mushroom sandwich: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறு தானியங்களை எப்படி சுவையாக கொடுப்பது என்பதை பற்றி தான் சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய கஞ்சி என பல வகை ரெசிபிகளாக நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆனால் இவற்றையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உங்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா. அதற்காகத்தான் குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம்.
mushroom sandwich:
மற்ற ரெசிபிகளை போலல்லாமல் சீக்கிரமாக செய்ய முடியும் என்பதால் அம்மாக்களுக்கும் இது மிகவும் பிடித்த ரெசிபியாக இருக்கும். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் உள்ள நன்மைகளை பார்க்கலாம்.
- காளான் மற்றும் குடைமிளகாய் இரண்டுமே ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும்.காளான்களில் வைட்டமின் பி எனப்படும் சத்து நிறைந்துள்ளது.
- அது மட்டுமல்லாமல் செலினியம் ,காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. குடைமிளகாயில் வைட்டமின் சி வைட்டமின் ஏ மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
- காளானில் உள்ள வைட்டமின் பி எனப்படும் ஊட்டச்சத்து குழந்தைகளுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கவும், மூளை சுறுசுறுப்பாக இயங்கவும் துணை புரிகின்றது.
- குடைமிளகாயில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது.
- காளானில் காணப்படும் பீட்டா குளுகான் எனப்படும் சத்தானது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது.
- காளான் மற்றும் குடைமிளகாய் இரண்டிலும் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் செல்கள் சிதைவடையாமல் பாதுகாக்கின்றன.
- இரண்டிலும் நார் சத்துக்கள் அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் அண்டாமல் தடுக்க கூடியது.
- குடைமிளகாயின் சுவை மற்றும் நிறம் போன்றவை குழந்தைகளை மேலும் மேலும் காய்கறி உண்பதற்கு ஊக்கப்படுத்த உதவும்.
mushroom sandwich:
mushroom sandwich:
- காளான்- 1 கப்
- குடைமிளகாய் -1 கப்
- நறுக்கிய வெங்காயம் -1
- பூண்டு- 2 பல்
- ஆலிவ் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்- 1 டீஸ்பூன்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்- தேவையான அளவு
- கோதுமை பிரட் – 4 துண்டு
- சீஸ் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- தவாவை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் ஆலிவ் ஆயில் அல்லது ஆலிவ் பட்டர் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- கழுவி நறுக்கிய மஸ்ரூம் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை சேர்க்கவும். தண்ணீர் விடும் வரை நன்கு வதக்கவும்.
- இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் இல்லை எனில் சீரகத்தூள், தனியா தூள் போன்றவை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பிரெட்டினை முக்கோண வடிவத்தில் நறுக்கி அதில் வதக்கிய கலவையை பரப்பவும். தேவைப்பட்டால் சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
- மற்றொரு பிரட் தூண்டினை மேலே வைத்து மிதமான சூட்டில் லேசாக வைத்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கு சாஸ் வைத்து கொடுக்கலாம். சாண்ட்விச் என்றால் துரித உணவு என்று தவிர்ப்பதற்கு பதிலாக அதையே குழந்தைகளுக்கு எப்படி ஆரோக்கியமாக கொடுக்க வேண்டும் என்பதை தான் நாம் செய்து கொடுக்க வேண்டும்.
- இப்படி ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் காளான் போன்றவை சேர்த்து செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை சாப்பிட்ட திருப்தி ஏற்படும். காலை நேர உணவையும் தவிர்க்காமல் சாப்பிட்டு முடித்து விடுவர்.
mushroom sandwich:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
எந்த வகை காளான் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாமா?
சாப்பிடும் தன்மையுடைய எந்த காளானையும் உபயோகித்துக் கொள்ளலாம். ஆனால் அவை நன்கு சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த சாண்ட்விச்சினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
உள்ளே உள்ள காய்கறி மற்றும் மஸ்ரூம் எல்லாம் நன்றாக வெந்துள்ளதா என்று உறுதி செய்து கொண்டு ஒரு வயதுக்கு மேலே உள்ள குழந்தைகள் முதல் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
வேறு காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாமா?
ஆம். தக்காளி, கேரட், கீரை போன்றவற்றையும் சேர்த்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மேலும் வண்ணமயமான சாண்ட்விச் தரலாம்.
எந்த வகையான பிரட் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாமா?
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மல்டி கிரைன், கோதுமை போன்ற பிரெட் வகைகளை உபயோகித்துக் கொள்ளலாம். மைதா பிரட்டினை தவிர்ப்பது நல்லது.
காளான் குடைமிளகாய் சாண்ட்விச்
Ingredients
- காளான்- 1 கப்
- குடைமிளகாய் -1 கப்
- நறுக்கிய வெங்காயம் -1
- பூண்டு- 2 பல்
- ஆலிவ் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
- மிக்ஸ்டு ஹெர்ப்ஸ்- 1 டீஸ்பூன்
- உப்பு மற்றும் மிளகுத்தூள்- தேவையான அளவு
- கோதுமை பிரட் - 4 துண்டு
- சீஸ் - 2 டேபிள் ஸ்பூன்
Notes
- தவாவை அடுப்பில் வைத்து லேசாக சூடானதும் ஆலிவ் ஆயில் அல்லது ஆலிவ் பட்டர் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- கழுவி நறுக்கிய மஸ்ரூம் மற்றும் குடைமிளகாய் போன்றவற்றை சேர்க்கவும். தண்ணீர் விடும் வரை நன்கு வதக்கவும்.
- இதனுடன் உப்பு, மிளகுத்தூள், மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும். மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் இல்லை எனில்
- சீரகத்தூள், தனியா தூள் போன்றவை சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
- பிரெட்டினை முக்கோண வடிவத்தில் நறுக்கி அதில் வதக்கிய கலவையை பரப்பவும். தேவைப்பட்டால் சீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
- மற்றொரு பிரட் தூண்டினை மேலே வைத்து மிதமான சூட்டில் லேசாக வைத்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கு சாஸ் வைத்து கொடுக்கலாம்.
Leave a Reply