Kambu Idli in Tamil: ஆடம்பரமான நாகரீக உணவுகளின் மேல் நாட்டம் செலுத்திய காலம் மலையேறி, நம் பாரம்பரிய உணவுகள் தான் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்பதை இன்றைய தலைமுறை அம்மாக்கள் உணர ஆரம்பித்து விட்டனர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இதற்கு சாட்சி நமது பாரம்பரிய உணவான முளைகட்டிய சத்து மாவு தான் எங்களது நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் உணவாகும்.
நமது பாரம்பரிய தானியங்களை முளைகட்டி வறுத்து அரைத்து அதனை கஞ்சியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது எல்லா தானியங்களிலும் உள்ள சத்துக்கள் அனைத்தும் பல மடங்கு குழந்தைகளுக்கு கிடைக்கும்.
எனவேதான் கடைகளில் விற்கப்படும் ஷெர்லாக் மற்றும் ஹெல்த் மிக்ஸ் ஆகியவற்றை கொடுத்து பழகிய நாட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விழிப்புணர்வு அனைவரின் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
அவை மட்டுமல்லாமல் நாம் அன்றாடம் கொடுக்கும் உணவிலும் சிறுதானியங்களை எப்படி குழந்தைகளுக்கு கொடுப்பது என்பதை பற்றி தான் அனைத்து அம்மாக்களின் சிந்தனையாக உள்ளது. ஏனென்றால் நம் முன்னோர்கள் சிறுதானியங்களை கஞ்சி மற்றும் கூலாக காய்ச்சி குடித்தனர்.
ஆனால் அனைத்தையும் சுவையாக சாப்பிட்டு பழகிய நமது நாக்கிற்கு அதை மருந்து போன்று தான் உட்கொள்வோம். எனவேதான் சிறுதானியங்களை வைத்து சுவையாக எப்படி உணவு சமைப்பது எப்படி என்பதைப் பற்றிய இன்றைய தேடல் அதிகமாகியுள்ளது.
இதுவரை ராகி தோசை, கம்பு தோசை, சிறுதானிய கஞ்சி என பல ரெசிபிகளை நாம் பார்த்திருப்போம். அதிலிருந்து வித்தியாசமாக இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபி குழந்தைகளுக்கான ஆரோக்கியமான கீரை கம்பு இட்லி.
Kambu Idli in Tamil:
கீரை மற்றும் கம்பு ஆகிய இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியமான ஒன்றுதான். எனவே இந்த இரண்டையும் ஒன்று போல குழந்தைகளுக்கு கொடுத்தால் அம்மாக்களுக்கு குஷியாக இருக்கும் தானே. அப்படி ஒரு ரெசிபி தான் இந்த கீரை கம்பு இட்லி. இதைப் பார்ப்பதற்கு முன்னால் கம்பு மற்றும் கீரையில் இருக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
Kambu Idli in Tamil
- கம்பில் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான புரோட்டின், நார் சத்துக்கள், பாஸ்பரஸ்,மெக்னீசியம் மற்றும் வைட்டமின் பி அதிகம் உள்ளது.குழந்தைகளின் எலும்புகள் தசைகள் மற்றும் மூளைகளின் சிறப்பான வளர்ச்சிக்கு கம்பு இன்றியமையாதது.
- கம்பில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு விளையாட தேவையான எனர்ஜியை அளிக்கக்கூடிய உணவாகும்.
- எனவே காலை நேரத்தில் குழந்தைகளுக்கு உணவாக இந்த இட்லியை கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
- கம்பில் நார் சத்துக்கள் அதிகம் உள்ளதால் உணவினை எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது. எனவே மலச்சிக்கல் வராமல் தடுக்கக் கூடியது.
- கீரையில் வைட்டமின் ஏ , சி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் கள் நிறைந்துள்ளது. எனவே குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றது.
- கீரையில் உள்ள இரும்புச்சத்து குழந்தைகளுக்கு ரத்த சோகை போன்றவை வராமல் தடுக்க கூடியது. மேலும் மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது.
- கம்பில் உள்ள மெக்னீசியம் எனப்படும் சத்தானது தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றது.
- குழந்தைகளுக்கு வளர்ச்சிக்கு தேவையான தசைகளில் இயக்கத்திற்கு இந்த சத்து உதவுகின்றது.
- கீரையில் உள்ள வைட்டமின் பி கெட்ட கொழுப்புகளை குறைத்து சீரான இதய இயக்கத்திற்கு உதவுகின்றது.
- மேலும் கீரையில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குழந்தைகளின் பார்வைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது அது மட்டுமல்லாமல் சருமம் மற்றும் கூந்தல் வளர்ச்சியடைய உதவுகின்றது.
Kambu Idli in Tamil:
- கம்பு மாவு -ஒரு கப்
- தயிர்- அரை கப்
- கீரை -ஒரு பிடி
- துருவிய கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகள்- கால் கப் சீரகம்- ஒரு டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு
Kambu Idli in Tamil:
செய்முறை
- கம்பு மாவுடன் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு ஓரமாக வைக்கவும்.
- கீரையினை மூன்று முதல் நான்கு நிமிடங்களுக்கு உப்பு தண்ணீரில் வேக வைக்கவும்.அதற்கு பின்னர் குளிர்ந்த நீரில் இரண்டு நிமிடங்களுக்கு வைக்கவும்.
- கீரையை நன்றாக அரைத்து அதனுடன் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள், கலந்து வைத்த கம்பு தயிர் கலவை ஆகியவற்றை சேர்க்கவும்.
- இதனை தாளித்து இட்லி மாவுடன் இந்த கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- இட்லி குக்கரில் மாவினை ஊற்றி எப்பொழுதும் போல் இட்லி வேக வைத்து எடுக்கவும்.
- இதனுடன் கம்பு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு நன்மை அளிக்கும் கேரட் போன்ற காய்கறிகளும் சேர்த்துள்ளதால் மிகவும் சத்தான காலை உணவாக இட்லி அமையும். ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு இந்த இட்லியை கொடுக்கலாம்.
Kambu Idli in Tamil:
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
குழந்தைகளுக்கு எப்பொழுது இந்த கீரை இட்லியை கொடுக்க ஆரம்பிக்கலாம்?
குழந்தைகளுக்கு ஒரு வயதிற்கு மேல் இந்தக் கீரை இட்லியை கொடுக்கலாம்.
இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
குழந்தைகளுக்கு தேவையான புரோட்டீன்கள், மினரல்கள், நார் சத்துக்கள் ,இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இட்லி மிருதுவாக வர என்ன செய்ய வேண்டும்?
இட்லி மிருதுவாகவும் உப்பியும் வர வேண்டுமென்றால் மாவினை முதலில் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
இட்லியினை இன்னும் சத்துள்ளதாக கொடுக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?
இட்லியினை குழந்தைகளுக்கு கவரும் வண்ணம் கொடுக்க வேண்டும் என்றால் கேரட்டுடன், பீட்ரூட் போன்றவை சேர்த்து கொடுக்கலாம்.
Leave a Reply