Nellikai Sadam : குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் அம்மாக்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு லஞ்ச் பாக்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் பாக்ஸில் என்ன பேக் செய்து தர வேண்டும் என்பதுதான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பள்ளிக்கு செல்வதற்கு முன் ஸ்கூல் பேக் மற்றும் லஞ்ச் பேக் ஆகிய இரண்டையும் கையில் எடுக்கும் பொழுதே “அம்மா இன்னைக்கு என்ன லஞ்ச்?” என்பது குழந்தைகள் கேட்கும் கேள்வி.
அப்படி கேட்கும் குழந்தைகள் முகத்தில் நீங்கள் மகிழ்ச்சியை காண வேண்டுமா? இந்த நெல்லிக்காய் சாதத்தை அவர்களுக்கு வீட்டில் செய்து கொடுங்கள். நெல்லிக்காயை வெறும் வாயில் சாப்பிடும் பொழுது புளிப்பாக இருக்குமே? அதை எப்படி சாதமாக செய்வது என்று யோசிக்கின்றீர்களா?
கவலை வேண்டாம் சாதத்தில் சுவையும் மாறாமல், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் குறைவில்லாமல் கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த நெல்லிக்காய் சாதம்.
இதை ஒரு முறை கொடுத்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு விருப்பமான லெமன் சாதம், தயிர் சாதம், பருப்பு சாதத்தில் பட்டியலில் இந்த நெல்லிக்காய் சாதமும் இடம்பெறும்.
அதே நேரம் மற்ற சாதத்தில் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயின் சிறப்பம்சங்களும் இதில் அடங்கியுள்ளதால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான மதிய உணவாக இது இருக்கும்.
Nellikai Sadam
Nellikai Sadam:
இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் நெல்லிக்காயில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
- நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- மேலும் நம் உடலுக்கு தேவையான இரும்பு சத்தினை வழங்கி முடி அடர்த்தியாக வளர்வதற்கும், சருமம் பளபளப்பாக இருப்பதற்கும் உதவி புரிகின்றது.
- நெல்லிக்காயில் இருக்கும் நார் சத்துக்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்கின்றது.
- இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளதால் நாள்பட்ட நோய்கள் வராமல் குழந்தைகளின் உடலை காக்கின்றது.
- நெல்லிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் என்பதால் குழந்தைகளுக்கு கண் பார்வையை அதிகரிக்கக் கூடியது.
- நெல்லிக்காய் நிறைந்திருக்கும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்பு வலுவாக இதற்கு உதவுகின்றது.
- நெல்லிக்காயில் இயற்கையாகவே உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் திறன் இருப்பதால் ரத்தம் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்துகிறது.
Nellikai Sadam
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- பொடிப்பொடியாக நறுக்கிய நெல்லிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 2
- கடுகு-1 டீஸ்பூன்
- சீரகம்-1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
- பெருங்காயம்- இம்மியளவு
- பச்சை மிளகாய்- காரத்திற்கு ஏற்ப
- கருவேப்பிலை- தாளிக்க தேவையான அளவு
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- தண்ணீர்- இரண்டு கப்
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
Nellikai Sadam
செய்முறை
- பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி 20-30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
- நெல்லிக்காயை கொட்டைகளை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை துருவி வைத்துக் கொள்ளவும்.
- வாணலியில் என்னை சேர்த்து, கடுகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- துருவிய நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும்.
- குக்கரில் வடிகட்டிய அரிசி, இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வைக்கவும்.
- சாதம் வெந்ததும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவினால் நெல்லிக்காய் சாதம் ரெடி குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு மட்டுமல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்கள் சாப்பிடுவதற்கும் இதுதான் இந்த நெல்லிக்காய் சாதம்.
- வாரம் ஒரு முறை இது செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Nellikai Sadam:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நெல்லிக்காய் சாதத்தினை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா?
தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது காரத்தினை அவர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றால் போல் கூட்டி குறைத்துக் கொள்ளவும்.
எத்தனை நாட்களுக்கு ஒரு முறை இந்த நெல்லிக்காய் சாதத்தை கொடுக்கலாம்?
வாரம் ஒரு முறை அல்லது இரு முறை செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
இதில் வைட்டமின் சி, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு ஆ
நெல்லிக்காய் சாதம்
Ingredients
- பாஸ்மதி அரிசி- 1 கப்
- பொடிப்பொடியாக நறுக்கிய நெல்லிக்காய்- 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 2
- கடுகு-1 டீஸ்பூன்
- சீரகம்-1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
- பெருங்காயம்- இம்மியளவு
- பச்சை மிளகாய்- காரத்திற்கு ஏற்ப
- கருவேப்பிலை- தாளிக்க தேவையான அளவு
- உப்பு- சுவைக்கு ஏற்ப
- தண்ணீர்- இரண்டு கப்
- கொத்தமல்லி இலைகள்- மேலே தூவ
Notes
பாஸ்மதி அரிசியினை நன்றாக கழுவி 20-30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். நெல்லிக்காயை கொட்டைகளை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை துருவி வைத்துக் கொள்ளவும். வாணலியில் என்னை சேர்த்து, கடுகு, பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். துருவிய நெல்லிக்காய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 2-3 நிமிடங்களுக்கு வதக்கவும். குக்கரில் வடிகட்டிய அரிசி, இரண்டு கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடங்களுக்கு வைக்கவும். சாதம் வெந்ததும் கொத்தமல்லி இலைகளை மேலே தூவினால் நெல்லிக்காய் சாதம் ரெடி
ரோக்கியமானது.
Leave a Reply