Chocolate oats dates snacks for babies: குழந்தைகளுக்கு விதவிதமான ஸ்னாக்ஸ் செய்து கொடுப்பதில் அம்மாக்களுக்கு அலாதி பிரியம் தான். ஆனால் அதை குழந்தைகளின் விருப்பம் போல் செய்து கொடுப்பது தான் அம்மாக்களுக்கு சவாலான ஒன்று. அனைத்து குழந்தைகளும் விரும்பி உண்ணும் இனிப்பு என்றால் கண்டிப்பாக சாக்லெட் தான். ஆனால் சாக்லேட்டில் கலந்திருக்கும் இனிப்பு மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் காரணமாக குழந்தைகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்க மாட்டோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் சாக்லேட் பவுடரை கொண்டு வீட்டிலேயே டேஸ்டியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும்போது குழந்தைகள் உங்களிடம் கேட்டு கேட்டு வாங்கி உண்பார்கள்.இந்த சாக்லேட் பார் செய்வதற்கு நீங்கள் பேக் செய்யக்கூட தேவையில்லை.மேலும் இதில் ஹெல்தியான முந்திரி, டேட்ஸ், ஓட்ஸ் ,நாட்டுச்சக்கரை போன்றவை கலந்துள்ளதால் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமளிக்கக்கூடியது. மேலும் குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கான எனர்ஜியை கொடுக்கக்கூடியது.
Chocolate oats dates snacks for babies:
- ஓட்ஸ்- 1கப்
- பேரிச்சை- 7-8
- முந்திரி-1/4 கப்
- நாட்டுச்சர்க்கரை– ¾ கப்
- கோகோ பவுடர் -4-5 டேபிள்ஸ்பூன்
- நறுக்கிய நட்ஸ் அல்லது நட்ஸ் பவுடர் -தேவையான அளவு
Chocolate oats dates snacks for babies:
செய்முறை
1.பேரிச்சை மற்றும் முந்திரியை அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
2.ஊற வைத்த பேரிச்சை மற்றும் முந்திரியை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் போன்று அரைக்கவும்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான பால் சாதம்
3.கடாயில் ஓட்ஸ் மற்றும் நறுக்கிய நட்ஸ்களை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஒருபுறம் வைக்கவும்.
4.நாட்டுச் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நுரை பொங்கும் அளவிற்கு லேசாக சூடாக்கவும்.
5.அடுப்பினை மிதமான தீயில் வைத்து அரைத்து வைத்த பேரிச்சை மற்றும் முந்திரி பேஸ்ட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
6.அடுப்பை அணைத்து கலவையை ஓட்ஸ் உடன் சேர்க்கவும். அதன்பின் கோகோ பவுடரை இதனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
7.ஒரு ட்ரேயில் பேப்பரை விரித்து தயார் செய்து வைத்த கலவையை நிரப்பவும்.
8.ஒன்று முதல் இரண்டு மணி நேரத்திற்கு நன்றாக ஆறவிடவும்.
9.பின்பு துண்டு துண்டுகளாக நறுக்கவும்.
10.மிகவும் சுவையான சாக்லேட் ஓட்ஸ் பார் ரெடி.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான ஆப்பிள் ஓட்ஸ் டேட்ஸ் ஸ்மூத்தி
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply