Keerai Idly: குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு கொடுப்பதற்குள் அம்மாக்களுக்கு இரண்டு முறை பசித்து விடும். ஆரோக்கியமான உணவினை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பெற்றோர்கள் அந்த அளவிற்கு பாடுபட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஏனென்றால் இந்த காலத்து குழந்தைகள் காய்கறிகள் என்றாலே பத்து எட்டு தள்ளி ஓடி விடுவர். பழங்களை கூட ஜூஸாக பிழிந்து சுவையாக கொடுத்தால் மட்டுமே சாப்பிடுகின்றனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக கீரை என்ற வார்த்தையை சொன்னாலே அலறியடித்து எகிறி குதித்து ஓடி விடுவர்.
உண்மையில் சொல்லப்போனால் கீரையில் தான் எல்லா வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்துள்ளன.அப்படி என்றால் குழந்தைகளை எப்படியாவது கீரை சாப்பிட வைக்க நாம் மாற்று வழி தான் யோசித்து ஆக வேண்டும்.
அதற்காக நான் யோசித்த மாற்று வழி தான் இந்த கீரை இட்லி. இட்லி மற்றும் கீரை இவை இரண்டுமே குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு அல்ல ஆனால் இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து கொடுக்கும் பொழுது இட்லியின் நிறத்தின் காரணமாக குழந்தைகள் வித்தியாசமாக உள்ளது என்று விரும்பி உண்பர்.
கீரையை தனியாக கொடுப்பதை காட்டிலும் இவ்வாறு இட்லியுடன் சேர்ந்து கொடுப்பதால் சுவையும் வேறுபட்டு இருப்பதால் கட்டாயம் குழந்தைகளுக்கு பிடித்த உணவாக இது இருக்கும். கீரையில் பச்சையம் நிறைந்துள்ளதால் பொதுவாகவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஒரு உணவு தான். எனவேதான் மருத்துவர்கள் ஆன நாங்களும் வாரம் ஒரு முறை கீரை சாப்பிட சொல்லி அறிவுறுத்துகின்றோம்.
கீரையை பொறுத்தவரை இந்த ரெசிபிக்கு அரைக்கீரை, பாலக்கீரை போன்ற கீரைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த இரண்டு கீரைகளும் பச்சையாக இருப்பதால் இட்லிக்கு நல்ல நிறத்தை கொடுக்கும்.
Keerai Idly
Keerai Idly
ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் கீரையில் அடங்கியுள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- கீரையில் பொதுவாகவே வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சொல்ல போனால் வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை அடங்கியுள்ள சத்தான உணவாகும்.
- அது மட்டுமல்லாமல் இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கின்றது.
- கீரையைப் பொறுத்தவரை வைட்டமின் ஏ அதிகம் என்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை தொடர்ந்து கீரை கொடுக்கும் பட்சத்தில் குழந்தைகளுக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் இருக்காது.
- கீரையில் வைட்டமின் சி அதிகம் என்பதால் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க கூடியது.
- கீரையில் இருக்கும் நார்ச்சத்து உணவை எளிதில் செரிமானமாக செய்கின்றது.
- கீரையில் அதிகமாக நிறைந்துள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகிய இரண்டும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றது. எனவே எதிர்காலத்தில் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்று நினைப்பவர்கள் தாராளமாக கீரையை உட்கொண்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம்.
- கீரையில் நிறைந்துள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க வல்லது.
- மேலும் நாள் முழுவதும் உடல் உறுப்புகள் இயங்குவதற்கு தேவையான சக்தியை அளிக்கவல்லது.
- கீரையில் நிறைந்துள்ள பொட்டாசியம் சத்து உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு உதவுகின்றது. மேலும் இதயத்தின் சீரான இயக்கத்திற்கு இந்த பொட்டாசியம் மிகவும் அவசியமாகும்.
- எனவே குழந்தைகளின் ஆரோக்கியமாக வளர்ச்சிக்கு வாரம் ஒரு முறை கீரையை மசியலாகவோ, சூப்பாகவோ, பொறியலாகவோ அல்லது நான் சொன்னபடி இட்லியாகவோ செய்து தரலாம்.
Keerai Idly
- இட்லி மாவு -ஒரு கப்
- பொடியாக நறுக்கிய கீரை- ஒரு கப்
- துருவிய கேரட்- அரை கப்
- சீரகம் -அரை டீஸ்பூன்
- உப்பு -தேவையான அளவு.
Keerai Idly
செய்முறை
- எப்பொழுதும் போல் அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து அரைத்து குளிக்க வைத்து இட்லி மாவினை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- கீரையை வேக வைத்துக் கொள்ளவும் அல்லது கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு எடுத்துக் கொள்ளவும்.
- மிக்சியில் நன்கு பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும்.
- கீரை கலவையை மாவில் சேர்த்து அதனுடன் துருவிய கேரட் மற்றும் சீரகம் சேர்த்து கலக்கவும்.
- பின்பு இட்லி தட்டில் ஊற்றி எப்பொழுதும் இட்லி வேக வைப்பது போன்ற வேக வைத்து எடுக்கவும்.\
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
துருவிய பீட்ரூட்,சர்க்கரைவள்ளிக்கிழங்கு அல்லது பொடியாக நறுக்கிய குடைமிளகாய் போன்றவை சேர்த்தும் கொடுக்கலாம்.
இதனை மினி இட்லியாக கொடுக்கலாமா?
தாராளமாக மினி இட்லி தட்டில் ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஆரோக்கியமான கீரை இட்லி
Ingredients
- இட்லிமாவு -ஒரு கப்
- பொடியாகநறுக்கிய கீரை- ஒரு கப்
- துருவியகேரட்- அரை கப்
- சீரகம்-அரை டீ.ஸ்பூன்
- உப்பு-தேவையான அளவு
Leave a Reply