குழந்தைகளுக்கு பசும்பால் ஒவ்வாமை இருக்கும். அப்படி இருக்கும் பொழுது அதற்கு மாற்றாக தாவரங்களிலிருந்து கிடைக்கும் பாதாம் பால், சோயா பால் மற்றும் ஓட்ஸ் பால் ஆகியவற்றை மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.
ஆனால் பாதாம் பால்,சோயா பால் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த ஓட்ஸ் மில்கினை நீங்கள் வீட்டில் எளிதாக செய்து முடிக்கலாம். இதற்கு தேவையானவை ஓட்ஸ் மட்டுமே என்பதால் ஒரு சில நிமிடங்களில் இதனை செய்து முடிக்க முடியும்.
ஓட்ஸ் பாலினை வைத்து குழந்தைகளுக்கான மில்க் ஷேக், ஸ்மூத்தி, ஸ்வீட் போன்றவை செய்யலாம். அதுமட்டுமல்லாமல் பெரியவர்கள் இதனை வைத்து டீ, காபி போன்றவற்றை செய்தும் குடிக்கலாம்.
நாம் வீட்டிலே இந்த பாலினை செய்து கொடுக்கும் பொழுது பிரசர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல் சேராமல் நம் கண் முன்னாலே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான பாலினை கொடுக்கலாம் என்பதால் பசும்பாலுக்கு மாற்றாக எளிதான தேர்வாக இது இருக்கும்.
Oats Milk Recipe
Oats Milk Recipe:
ஓட்ஸ் மில்க் ரெசிபியை பார்ப்பதற்கு முன்பாக இதில் நிறைந்திருக்கும் நன்மையை பார்க்கலாம்:

- ஓட்ஸில் பீட்டா குளுக்கோன் எனப்படும் நார்ச்சத்து காணப்படுவதால் குழந்தைகளுக்கு உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- ஓட்ஸில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் இது மெதுவாக எனர்ஜியை கொடுத்து குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்க வல்லது.
- இதில் உள்ள பீட்டா குளுக்கோன் எனப்படும் பைபர் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சரியாக வைத்திருக்க உதவுகின்றது.
- ஓட்ஸில் இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜிங்க், விட்டமின்-பி போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை இது கொடுக்கும்.
- ஓட்ஸில் நிறைந்திருக்கும் நார்ச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தியை கொடுக்கும்.
- ஓட்ஸில் இயற்கையாகவே நிறைந்திருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
Oats Milk Recipe:
- ஓட்ஸ்- 1 கப்
- குளிர்ந்த தண்ணீர்- 4 கப்
- வெண்ணிலா எசன்ஸ்- தேவைப்பட்டால்
Oats Milk Recipe:
செய்முறை
- ஓட்சினை ஒரு மணி நேரத்திற்கு ப்ரீசரில் வைக்கவும். ஃப்ரீசரில் வைத்த ஓட்சை மிக்ஸி ஜாரில் சேர்த்து குளிர்ந்த தண்ணீர் சேர்க்கவும்.
- 20 முதல் 30 நொடிகளுக்கு நன்றாக ஸ்மூத்தி போன்று அரைக்கவும்.
- காட்டன் துணியில் நன்றாக பாலை வடிகட்டவும்.
- தேவைப்பட்டால் சில துளிகள் வெண்ணிலா ட்ராப்ஸ் சேர்த்து கலக்கவும்.
- சுவையான ஹோம் மேட் ஓட்ஸ் மில்க் ரெடி.
இது நன்கு கிரீம் பதத்துடன் பசும்பால் போன்றே இன்னும் சொல்லப்போனால் அதைவிட கெட்டியாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்புவார்கள்.
மேலும் நாம் ஸ்மூத்தி மற்றும் ஐஸ்கிரீம் போன்றவை செய்யும்பொழுது பாக்கெட் பாலை வைத்து செய்வது வழக்கம். ஆனால் அவற்றில் கூட பிரசர்வேட்டிவ்ஸ் போன்றவை கலந்து இருக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால் நாம் ஓட்ஸ் பாலை சேர்க்கும் பொழுது நன்கு கெட்டியான ஐஸ்கிரீம் மற்றும் ஸ்மூத்தி போன்றவை கிடைக்கும்.
மேலும் ஒரே ஒரு பொருளான ஓட்ஸ் மட்டும் இருந்தால் போதும் வீட்டிலேயே எளிதாக தயாரித்து விடலாம்.

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1.ஓட்ஸ்பால் தயாரிக்க எந்த வகையான ஓட்டு சேர்க்க வேண்டும்?
ரோல்டு ஓட்ஸ் பயன்படுத்தும்பொழுது உங்களுக்கு நன்கு கெட்டியான பால் கிடைக்கும்.
2.எதற்கு ஓட்சை பிரீசரில் வைக்க வேண்டும்?
ஃப்ரீசரில் வைத்து மிக்ஸியில் அரைக்கும் பொழுது நன்கு கெட்டியான ஓட்ஸ்பால் கிடைக்கும்.
3.எத்தனை நாட்கள் வரை இதனை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்?
காற்று புகாத டப்பாவில் வைத்து மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.
ஹோம் மேட் ஓட்ஸ் மில்க்
Ingredients
- ஓட்ஸ்- 1 கப்
- குளிர்ந்த தண்ணீர்- 4 கப்
- வெண்ணிலா எசன்ஸ்- தேவைப்பட்டால்
Notes
சுவையான ஹோம் மேட் ஓட்ஸ் மில்க் ரெடி.

![குழந்தைகளுக்கான ஓட்ஸ் கஞ்சி [oats kanji recipe] feature](https://tamilcdn.mylittlemoppet.com/wp-content/uploads/2023/06/28131545/feature-1-150x150.jpg)









Leave a Reply