capsicum rice recipe: குழந்தைகளுக்கு பெரும்பாலும் மதிய உணவாக நாம் சாதத்தை தான் கொடுத்தாக வேண்டும். இவை தவிர குழந்தைகளின் லன்ச் பாக்ஸ்க்கு நாம் வழக்கமாக செய்து கொடுக்கும் வெரைட்டி ரைஸ்களில் லெமன் சாதம், தக்காளி சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை இடம்பெறுவதுண்டு. ஆனால் இவற்றையெல்லாம் சாப்பிட்டு போர் அடித்த உங்கள் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமாக செய்து தர வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? இதோ உங்களுக்கான ஆரோக்கியமான மற்றும் சுவையான குடைமிளகாய் சாதம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குடைமிளகாயை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? அது மிகவும் காரமாக இருக்காதா என்று நீங்கள் யோசிக்கிறீர்களா? பயமே வேண்டாம் குடைமிளகாய் ஆனது காரத்தை தவிர்த்து உங்களின் சாதத்திற்கு சுவையை கொடுக்கும் ஒரு காய்கறி ஆகும். அதுமட்டுமல்லாமல் குடைமிளகாயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை உங்கள் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியதாகும். எனவே இந்த சுவையான கலர்ஃபுல்லான குடைமிளகாய் குழந்தைகளுக்கு எப்படி செய்து கொடுக்கலாம் என்பதை பார்க்கலாம். அதற்கு முன் குடைமிளகாயில் அடங்கியுள்ள நன்மைகளை நாம் காணலாம்.
capsicum rice recipe:
- குடைமிளகாய் என்று அழைக்கப்படும் இந்த காய்கறியில் குழந்தைகளுக்கு தேவையான முக்கியமான வைட்டமின்கள் நிறைந்துள்ளன. முக்கியமாக சொல்லப்போனால் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகம். இவை குழந்தைகளின் ஆரோக்கியமாக வளர்ச்சிக்கு உதவுக்கூடிய வைட்டமின்கள் ஆகும்
- குடைமிளகாயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் எனவே இவை செல்களை சேதமடையாமல் தடுக்க கூடியது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுவாக்குகின்றது.
- குடைமிளகாயில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் உணவினை எளிதில் செரிமானமாக செய்து மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் தடுக்கக்கூடியது.
- குடைமிளகாயில் கலோரிகள் குறைவு என்பதால் ஆரோக்கியமான உணவுடன், குறைந்த கலோரிகளையும் கொடுக்க வேண்டும் என்ற பட்சத்தில் இது ஏற்ற உணவாகும்.
- குடைமிளகாயில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
- வைட்டமின் ஏ அதிகம் என்பதால் குழந்தைகளின் பார்வை திறனை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
- குழந்தைகளின் உணவில் வித்தியாசமான காய்கறிகளை விதவிதமாக சேர்க்கும் பொழுது உணவின் மீதான ஈர்ப்பினை அவர்களுக்கு அதிகரிக்கும்.
- குடைமிளகாய் சாதத்துடன் வேறு காய்கறிகளையும் சேர்த்து குழந்தைகளுக்கு விருப்பமான பிளேவரில் நீங்கள் கொடுக்கலாம்.
- குடைமிளகாய் பச்சை, மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்துடன் கிடைப்பதால் உங்கள் குழந்தைகளுக்கு பிடித்தமான கலரை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதற்கு இது உபயோகமாக இருக்கும்.
capsicum rice recipe:
- நறுக்கிய குடைமிளகாய்- 1 கப்
- நறுக்கிய தக்காளி- 1
- நறுக்கிய வெங்காயம்- 1
- நறுக்கிய உருளைக்கிழங்கு-1
- நெய்-1 டீ.ஸ்பூன்
- சீரகம் 1அரை டீ.ஸ்பூன்
- மஞ்சள் தூள்- 1 சிட்டிகை
- உப்பு -1 சிட்டிகை (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு)
- தண்ணீர் -தேவையான அளவு
capsicum rice recipe:
செய்முறை
- குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும்.
- சீரகம் பொரிந்து வந்ததும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கழுவி வைத்த அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
- மூன்று விசில் வரும் அளவிற்கு காத்திருக்கவும்.
- நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
capsicum rice recipe:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குடைமிளகாய் சாதத்தினை குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்கும் பொழுது காய்கறி மசியல், பழ மசியல் போன்ற எளிதான தனி உணவுகளை கொடுக்க ஆரம்பித்த பின்பு,உங்களின் குழந்தைகளின் செரிமான மண்டலம் நன்கு பணி செய்ய ஆரம்பித்த பின்பு இந்த குடைமிளகாய் சாதத்தினை கொடுக்கலாம்.
எந்த மாதத்தில் குடை மிளகாய் சாதத்தினை அறிமுகப்படுத்தலாம்?
குடைமிளகாய் சாதத்தினை திட உணவு கொடுக்க ஆரம்பித்த பின் ஆறு மாதத்திற்கு பின்பு அல்லது ஏழு மாதத்திற்கு பின்பு நீங்கள் கொடுக்க ஆரம்பிக்கலாம். குழந்தைகளுக்கு முதன் முதலாக கொடுக்கும் பொழுது அதில் உள்ள குடைமிளகாய், காய்கறிகள் எல்லாம் நன்கு மசிந்துள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு கொடுக்கலாம்.
இதனை சாப்பிடும் பொழுது குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுமா?
பொதுவாக குடைமிளகாய் சாதத்தினை எடுத்துக் கொள்ளும் பொழுது எந்த விதமான அலர்ஜியும் ஏற்படாது. அப்படி அலர்ஜி ஏற்படுகின்றது என்று நீங்கள் நினைத்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.
சுவையான குடைமிளகாய் சாதம்
Ingredients
- நறுக்கியகுடைமிளகாய்- 1 கப்
- நறுக்கியதக்காளி- 1
- நறுக்கியவெங்காயம்- 1
- நறுக்கியஉருளைக்கிழங்கு-1
- நெய்-1டீ.ஸ்பூன்
- சீரகம்1அரை டீ.ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1 சிட்டிகை
- உப்பு-1 சிட்டிகை (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு)
- தண்ணீர்-தேவையான அளவு
Notes
- குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்க்கவும்.
- சீரகம் பொரிந்து வந்ததும் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
- கழுவி வைத்த அரிசி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
- ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கின்றீர்கள் என்றால் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து குக்கரை மூடவும்.
- மூன்று விசில் வரும் அளவிற்கு காத்திருக்கவும்.
- நன்றாக மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
Leave a Reply