Arisi pori kanji for babies: குழந்தைகளுக்கான ஆரோக்கியமான இன்ஸ்டன்ட் அரிசி பொரி கஞ்சி பவுடர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு நாம் முதல் முதலில் உணவு கொடுக்கு பொழுது எளிதில் செரிமானம் ஆகக்கூடிய ஆரோக்கியமான உணவினை கொடுப்பது வழக்கம்.நாம் ஏற்கனவே ராகி கஞ்சி,கம்பு கஞ்சி ,சிறு தானிய கஞ்சி ,காய்கறி மசியல் மற்றும் பழக்கூழ் போன்றவற்றை பார்த்துவிட்டோம்.ஆனால் அரிசி பொரி கஞ்சியானது இவை எல்லாவற்றையும் விட எளிமையானது. அரிசி பொரி மற்றும் பொரிகடலை மட்டும் போதுமானது.இதை நாம் பொடியாக செய்து வைத்து கொண்டால் நம் விருப்பத்திற்கேற்ப கஞ்சி எளிதில் செய்து கொள்ளலாம்.குழந்தைகள் நன்கு விளையாடுவதற்கு ஆற்றலளிக்கக்கூடியது. இதை நாம் 7 மாத குழந்தையிலிருந்து தரலாம்.
Arisi pori kanji for babies:
- அரிசி பொரி -100 கிராம்
- பொரிகடலை -30 கிராம்
குழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது எடுத்து செல்லக்கூடிய ஆர்கானிக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள்.நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
குழந்தைகளுக்கான அரிசி பொரி கஞ்சி பவுடர்
செய்முறை
1.பானை சூடாக்கவும்.
2.பொரியை சேர்த்து இலேசாக வறுக்கவும்.
3.பொரிகடலையை சேர்த்து வறுக்கவும்.
4.ஆற வைக்கவும்.
5.கலவையை ஜாரில் போட்டு நன்றாக அரைக்கவும்.
6.அரிசி பொரி பவுடர் ரெடி.
அரிசி பொரி கஞ்சி செய்வது எப்படி?
1. 2 டே.ஸ்பூன் அரிசி பொரி பவுடரை எடுத்து கொள்ளவும்.
2.சூடான தண்ணீரை ஊற்றவும். (பயணம் செய்யும் பொழுது கொதிக்க வைத்த பிளாஸ்கில் எடுத்து செல்லலாம்)
3.கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
4.அரிசி பொரி கஞ்சி ரெடி.
- 1 வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக பால் கலந்து கொடுக்கலாம்.
- இதில் கால்சியம்,வைட்டமின்-D,நார்சத்துக்கள் மற்றும் இரும்பு சத்துக்கள் அடங்கியுள்ளன.
- தொலை தூர பயணங்களுக்கு குழந்தைகளை எடுத்து செல்லு பொழுது இந்த பொடியினை எடுத்து சென்றால் போதுமானது.
- குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க கூடியது.
- காற்று புகாத டப்பாவில் 3-4 மாதங்களுக்கு வைத்து உபயோகிக்கலாம்.
குழந்தைகளுடன் பயணம் செய்யும் பொழுது எடுத்து செல்லக்கூடிய ஆர்கானிக் இன்ஸ்டன்ட் மிக்ஸ் வகைகள்.நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply