Cutlet for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஒன்றுதான் மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதை.
இந்த மக்கனா எனப்படும் தாமரை விதையானது குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதுடன் கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்கவல்லது.மக்கானாவில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன.
எனவே குழந்தைகளுக்கு எனெர்ஜியை அளிக்கக்கூடியது.மேலும் குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க வல்லது. மேலும் உருளைக்கிழங்கில் குழந்தைகளுக்கு தேவையான பொட்டாசியம் ,நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது.மேலும் இதில் மிளகு,பூண்டு மற்றும் இஞ்சி கலந்துள்ளதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.
இதில் மை லிட்டில் மொப்பெட்டின் மக்கானா தாலியா பவுடர் சேர்த்துள்ளேன்.ப்ரெசெர்வேட்டிவ்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் சேர்க்காததால் குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. நீங்கள் கடைகளில் கிடைக்கும் தாமரை விதையினையும் பொடி செய்து சேர்த்து கொள்ளலாம்.
Cutlet for babies in Tamil
Cutlet for babies in Tamil
தேவையானவை
- மக்கானா தாலியா பவுடர்- 3 டே.ஸ்பூன்
- உருளைக்கிழங்கு -2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள்- 1 டீ.ஸ்பூன்
- மிளகுத்தூள்- 1 டீ.ஸ்பூன்
- நெய் -1 டே.ஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
Cutlet for babies in Tamil
செய்முறை
1.உருளைக்கிழங்கை ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
2.தோலை உரித்து நன்றாக மசிக்கவும்.
3.மக்கானா தாலியா பவுடரை சேர்க்கவும்.
4.இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
5.கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
6.மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்.
7.கைகளில் எண்ணெய் தடவி மாவினை கட்லட் போன்று தட்டி எடுக்கவும்.
8.பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மக்கானா விதை குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
மக்கானா விதையில் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டின், கால்சியம் போன்றவை நிறைந்துள்ளதால் ஆரோக்கியமானதாகும்.
மக்கானா விதை எதிலிருந்து கிடைக்கின்றது?
தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் விதைதான் மக்கானா என்று அழைக்கப்படுகின்றது.
மக்கானா விதைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
ஆறு மாத குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பித்ததும் மக்கா விதைகளை கஞ்சி போன்ற செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான மக்கானா கட்லட்
Ingredients
- 3 டே.ஸ்பூன் மக்கானா தாலியா பவுடர்
- 2 உருளைக்கிழங்கு
- 1 டீ.ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1 டீ.ஸ்பூன் சீரகத்தூள்
- 1 டீ.ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 டே.ஸ்பூன் நெய்
- தேவையான அளவு உப்பு
Notes
- உருளைக்கிழங்கை ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
- தோலை உரித்து நன்றாக மசிக்கவும்.
- மக்கானா தாலியா பவுடரை சேர்க்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்,சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
- கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
- மாவு பதத்திற்கு நன்றாக பிசையவும்.
- கைகளில் எண்ணெய் தடவி மாவினை கட்லட் போன்று தட்டி எடுக்கவும்.
- பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
Leave a Reply