Ragi Waffle Recipe Tamil : இப்பொழுதெல்லாம் அம்மாக்களுக்கு குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமற்ற விஷயங்களை ஆரோக்கியமான முறையில் எப்படி குழந்தைகளுக்கு செய்து தருவது என்பதில் தான் ஆர்வம் அதிகரித்து வருகின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
எனவே தான் குழந்தைகளுக்கு பிடித்த ரெசிபியை மையமாக வைத்தே சமையல் வீடியோக்களும் ட்ரெண்டாகி வருகின்றன.
Ragi Waffle Recipe Tamil
அந்த வகையில் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாஃபிள்ஸ் ரெசிபி. கடைகளில் விற்கும் விதவிதமான வாஃபிள்ஸ் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதை விட வீட்டிலேயே ராகியை வைத்து ஆரோக்கியமான ராகி வாஃபிள்ஸ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் பொருள்கள் மற்றும் ஒரு வாஃபிள்ஸ் மேக்கர் இருந்தாலே போதும் மிகவும் எளிதாக இதனை செய்து முடிக்கலாம். மேலும் இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் குழந்தைகளுக்கு காலை நேரம் மற்றும் மாலை நேரத்தில் கொடுப்பதற்கு சத்தான சிற்றுண்டியாக இது இருக்கும்.
குழந்தைகளுக்கு ராகியை பொதுவாக கஞ்சியாகவோ அல்லது தோசையாகவும் செய்து கொடுத்தால் சாப்பிட யோசிப்பார்கள் ஆனால் இப்படி நீங்கள் வித்தியாசமாக செய்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
மேலும் இதன் மேலே குழந்தைகளுக்கு பிடித்த பழங்களை நறுக்கி தூவினால் மேலும் விரும்பி சாப்பிடுவார்கள். இதனை பார்ப்பதற்கு முன்னால் இந்த ரெசிபியில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Ragi Waffle Recipe Tamil

- ராகியில் இயற்கையாகவே கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் குழந்தைகள் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகம் என்பதால் ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகின்றது.
- ராகியில் இயற்கையிலே நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உணவு எளிதில் செரிமானமாக உதவுகின்றது.
- ராகியில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் குழந்தைகள் சுறுசுறுப்பாக விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை வழங்குகின்றது.
- மேலும் இதில் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கக்கூடியது.
Ragi Waffle Recipe Tamil
தேவையான பொருட்கள்
- முளைகட்டிய ராகி மாவு 3½ கப் –
- முழு கோதுமை மாவு-½ கப்
- பால்-½ கப்
- உருக்கிய நெய் அல்லது வெண்ணெய்-1 டேபிள்ஸ்பூன்
- கோகோ பவுடர்-1–2 டீஸ்பூன்
- ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் – விருப்பப்பட்டால்
- தேவையான அளவு- தண்ணீர்.
Ragi Waffle Recipe Tamil
செய்முறை
- ஒரு கலவைப் பாத்திரத்தில் ராகி மாவு, முழு கோதுமை மாவு, கோகோ பவுடர் மற்றும் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.
- படிப்படியாக பாலைச் சேர்த்து, கட்டிகள் இல்லாமல் மென்மையான மாவாக நன்றாகக் கலக்கவும்.
- உருக்கிய நெய் அல்லது வெண்ணெயைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மாவின் பதத்தை சரிசெய்ய தேவையானால், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்கவும். மாவு கெட்டியாகவும், ஆனால் ஊற்றக்கூடிய பதத்திலும் இருக்க வேண்டும்.
- வாஃபிள் மேக்கரை முன்கூட்டியே சூடாக்கி, சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் தடவவும்.
- தேவையான அளவு மாவை வாஃபிள் மேக்கரில் ஊற்றி, வாஃபிள்ஸ் பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும், முழுமையாக வேகும் வரை சுடவும்.
- வாஃபிள்ஸை கவனமாக எடுத்து, புதிய பழங்கள், வீட்டில் தயாரித்த பழ ப்யூரி அல்லது குழந்தைகளுக்கு ஏற்ற டாப்பிங்குடன் சூடாகப் பரிமாறவும்.
Ragi Waffle Recipe Tamil

இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் மிகவும் எளிதான பொருட்களின் என்பதால் பரபரப்பான காலை நேரத்தில் குழந்தைகளுக்கு நீங்கள் எளிதான டிபன் செய்து கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் இதனை தாராளமாக செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸிற்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் இதனை செய்து கொடுக்கலாம்.
இவற்றுடன் குழந்தைகளுக்கு பிடித்த பழங்களை நறுக்கி மேலே தூவி குழந்தைகளுக்கு வித்தியாசமாக சாப்பிட கொடுக்கலாம்.
கடைகளில் விற்கும் விதவிதமான வாஃபிள்ஸ்களை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கும் பொழுது அதில் என்ன உட்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்குமோ என்ற பயம் நமக்குள் உருவாகும். ஆனால் வீட்டிலேயே செய்து கொடுக்கும் போது அவ்வாறு பயப்பட தேவையில்லை.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Ragi Waffle Recipe Tamil
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. ராகி மாவை மட்டும் பயன்படுத்தி வாஃபிள்ஸ் செய்யலாமா?
ஆம், ராகி மாவை மட்டும் பயன்படுத்தியும் வாஃபிள்ஸ் செய்யலாம். ஆனால் ராகி மாவுடன் முழு கோதுமை மாவையும் சேர்ப்பது வாஃபிள்ஸுக்கு சிறந்த சுவை மற்றும் பழத்தை தரும்.
2. கோகோ பவுடரைத் தவிர்க்கலாமா?
ஆம். சாதாரண ராகி வாஃபிள்ஸ் விரும்பினால் கோகோ பவுடரைத் தவிர்க்கலாம்.
3. வாஃபிள்ஸை இயற்கையாக இனிப்பாக்குவது எப்படி?
மசித்த வாழைப்பழம், பழ ப்யூரி அல்லது குழந்தையின் வயதுக்கு ஏற்ற பிற இயற்கையான டாப்பிங்குகளுடன் வாஃபிள்ஸைப் பரிமாறலாம்.
4. குழந்தைகளுக்கு ராகி வாஃபிள்ஸை எவ்வாறு பரிமாற வேண்டும்?
புதிய பழங்கள், வீட்டில் தயாரித்த பழ ப்யூரி அல்லது நட்ஸ் பட்டர் ஆகியவற்றுடன் வாஃபிள்ஸை சூடாகப் பரிமாறலாம்.
ஆரோக்கியமான ராகி வாஃபிள்ஸ்
Ingredients
- முழு கோதுமை மாவு-½ கப்
- பால்-½ கப்
- உருக்கிய நெய் அல்லது வெண்ணெய்-1 டேபிள் ஸ்பூன்
- கோகோ பவுடர்-1–2 டீஸ்பூன்
- ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் – விருப்பப்பட்டால்
- தேவையான அளவு- தண்ணீர்

![குழந்தைகளுக்கான முளைகட்டிய ராகி மில்க் ஷேக்[Ragi Recipe in Tamil] Ragi Recipe in Tamil](https://tamil.mylittlemoppet.com/wp-content/uploads/2022/04/feature-3-150x150.jpg)









Leave a Reply