instant oats aval mix: சிறு குழந்தைகளுக்கு முதன் முதலாக நன்றாக உணவு ஊட்டும் பொழுது குழந்தைகள் ஆர்வமாக வாங்கி சாப்பிடுவதினால் நாமும் விதவிதமான உணவினை செய்து கொடுப்போம். இதெல்லாம் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அதற்குப் பிறகு என்ன உணவு கொடுத்தாலும் குழந்தைகள் நாட்டம் இல்லாமல் உணவை மறுக்க ஆரம்பிப்பார்கள். அந்த மாதிரி சமயத்தில் வேறு ஏதேனும் உணவை சட்டென்று விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்று நாம் நினைத்தால் திரும்பவும் மெனக்கெடுத்து செய்ய முடியாத அம்மாக்களுக்கு ஏற்ற உணவு தான் இன்ஸ்டன்ட் பவுடர்கள்.
மேலும் சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு வெகு தூரம் பயணம் செய்தால் உணவு கொடுப்பதற்கு சிரமம் ஏற்படும் என நினைத்து சிறு குழந்தைகளை நாம் பொதுவாக வெளியில் அழைத்துச் செல்ல மாட்டோம்.
ஆனால் கையில் ஆரோக்கியமான ஹோம் மேட் இன்ஸ்டன்ட் மிக்ஸ் இருந்தால் நாம் தைரியமாக குழந்தைகளுடன் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம்.
அதுமட்டுமல்லாமல் குழந்தை ஒரு உணவினை மறுக்கும் பொழுது இன்ஸ்டன்ட் மிக்ஸ் இருந்தால் மறுபடியும் வேறு உணவை சட்டென்று தயாரித்து குழந்தைகளுக்கு ஊட்ட வசதியாக இருக்கும்.
ஆனால் அப்படி கொடுக்கும் இன்ஸ்டன்ட் மிக்ஸ் சாதாரணமாக இல்லாமல் குழந்தைகளுக்கு தேவையான எல்லா வைட்டமின்களும் கலந்து இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் சத்தான உணவை கொடுத்த திருப்தி ஏற்படும் தானே.
அதற்கான ரெசிபி தான் நாம் இன்று பார்க்கவிருக்கும் அவல் ஓட்ஸ் இன்ஸ்டன்ட் மிக்ஸ்.
இதில் கலந்திருக்கும் ஓட்ஸ் மற்றும் அவல் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அள்ளித் தரும் என்பதால் இவற்றினை இன்ஸ்டன்ட் மிக்ஸ் ஆக செய்து வைத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு தேவைப்படும் பொழுது உடனடியாக நாம் நிமிடத்தில் உணவு தயாரித்து விடலாம்.
instant oats aval mix:
instant oats aval mix
அதற்கு முன்பாக இதில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:
- ஓட்சில் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,புரோட்டின், வைட்டமின்கள், மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன.
- அவலானது இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் பல வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் கொண்டுள்ளன.
- ஓட்ஸில் நார்ச்சத்துக்கள் அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனை ஏற்படாமல் தடுக்க கூடியது. அவலும் நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவு என்பதால் இவை இரண்டும் சேர்த்துக் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு செரிமானம் செய்வதற்கு ஏற்ற உணவாக இருக்கும்.
- ஓட்ஸ் மற்றும் அவல் இரண்டுமே எனர்ஜி நிறைந்த உணவு என்பதால் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியினை அளிக்கவல்லது.
- ஓட்ஸ் என்பது உடலில் கொலஸ்ட்ரால் லெவலை கண்ட்ரோலாக வைக்கக்கூடிய உணவு என்பதால் ஆரோக்கியமான இதய வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும்.
- ஓட்ஸ் மற்றும் அவல் இரண்டுமே குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்யும் தன்மை உடையவை.
- சில குழந்தைகளுக்கு உணவு ஊரில் உள்ள க்ளுட்டன் எனப்படும் பொருளானது அலர்ஜி ஏற்படுத்தும் ஆனால் இதில் அந்த வேதிப்பொருள் இல்லாததால் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- ஓட்ஸ் மற்றும் அவல் இரண்டையும் வைத்து விதவிதமான உணவு வகைகளை செய்யலாம் என்பதால் இவற்றுடன் குழந்தைகளுக்கு தேவையான பலகூல் ஆகியவற்றை சேர்க்கும் பொழுதும் இதன் சுவை மாறுபடாது .
instant oats aval mix
தேவையானவை
- ஓட்ஸ்- அரை கப்
- அவல்- அரை கப்பு
- முந்திரி – 4 – 5
- பாதாம் – 4-5
- ஏலக்காய் 1
instant oats aval mix:
செய்முறை
- கடாயில் ஓட்ஸினை லேசாக மணம் வரும் வரை வறுக்கவும்.
- அதற்குப்பின் முந்திரி, பாதாம் போன்றவற்றை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.கடிக்கும் பொழுது மொறுமொறுப்பாக இருக்க வேண்டும். அந்த பதத்திற்கு வறுக்க வேண்டும்.
- அதற்கு பிறகு அவலை சேர்த்து மொரு மொருப்பாகும் வரை வறுக்கவும்.
- முந்திரி, பாதாம், அவல் அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- இதை வைத்து உணவு தயாரிப்பது எப்படி?
- நன்கு புகை வரும் அளவிற்கு கொதிக்க வைத்த தண்ணீரை பயணம் செய்யும்பொழுது உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
- இன்ஸ்டன்ட் மிக்ஸ் பவுடரில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு கட்டிகள் இல்லாமல் கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- வீட்டில் தயார் செய்யும் பொழுது தண்ணீரை கொதிக்க வைத்து மூன்று முதல் நான்கு டேபிள் ஸ்பூன் பவுடரை அதனுடன் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- நீங்கள் இன்னும் சத்தாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் குழந்தைகளுக்கு பிடித்த பழத்தினை கூழாக்கி இந்த மிக்ஸுடன் கலந்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- இதனை காற்று போகாத டப்பாவில் அடைத்துவைத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
instant oats aval mix:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு இந்த இன்ஸ்டன்ட் மிக்ஸ் கொடுக்கலாமா?
ஆம் எட்டு மாதத்திற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த இன்ஸ்டன்ட் மிக்சினை நீங்கள் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு அவல் கொடுப்பது உடல் எடையை அதிகரிக்குமா?
ஆம்.அவலில் புரோட்டீன் அதிகம் என்பதால் குழந்தைகளின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது.
அவல் ஓட்ஸ் இன்ஸ்டன்ட் மிக்ஸ்
Ingredients
- ஓட்ஸ்- அரைகப்
- அவல்- அரை கப்
- முந்திரி -4 – 5
- பாதாம் – 4 – 5
- ஏலக்காய் 1
Leave a Reply