Ragi Finger Foods : குழந்தைகளுக்கு உணவின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதில் பிங்கர் புட்ஸ்க்கு முக்கியமான பங்களிப்பு உண்டு. ஏனெனில் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் ஒவ்வொரு உணவாக நாம் அறிமுகப்படுத்தி இருப்போம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அவற்றில் ஒவ்வொன்றாக குழந்தைகள் சுவைத்து பழகிய பின் சில உணவுகள் குழந்தைகளுக்கு போர் அடித்து போயிருக்கும்.
சில உணவுகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்து போய் இருக்கும். அவற்றையெல்லாம் நாம் தெளிவாக தெரிந்து கொண்டு குழந்தைகளுக்கு என்ன உணவு பிடிக்கின்றது அவற்றை எவ்வாறு கொடுத்தால் குழந்தைகள் சாப்பிடுவார்கள் என்பதற்கான முக்கியமான பயிற்சி இந்த பிங்கர் புட்ஸ் கொடுப்பதாகும்.
எளிதாக சொல்லப்போனால் குழந்தைகளுக்கு உணவின் மீதான ஆர்வத்தை அதிகரிப்பதற்காக அவர்களாகவே உண்பதற்குபழக்கப்படுத்தும் ஒரு சிறு டெக்னிக் தான் இந்த பிங்கர் புட்ஸ்.
குழந்தைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு உணவினை திணிப்பதை விட அவர்கள் கீழே மேலே சிந்தினாலும் பரவாயில்லை என்று இவ்வாறு பழக்கப்படுத்தும் பொழுது அவர்களுக்கு தேவையான அளவு உணவினை குழந்தைகள் உண்பதற்கு ரெடி ஆவார்கள்.
இதுவரை பலவகையான பிங்கர் புட்ஸ் பார்த்திருப்போம் அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி ஆரோக்கியமான ராகி பிங்கர் புட்ஸ். கேழ்வரகு என்றாலே குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான்.
எனவே கேழ்வரகில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளது என்பதை கீழே பார்க்கலாம்:

- கால்சியம் நிறைந்தது: கேழ்வரகில் இயற்கையாகவே கால்சியம் அதிகமாக உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.
- இரும்புச்சத்து வழங்குகிறது: இதில் உள்ள இரும்புச்சத்து, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் உதவுகிறது.
- புரதத்தின் நல்ல மூலமாகும்: கேழ்வரகில் உள்ள தாவர அடிப்படையிலான புரதம், உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் அவற்றைப் புதுப்பிக்கவும் உதவுகிறது.
- செரிமானத்திற்கு உதவுகிறது: கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து, செரிமானம் சீராக நடைபெறவும், மலச்சிக்கலைத் தவிர்த்து சீரான குடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.
- ஆற்றலை வழங்குகிறது: கேழ்வரகில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள், வளரும் குழந்தைகளுக்கும் சுறுசுறுப்பாக இயங்கும் சிறுவர்களுக்கும் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.
- அத்தியாவசிய ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது: கேழ்வரகில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துகள் உள்ளன. இவை சமச்சீரான உணவுக்கு முக்கியப் பங்களிக்கின்றன.
- இயற்கையாகவே சத்தானது: கேழ்வரகு ஒரு சத்துமிக்க முழுத் தானியமாகும். இதனை குழந்தைகளுக்கு ஏற்ற பல்வேறு உணவு வகைகளாகத் தயாரிக்கலாம். அவற்றில் மென்மையான பிங்கர் புட்ஸ் உணவுகளும் (Finger Foods) அடங்கும்.
Ragi Finger Foods
தேவையான பொருட்கள்:
- முளைகட்டிய கேழ்வரகு மாவு-2 மேசைக்கரண்டி
- சர்க்கரைவள்ளிக் கிழங்கு(வேகவைத்து மசித்தது)-1
- கேரட்(வேகவைத்து மசித்தது)-1
- துருவிய பனீர்- ¼ கப்
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
- மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
- உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் கேரட்டை நன்றாக வேகவைத்து, கட்டிகள் இல்லாமல் மசித்துக் கொள்ளவும்.
2. அதனுடன் முளைகட்டிய கேழ்வரகு மாவு, துருவிய பனீர், கொத்தமல்லி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3. அனைத்தையும் நன்றாகக் கலந்து மென்மையான மாவாகப் பிசையவும். மாவு மிகவும் உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.
4. மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, விரல் அளவிலான நீளமான குச்சிகள் போல் வடிவமைக்கவும்.
5. தோசைக்கல்லில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி, மிதமான தீயில் சூடாக்கவும்.
6. ராகி குச்சிகளைத் தோசைக்கல்லில் வைத்து, அவ்வப்போது திருப்பி, லேசாகப் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
7. விரும்பினால், ஓவன் அல்லது ஏர் ஃப்ரையரிலும் நன்றாக வேகவைக்கலாம்.
8. குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன் சிறிது நேரம் ஆறவைத்து, உணவு மென்மையாகவும் எளிதில் மசிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
குழந்தைகளுக்கு முதல் முதலாக ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கும் பொழுது குழந்தைகள் எப்படி உண்கிறார்கள் என்பதை அருகில் இருந்து கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
மேலும் குழந்தைகளுக்கு உண்பதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த பிங்கர் புட்ஸ் ரெசிபியில் முளைகட்டிய கேழ்வரகு, சக்கரைவள்ளி கிழங்கு, கேரட் மற்றும் பன்னீர் போன்றவை சேர்த்துள்ளதால் இவற்றின் எல்லா சத்துக்களும் குழந்தைகளுக்கு கிடைக்கும். மேலும் இதனை செய்வதும் எளிதில் என்பதால் அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் மாலை நேர சிற்றுண்டி இவ்வாறு செய்து கொடுக்கும் பொழுது அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
Ragi Finger Foods

