Carrot Beetroot Recipe for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் எட்டி விட்டால் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து தர வேண்டும் என்பதே அனைத்து அம்மாக்களின் ஆசையாக இருக்கும். அதற்கு ஏற்ற உணவுதான் காரட் பீட்ரூட் கூழ். குழந்தைகளுக்கு முதன்முதலாக உணவு கொடுக்கும் பொழுது பழக்கூழ் அல்லது காய்கறி கூழ் ஆகியவற்றை நாம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் மற்றும் ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த காரட் பீட்ரூட் கூழ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கேரட் மற்றும் பீட்ரூட் போன்றவற்றில் தனித்தனியாக அறிமுகப்படுத்திய பின்பு 7-8 மாதம் முதல் இந்த காரட் பீட்ரூட் கூழினை நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
கேரட்டில் இயற்கையாகவே பீட்டா கரோட்டின் என்கின்ற சத்து இருப்பதினால் பிற்காலத்தில் குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் குழந்தையின் மூளையை சுறுசுறுப்பாக இயங்க செய்கின்றது.மேலும் பீட்ரூட்டில் மெக்னீசியம் பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், நைட்ரேட் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.
கேரட் பீட்ரூட் கூழ்
Carrot Beetroot Recipe for Babies in Tamil:
- கேரட் -1
- பீட்ரூட் -1/2
கேரட் பீட்ரூட் கூழ்
செய்முறை
1.கேரட் மற்றும் பீட்ரூட்டின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
2.ஒரு கிண்ணத்தில் போட்டு குக்கரில் ஆவியில் வைக்கவும்.
3. 3-4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
4.நன்றாக ஆற வைக்கவும்.
5.நன்றாக மசிக்கவும்.
6.காரட் பீட்ரூட் கூழ் ரெடி.
கேரட் மற்றும் பீட்ரூட் உண்பதால் ஏற்படும் நன்மைகள்
-
- கேரட்டில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
- கேரட் உண்பதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கின்றது.
- கேரட்டை பச்சையாக உண்பதால் ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளுக்கு வழிவகுக்கின்றது..
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
- பீட்ரூட் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் தங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றுகின்றது.
- மூலநோய் வராமல் தடுக்கக்கூடியது.
- இரத்தசோகை வராமல் உடலை காக்க உதவுகின்றது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply