Keerai Cream soup in Tamil: கீரை சாப்பிடாத குழந்தைகளை விரும்பி சாப்பிட வைக்கும் வித்யாசமான டேஸ்டியான ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கீரை என்ற வார்த்தையை கேட்டாலே நம் குழந்தைகள் தலை தெறிக்க ஓடி விடுவர்.கீரையில் தான் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.ஆனால் அதை நாம் சூப்,பொரியல்,குழம்பு போன்ற எந்த வகையில் செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்ப மாட்டார்கள்.இதை தவிர வேறு எப்படி செய்தால் குழந்தைகள் விரும்புவார்கள் என்று யோசிக்கின்றீர்களா?இதோ உங்களுக்கான ரெசிபி.இதில் கிரீம் கலந்துள்ளதால் நாம் வழக்கமாக செய்யும் சூப் போன்று இல்லாமல் வித்யாசமான பிளேவரில் டேஸ்டாக இருக்கும்.குழந்தைகளுக்கு நிச்சயமாக பிடிக்கும்.
கீரை கிரீம் சூப்
Keerai Cream soup in Tamil:
தேவையானவை
- அரைத்த கீரை விழுது – 4 டே.ஸ்பூன்
- பூண்டு(சீவியது)- 1 பல்
- கோதுமை மாவு – 1 டே.ஸ்பூன்
- பால் – 11/2 கப்
- மிளகுத்தூள் – இம்மியளவு
- பட்டர் – 1 டே.ஸ்பூன்
- பிரெஷ் கிரீம்- 2 டே.ஸ்பூன்
- உப்பு – தேவையானளவு (1 வயதிற்கு மேல்)
Keerai Cream soup in Tamil:
செய்முறை:
1.நான்-ஸ்டிக் பானை சூடாக்கி பட்டரை எடுத்து கொள்ளவும்.
இதையும் படிங்க: சளி இருமலை போக்கும் மிட்டாய்
2.பூண்டை அதில் போட்டு வதக்கவும்.
3.கோதுமை மாவை அதில் போட்டு 2 நிமிடங்களுக்கு வறுக்கவும்.
4.பாலை ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
5.பால் நன்றாக கொதித்ததும் மிதமான தீயில் வைத்து மிளகுத்தூள் சேர்க்கவும்.
6.மசித்து வாய்த்த கீரை சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும்.
இதையும் படிங்க: கொத்தமல்லி வெஜிடபிள் ரைஸ்
7.தேவையானளவு உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.
8.கடைசியாக பிரெஷ் கிரீம் சேர்க்கவும்.
9.இளஞ்சூட்டுடன் பரிமாறவும்.
கீரையில் இயற்கையாகவே வைட்டமின் ஏ,சி,கே,இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் அடங்கியுள்ளது.மேலும் கீரை உண்பது கண்களுக்கு மிகவும் நல்லது. குழந்தைகளின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது கீரை.இதை காலை நேர உணவுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாகவும் கொடுக்கலாம்.
உங்கள்குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மற்றும் புதுமையான ரெசிபிக்களை காண My Little Moppet Tamil யு-டியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.
Leave a Reply