Kothamalli Aval : குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு கொடுப்பது ஒரு பெரிய வேலை என்றால் அதைவிட பெரிய வேலை குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுப்பதுதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளின் மனமானது ஆரோக்கியமற்ற சிப்ஸ்கள் மற்றும் பேக்கரி வகைகளை விரும்பும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான வகையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது.
அதனால் தான் சிறுதானியங்களில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்பதற்கான பல்வேறு வகையான ரெசிபிகளை நாம் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது வீட்டில் இருக்கும் எளிமையான பொருளை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி வகையாகும்.
இதற்கு நாம் பெரியதாக மெனக்கிட தேவையில்லை வீட்டில் நாம் சாதாரணமாக அரிசி அவல் போதுமானதாகும். இதனை குழந்தைகளுக்கு பிடித்தவாறு துருவிய தேங்காய், நிலக்கடலை பருப்பு, கொத்தமல்லி இலைகள் மற்றும் கடுகு கருவேப்பிலை கொண்டு தாளித்து ருசியாக செய்து கொடுக்கலாம்.
ருசியாக மட்டுமல்லாமல் இதில் சேர்க்கப்பட்டிருக்கும் உட்பொருள் அனைத்தும் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது என்பதால் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இதனை செய்து கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு முதல் முதலாக உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுக்கக்கூடிய உணவு அவல் என்பதால் குழந்தைகளுக்கு எந்த வித உடல் உபாதைகளையும் இது ஏற்படுத்தாது.
Kothamalli Aval
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் அரிசி அவலில் சேர்ந்திருக்கும் நன்மைகளை பார்க்கலாம்:

- எளிதில் செரிமானமாக கூடியது.
- குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் எளிதாக இருக்கும் என்பதால் குழந்தைகளின் செரிமான மண்டலத்திற்கு பாதுகாப்பானது.
- உடனடியான ஆற்றலை அளிக்க கூடியது.
- கார்போஹைட்ரேட் அவலில் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான சக்தியை அளிக்கும்.
- உடல் இரும்பு சத்துக்களை கிரகித்துக் கொள்வதற்கு துணை புரிகின்றது.
- அவல் மற்றும் கொத்தமல்லி இலையில் இருக்கும் இரும்பு சத்துக்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகின்றன.
- குளூட்டின் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம்.
- அவல் காரமாக சாப்பிடுவதற்கும், இனிப்பு கலந்து சாப்பிடுவதற்கும், காய்கறிகள், நட்ஸ் மற்றும் பழங்கள் கலந்து சாப்பிடுவதற்கும் ஏற்றதாகும்.
- எளிதாக சாப்பிட விரும்புவோருக்கு காலை நேர டிபன் ஆகவும் இதனை கொடுக்கலாம்.
Kothamalli Aval
தேவையானவை
- அரிசி அவல்- அரை கப்
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள்-அரை கப்
- துருவிய தேங்காய்-2 டேபிள் ஸ்பூன்
- வறுத்த நிலக்கடலை- அரை கப்
- இஞ்சி- சிறிதளவு
- கடுகு -கால் டீ.ஸ்பூன்
- சீரகம் -கால் டீ.ஸ்பூன்
- கருவேப்பிலை- சிறிதளவு
- மஞ்சள்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- நெய் அல்லது எண்ணெய் -1-2 டீ.ஸ்பூன்
Kothamalli Aval
செய்முறை
- அவலினை கழுவி தண்ணீரை வடிகட்டி ஐந்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- மிக்ஸியில் கொத்தமல்லி இலைகள், தேங்காய், இஞ்சி உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைக்கவும்.
- கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றவும் அதனுடன் கடுகு சீரகம் நிலக்கடலை மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- ஏற்கனவே அரைத்து வைத்த விழுதனை அதில் போட்டு பச்சை வாசனை வரும் வரை வதக்கவும்.
- மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- ஊற வைத்து அவல் அதனுடன் சேர்ந்து நன்றாக கிளறவும்.
- இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து கிளறி பின்பு இறக்கவும்.
இதனை செய்வதற்கு வீட்டில் உள்ள சாதாரண பொருட்களை போதும் என்பதால் சட்டுன்று குழந்தைகளுக்கு ருசியான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்.
சத்தான உணவுகள் சாப்பிட ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு இம்மாதிரியான உணவுகளில் அதனை மறைமுகமாக கலந்து கொடுக்கும் பொழுது அவர்களுக்கு அந்த சத்துக்கள் போய் சேரும்.
ஸ்நாக்ஸுக்காக மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள அனைவரும் அமர்ந்து காலை நேர டிபன் ஆகவும் ருசித்து சாப்பிடலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.

Kothamalli Aval
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. அவல் குழந்தைகளுக்கு கொடுத்தால் எளிதில் செரிமானம் ஆகுமா?
அவல் குழந்தைகளுக்கு எளிதாக செரிமானமாகும் என்பதால் தாராளமாக செய்து கொடுக்கலாம்.
2. அவல் எத்தனை வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்?
3. குழந்தைகளுக்கு இனிப்பு அவுல் செய்து கொடுக்கலாமா?











Leave a Reply