Fruits Kolukattai in Tamil:குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான,ஆரோக்கியமான அன்னாச்சி பழ டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
விநாயகர் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள் என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கொழுக்கட்டையும்,சுண்டலும் தான். நான் வீட்டில் வழக்கமாக செய்வது அரிசிமாவு கொழுக்கட்டை நான்.
இனிமேல் அதில் இருந்து சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்யக்கூடிய கொழுக்கட்டை ரெசிபியை நான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம்.
இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நீங்கள் வேகவைக்க தேவையில்லை. கொடுக்கப்பட்ட பொருட்களை அடுப்பில் வைத்துக் கிளறி கொழுக்கட்டை அச்சில் பிடித்தால் உடனடி கொழுக்கட்டை ரெடி.
Fruits Kolukattai in Tamil
குழந்தைகளுக்கான அன்னாச்சி பழகொழுக்கட்டை
தேவையானவை
- நெய்- 2 டீஸ்பூன்
- துருவிய தேங்காய்- ஒரு கப்
- பால்கோவா -2 டேபிள்ஸ்பூன்
- ட்ரை புரூட்ஸ் பவுடர்-2 டே.ஸ்பூன்
- அன்னாச்சி பழம் -நறுக்கியது ஒரு கப்
- நாட்டுச் சர்க்கரை அல்லது கோக்கனட் சுகர்- ஒரு கப்
- மஞ்சள் தூள்-கால் டீ.ஸ்பூன்
- ஏலக்காய்த்தூள் -கால் டீ.ஸ்பூன்
- குங்குமப்பூ- கால் டீ.ஸ்பூன்
Fruits Kolukattai in Tamil
இதையும் படிங்க:குழந்தைகளுக்கான சுரைக்காய் அல்வா
Fruits Kolukattai for Babies in Tamil
செய்முறை
1.பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
2.துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு தேங்காய் துருவலின் நிறம் மாறாமல் லேசாக வறுக்கவும்.
3.பால் கோவா சேர்த்து கலக்கவும்.
4.டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்த்து கலக்கவும்.
5.நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
6.மஞ்சள் தூள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.
7.நாட்டுச் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து கிளறவும்.
8.ஆறவிடவும்.
9.கொழுக்கட்டை அச்சில் நெய் தடவவும்.
10.கொழுக்கட்டை மாவினை வைத்து அச்சு பிடிக்கவும்.
ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த கொழுக்கட்டையினை கொடுக்கலாம்.அன்னாச்சி பழத்தில் வைட்டமின் சி,ஜின்க்,மாங்கனீஸ் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
மேலும் இதில் உலர் பழங்கள் சேர்த்துள்ளதால் கொழுக்கட்டைக்கு சுவையை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்களை அளிக்கவல்லது.
இனி உங்கள் வீடுகளில் கொழுக்கட்டை செய்யும் போது இந்த மாதிரி கொழுக்கட்டையை குழந்தைகளுக்கு செய்து தாருங்கள்.இனி வாரவாரம் உங்க வீட்டில் பண்டிகை தான்…!.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
குழந்தைகளுக்கான அன்னாச்சி பழகொழுக்கட்டை
Ingredients
- 2 டீ.ஸ்பூன் நெய்
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 டே.ஸ்பூன் பால்கோவா
- 2 டே.ஸ்பூன் ட்ரை புரூட்ஸ் பவுடர்
- 1 கப் (நறுக்கியது) அன்னாச்சி பழம்
- 1 கப் நாட்டுச் சர்க்கரை அல்லது கோக்கனட் சுகர்
- கால் டீ.ஸ்பூன் மஞ்சள் தூள்
- கால் டீ.ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
- கால் டீ.ஸ்பூன் குங்குமப்பூ
Notes
- பானில் நெய் ஊற்றி சூடாக்கவும்.
- துருவிய தேங்காய் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு தேங்காய் துருவலின் நிறம் மாறாமல் லேசாக வறுக்கவும்.
- பால் கோவா சேர்த்து கலக்கவும்.
- டிரை ஃப்ரூட்ஸ் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- நறுக்கிய அன்னாசிப்பழம் சேர்த்து ஒரு கிளறு கிளறவும் .
- மஞ்சள் தூள், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும்.
- நாட்டுச் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அடுப்பில் வைத்து கிளறவும். ஆறவிடவும்.
- கொழுக்கட்டை அச்சில் நெய் தடவவும்.
- கொழுக்கட்டை மாவினை வைத்து அச்சு பிடிக்கவும்.
Leave a Reply