Beetroot Cutlet: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பொழுது வரும் சந்தோஷமே தனி தான். அதுவும் பேக்கரி ஸ்டைலில் ஸ்நாக்ஸ் என்றால் சொல்லவா வேண்டும். தட்டில் வைத்தவுடன் ஸ்நாக்ஸ் சென்ற இடம் தெரியாது. பேக்கரி ஸ்டைல் என்றவுடன் மைதா மாவு சேர்த்து வழக்கமாக கடைகளில் விற்கும் கட்லெட் என்று நினைக்க வேண்டாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கலர்ஃபுல்லான அதேசமயம் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். இப்பொழுதெல்லாம் ஆரோக்கியமாக ரெசிபி இருக்க வேண்டும் என்பதையும் தாண்டி ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றவாறு ரெசிபியை தான் பெற்றோர்கள் விரும்புகின்றனர்.
அந்த வகையில் இந்த பீட்ரூட் கட்லெட் ரெசிபியானது ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுப்பதற்கு ஏற்றவாறு ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.
Beetroot Cutlet
Beetroot Cutlet:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் பீட்ரூட்டின் நன்மைகளை பார்க்கலாம்:
- பீட்ரூட்டில் இரும்பு சத்து மற்றும் போலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இயற்கையாகவே ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது.
- மேலும் ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால் ரத்தசோகை வராமல் தடுக்க வல்லது.
- பீட்ரூட்டில் இயற்கையாகவே நிறைந்துள்ள நைட்ரேட் எனப்படும் சத்துக்கள் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது.
வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது. - இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமான மண்டலத்தை நன்கு வேலை செய்ய வைப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது.
- பீட்ரூட் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதயத்தின் செயல்பாட்டை நன்றாக வைப்பதால் இதயம் நன்கு இயங்குவதற்கு துணை புரிகின்றது.
- பீட்ரூட்டில் இயற்கையாகவே நிறைந்துள்ள இனிப்பு சத்துக்கள் குழந்தைகளுக்கு நல்ல எனர்ஜியை தருவதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான ஆற்றல் இந்த காயில் இருந்து கிடைக்கும்.
- பீட்ரூட்டில் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சருமம் மினுமினுப்பாக உதவுகின்றது.
- பீட்ரூட்டின் பிங்க் நிறம் குழந்தைகள் விரும்புவதற்கு ஏற்றவாறு உள்ளதால் மற்ற காய் விரும்பாத குழந்தைகளுக்கு பீட்ரூட் கொடுக்க சிறந்த தேர்வாக இருக்கும்.
Beetroot Cutlet
- துருவிய பீட்ரூட்- அரை கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு- அரை கப்
- ரஸ்க்கு தூள் அல்லது பொடி செய்து அவல்- கால் கப்
- துருவிய சீஸ் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள்- கால் டீஸ்பூன்
- மிளகுத்தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய்.
Beetroot Cutlet
செய்முறை
- ஒரு பவுலில் திரு வி பீட்ரூட் மசித்த உருளைக்கிழங்கு பிரட்டு தூள் அல்லது பொடி செய்த அவுல் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
- அதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை சிலிண்டர் வடிவத்திற்கு உருட்டவும்.
- பேக்கிங் செய்யும் ட்ரேயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும்.
- ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை செட் செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ட்ரேயை வைத்து எடுக்கவும்.
- சிறிதளவு ஆறவிட்டு பரிமாறவும்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சிம்பிளான ஸ்நாக்ஸாக இருக்கும். பார்க்கவே பிங்க் நிறத்தில் அழகாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் இதனை விரும்புவார்கள்.
குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்ஸில் மற்றும் டிபன் பாக்ஸில் வைத்து அனுப்புவதற்கு சிறந்த தேர்வாகவும் இது இருக்கும். குழந்தைகள் மட்டுமல்லாமல் டீ நேரத்தில் பெரியவர்கள் சுவைக்க ஏதுவான ஸ்னாக்ஸ் ஆக இது இருக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.

Beetroot Cutlet:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இதனை உருளைக்கிழங்கு சேர்க்காமல் செய்யலாமா?
தாராளமாக செய்யலாம் உருளைக்கிழங்கிற்கு பதிலாக சர்க்கரைவள்ளி கிழங்கு அல்லது ஓட்ஸ் பவுடர் போன்றவை சேர்த்துக் கொள்ளலாம்.
2. வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்த்துக் கொள்ளலாமா?
எதனுடன் திருவிய கேரட், கீரை, பன்னீர் போன்றவை சேர்த்தும் செய்து கொடுக்கலாம்,
3. இதனை குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸில் வைத்து அனுப்பலாமா?
டிபன் பாக்ஸில் வைத்து அனுப்புவதற்கு இது ஏற்ற ரெசிபி தான் எனவே தாராளமாக வைத்து அனுப்பலாம்.
பீட்ரூட் பிங்கர்ஸ்
Ingredients
- துருவிய பீட்ரூட்- அரை கப்
- வேகவைத்த உருளைக்கிழங்கு- அரை கப்
- ரஸ்க்கு தூள் அல்லது பொடி செய்து அவல்- கால் கப்
- துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன்
- சீரகத்தூள்- கால் டீஸ்பூன்
- மிளகுத்தூள்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய்
Notes
- ஒரு பவுலில் திரு வி பீட்ரூட் மசித்த உருளைக்கிழங்கு பிரட்டு தூள் அல்லது பொடி செய்த அவுல் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
- அதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
- சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை சிலிண்டர் வடிவத்திற்கு உருட்டவும்.
- பேக்கிங் செய்யும் ட்ரேயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும்.
- ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை செட் செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ட்ரேயை வைத்து எடுக்கவும்.
சிறிதளவு ஆறவிட்டு பரிமாறவும்.











Leave a Reply