Banana Wheat Dosa: குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக சாப்பிட காலை உணவாக என்னென்ன கொடுக்கலாம் என்ற அம்மாக்களின் கேள்விகளுக்கு இணங்க விதவிதமான காலை உணவுகளை நாம் இதுவரை பார்த்திருப்போம். இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி ஆனது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய எளிதான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கோதுமை தோசை சாப்பிடும் பழக்கம் இன்று அனைவரிடமும் வெகுவாக குறைந்து வருகின்றது. கோதுமை தோசை ஆனது சாப்பிடுவதற்கு அரிசி மாவு தோசை போன்ற அல்லாமல் ஒருவித வழவழப்பு தன்மையுடன் இருப்பதால் பெரும்பாலானோர் கோதுமை தோசையினை விரும்ப மாட்டார்கள். ஆனால், இன்று நாம் பார்க்கவிருக்கும் தோசையினை குழந்தைகளுக்கு ஏற்றவாறு சுவையாக எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
கோதுமை மாவுடன், பால் மற்றும் வாழைப்பழமும் சேர்த்துள்ளதால் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு சுவையாக இருக்கும். இந்த ரெசிபி பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- வாழைப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மினரல்ஸ் மற்றும் பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.
- கோதுமையில் இயற்கையாகவே வைட்டமின் பி, இரும்புச் சத்து, ஜிங்க், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.
- வாழைப்பழத்தில் இயற்கையாகவே நிறைந்துள்ள சர்க்கரையானது குழந்தைகளுக்கு எனர்ஜியை அளிக்க வல்லது.
- கோதுமைமாவில் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை கொடுக்கின்றது.
- வாழைப்பழத்தில் நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடியது.
- கோதுமையில் இயற்கையாகவே நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதுவும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கக்கூடிய தன்மை உடையது.
Banana Wheat Dosa
- வாழைப்பழம்- 1
- அரிசி மாவு- அரை கப்
- கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- பால்- கால் கப்
- பனைவெல்லம்- 1 டேபிள் ஸ்பூன் (தேவைப்பட்டால்)
- ஏலக்காய்தூள்- ஒரு சிட்டிகை
- உப்பு- தேவைக்கேற்ப
- நெய் அல்லது பட்டர்.
Banana Wheat Dosa
செய்முறை
- ஒரு பவுலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து மசித்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்பு பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- மேலும் இனிப்புச் சுவை தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால் பனைவெல்லத்தை காய்ச்சி வடிகட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
- ஏலக்காய்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
- தோசை கல்லை சுட வைத்து எப்பொழுதும் போல தோசை சுடுவது போன்று ஊற்றவும்.
- சிறிதளவு நெய் சேர்த்து தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை ரெடி.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)
பால் சேர்க்காமல் இந்த தோசையை சுடலாமா?
பால் சேர்க்காமலும் இந்த தோசையை சுடலாம். பசும்பால் ஒவ்வாமை உள்ளவர்கள் இதற்கு பதிலாக பாதாம் பால், ஓட்ஸ் பால் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம்.
இனிப்பு சுவைக்காக வேறு ஏதேனும் சேர்த்துக் கொள்ளலாமா?
உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுக்க நினைத்தால் பேரிச்சம்பழ மசியல், தேன் போன்றவற்றை சேர்த்தும் கொடுக்கலாம். வாழைப்பழத்தின் இனிப்பு சுவையே போதும் என்று நினைத்தால் எதுவும் சேர்க்காமல் அப்படியே தோசை சுட்டு கொடுக்கலாம்.
இந்த தோசையில் வேறு ஏதேனும் பொருட்கள் சேர்த்து செய்து கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கேரட்டை துருவி சேர்க்கலாம் அல்லது குழந்தைகளுக்கு பிடித்த படங்களை பொடிப்பொடியாக நறுக்கி மவுடன் சேர்த்து தோசையாக சுட்டுக் கொடுக்கலாம்.
ஸ்வீட் பனானா தோசை
Ingredients
- வாழைப்பழம்- 1
- அரிசி மாவு- அரை கப்
- கோதுமை மாவு- 2 டேபிள் ஸ்பூன்
- பால்- கால் கப்
- பனைவெல்லம்- 1 டேபிள் ஸ்பூன் தேவைப்பட்டால்
- ஏலக்காய்தூள்- ஒரு சிட்டிகை
- உப்பு- தேவைக்கேற்ப
- நெய் அல்லது பட்டர்
Notes
- ஒரு பவுலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து மசித்து கொள்ளவும். அதனுடன் அரிசி மாவு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்பு பால் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
- மேலும் இனிப்புச் சுவை தேவைப்படும் என்று நீங்கள் நினைத்தால் பனைவெல்லத்தை காய்ச்சி வடிகட்டி அல்லது நாட்டுச் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளலாம்.
- ஏலக்காய்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
தோசை கல்லை சுட வைத்து எப்பொழுதும் போல தோசை சுடுவது போன்று ஊற்றவும். - சிறிதளவு நெய் சேர்த்து தோசை வெந்ததும் திருப்பி போடவும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ கோதுமை தோசை ரெடி.
Leave a Reply