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Ragi Finger Foods
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. குழந்தைக்கு எந்த வயதில் ராகி ஃபிங்கர் ஃபுட்ஸ் கொடுக்கலாம்?
குழந்தை தானாக அமர்ந்து, உணவைப் பிடித்து வாய்க்குக் கொண்டு செல்லும் திறன் உள்ளிட்ட வளர்ச்சித் தயார்நிலையை அடைந்திருந்தால், பொதுவாக 8 மாத வயதிலிருந்து வழங்கலாம். உணவு மென்மையாகவும் எளிதில் மசிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
2. வேறு காய்கறிகளைச் சேர்க்கலாமா?
ஆம். கேரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கிற்குப் பதிலாக அல்லது அவற்றுடன் பூசணிக்காய், உருளைக்கிழங்கு போன்ற நன்றாக வேகவைத்த மென்மையான காய்கறிகளையும் சேர்க்கலாம்.
3. உணவு எந்தப் பதத்தில் இருக்க வேண்டும்?
ராகி பிங்கர் புட் மென்மையாகவும் ஈரப்பதத்துடனும் இருக்க வேண்டும். விரல்களால் எளிதில் மசிக்கக்கூடிய பதத்தில் இருக்க வேண்டும். சிறிய குழந்தைகளுக்கு மிகவும் கடினமான அல்லது மொறுமொறுப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.
4. இந்த உணவை முன்கூட்டியே தயாரித்து வைக்கலாமா?
புதிதாகத் தயாரித்து வழங்குவது சிறந்தது. முன்கூட்டியே தயாரித்தால், உணவைப் பாதுகாப்பாகச் சேமித்து, வழங்குவதற்கு முன் நன்றாகச் சூடாக்கி, குழந்தைக்குக் கொடுக்கும் முன் பொருத்தமான வெப்பநிலையில் இருப்பதை உறுதிப்படுத்தவும்.
ராகி ஃபிங்கர் ஃபுட்ஸ்
Ingredients
முளைகட்டிய கேழ்வரகு மாவு-2 மேசைக்கரண்டி
சர்க்கரைவள்ளிக் கிழங்கு(வேகவைத்து மசித்தது)-1
கேரட்(வேகவைத்து மசித்தது)-1
துருவிய பனீர்- ¼ கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
Notes
2. அதனுடன் முளைகட்டிய கேழ்வரகு மாவு, துருவிய பனீர், கொத்தமல்லி, மிளகுத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
3. அனைத்தையும் நன்றாகக் கலந்து மென்மையான மாவாகப் பிசையவும். மாவு மிகவும் உலர்வாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.
4. மாவிலிருந்து சிறிய உருண்டைகளை எடுத்து, விரல் அளவிலான நீளமான குச்சிகள் போல் வடிவமைக்கவும்.
5. தோசைக்கல்லில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவி, மிதமான தீயில் சூடாக்கவும்.
6. ராகி குச்சிகளைத் தோசைக்கல்லில் வைத்து, அவ்வப்போது திருப்பி, லேசாகப் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
7. விரும்பினால், ஓவன் அல்லது ஏர் ஃப்ரையரிலும் நன்றாக வேகவைக்கலாம்.
8. குழந்தைக்குக் கொடுப்பதற்கு முன் சிறிது நேரம் ஆறவைத்து, உணவு மென்மையாகவும் எளிதில் மசிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிப்படுத்தவும்.











Leave a Reply