badam pisin sabja milk: இந்த கோடை காலத்தில் கடைகளில் விற்கும் விதவிதமான ட்ரின்க்ஸ்களை கொடுப்பதை காட்டிலும் குழந்தைக்கு உண்மையில் குளிர்ச்சி தரக்கூடிய ஆரோக்கியமான ரெசிபியினை செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பாதாம் பிசின் சப்ஜா பாலினை செய்து கொடுங்கள்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கோடை காலம் என்றாலே குழந்தைகளை ஈர்ப்பது ஐஸ்கிரீம் மற்றும் கூல்ட்ரிங்க்ஸ்கள் தான். கடைகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் கலர் கலராக அடைத்து விற்கப்படும் கூல்ட்ரிங்ஸ்கள் உண்மையில் உடலின் நீர் சத்தினை தக்க வைக்குமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஏனென்றால் அதில் முக்கால்வாசி அளவு சர்க்கரை மற்றும் சிறிதளவு கெமிக்கல் பவுடர்கள் மட்டுமே என்பதால் அதை குடிப்பதால் உடலுக்கு தீங்கு தான் ஏற்படுமே தவிர சிறிதளவு நன்மை கிடையாது.
badam pisin sabja milk

அப்படி என்றால் வெயில் காலத்தில் கூல்டிரிசுகள் கேட்டும் நச்சரிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்த வீட்டிலேயே நாம் இதுபோன்று விதவிதமான ட்ரின்ஸ்கள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுத்த திருப்தி நமக்கு இருக்கும்.
மேலும் இதை தயாரிக்க வீட்டிலேயே இருக்கும் பால், பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் மட்டுமே போதும் என்பதால் எளிதில் செய்து விடலாம். இதை செய்வதற்கு முன்னால் இதில் அடங்கி இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
- பாதாம் பிசினிற்கு இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை உள்ளது என்பதால் உடலின் வெப்பநிலையை சீராக வைக்க இது உதவுகின்றது.
- சப்ஜா விதைகளும் உடலினை குளிர்ச்சியாக வைக்கும் என்பதால் கோடை காலத்தில் உடல் சூட்டினை குறைக்க இதுவும் உதவி புரியும்.
- சப்ஜா விதைகளில் நார் சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து வயிற்று உபாதைகள் வராமல் தடுக்க கூடியது.
- இதில் ப்ரீ பயோடிக் எனப்படும் சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- சப்ஜா விதைகளில் ஒமேகா 3 எனப்படும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இது இரும்பு சத்து, கால்சியம் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களை வழங்குகிறது.
- மேலும் பாதாம் பிசினில் இயற்கையாகவே இருக்கும் வேதிப்பொருட்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்க வைத்து குழந்தைகள் சுறுசுறுப்பாக இயங்க காரணமாக அமைகின்றது.
- பாதாம் பிசினின் தன்மையானது பார்ப்பதற்கே குழந்தைகள் அதிகம் விரும்பும் ஜெல்லி போன்று இருக்கும் என்பதால் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
badam pisin sabja milk:
- பால்- ஒரு கப்
- பாதாம் பிசின்-1 டீஸ்பூன்
- சப்ஜா விதைகள்-1 டீ ஸ்பூன்
- நாட்டு சக்கரை- தேவையான அளவு
badam pisin sabja milk
செய்முறை
1.பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது ஆறு முதல் 8 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும். பாதாம் பிசின் நன்கு ஊறிவிட்டால் ஜெல்லி போன்ற பதத்திற்கு மாறிவிடும்.
2.ஒரு டம்ளரில் ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
3.ஊற வைத்த சப்ஜா விதைகளை சிறிதளவு சேர்க்கவும்.
4.பால் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
5.அதன் மேல் சிறிதளவு சப்ஜா விதைகளை சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
குறிப்பு: குழந்தைகளுக்கு குளிர்ச்சியாக கொடுப்பதை விட வெது பாதுகாப்பாக கொடுப்பதை சிறந்தது. பாதாம் பிசினை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம். எனவே இந்த ரெசிபி ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுப்பது ஏற்றதாகும்.
சிறுவர்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் சிறிதளவு குளிர்ச்சியான பாலை சேர்த்துக் கொள்ளலாம். கோடைகளில் கடைகளில் விற்கும் விதவிதமான கூல்டிரிங்ஸ் களை காட்டிலும் இதுபோன்று வீட்டிலேயே செய்து கொடுக்கும் ட்ரிங்க்கே சிறந்தது.
badam pisin sabja milk:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பாதாம் பிசின் என்றால் என்ன?
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் என்பது பாதாம் மரத்திலிருந்து வெளிப்படும் பிசின் ஆகும்.
சப்ஜா விதைகள் மற்றும் சியா விதைகள் இரண்டும் ஒன்றா?
இரண்டுமே வேறு வேறு தாவரங்களிலிருந்து கிடைக்கக்கூடிய ஒன்றாகும்.
எவ்வளவு நேரத்திற்கு இதனை வைத்து குடிக்கலாம்?
இதில் பால் சேர்த்துள்ளதால் செய்த உடனே குடிப்பது சிறந்தது.
பாதாம் பிசின் சப்ஜா பால்
Ingredients
- தேவையானவை
- பால்- ஒரு கப்
- பாதாம் பிசின்-1 டீஸ்பூன்
- சப்ஜா விதைகள்-1 டீ ஸ்பூன்
- நாட்டு சக்கரை- தேவையான அளவு
Notes
- பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகள் ஆகியவற்றை தனித்தனியாக ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது ஆறு முதல் 8 மணி நேரங்களுக்கு ஊற வைக்கவும்.
- பாதாம் பிசின் நன்கு ஓடிவிட்டால் ஜெல்லி போன்ற படத்திற்கு மாறிவிடும்.
- ஒரு டம்ளரில் ஊற வைத்த பாதாம் பிசின் மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
- ஊற வைத்த சப்ஜா விதைகளை சிறிதளவு சேர்க்கவும்.
- பால் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
- அதன் மேல் சிறிதளவு சப்ஜா விதைகளை சேர்த்து குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply