உங்கள் குழந்தை அடிக்கடி நோய்வாய்ப்படுகிறது என்ற கவலையா உங்களுக்கு? சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக உங்கள் குழந்தை அதிகம் பாதிக்கப்படுகிறதா?
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
கவலை வேண்டாம்!!! நோய்களை தடுக்கும் தன்மை கொண்ட எதிர்ப்பு சக்தி குழந்தைகளிடம் இருந்தால் போதும். அதன்படி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகளை உங்களுக்கு தந்துள்ளோம். இதனை குழந்தைகள் சாப்பிடும் போது எந்த சீசனாக இருந்தாலும் சரி அவர்களை நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்…
நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன?
நம் உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான சக்தியை வழங்கி, நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் தன்மை கொண்ட சக்திதான் நோய் எதிர்ப்பு சக்தி எனப்படுகிறது. இது நம் உடலோடு கட்டமைக்கப்பட்ட ஒரு விஷயம் தான். இது நம் உடலின் உள்ளே இருந்து நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. நோய்த் தொற்றுகள் மற்றும் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாப்பதே நோய் எதிர்ப்பு சக்தியின் முக்கியத்துவமாக இருக்கிறது.
நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாப்பதே இதன் பிரதான செயலாகும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்றவைகளால் ஏற்படும் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுவது தான் இதன் முக்கியமான பணி. குறிப்பாக எந்த பொருளால் நம் உடலுக்கு ஆபத்து நேர்கிறது என கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியை செய்கிறது இந்த நோய் எதிர்ப்பு சக்தி. தீங்கு தரும் இதுபோன்ற பொருட்களை அழித்து உடலை அவ்வப்போது புத்துணர்வாக மாற்றும் தன்மை கொண்டது.
சளி, இருமல் போன்ற தொற்றுநோய்களிடம் இருந்து நம் உடலை பாதுகாக்கும் அரண் போல இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நம் உடலில் உள்ளே மறைந்து இருந்து திறம்பட பங்காற்றுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உணவே இயற்கையான மருந்தாக இருக்கிறது. எளிமையாகவும், எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தாத வகையிலும், அதிக செலவு வைக்காமலும் உள்ள இந்த உணவு வகையை பின்பற்றி நாம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள முடியும். சிறந்த மற்றும் தரமான உணவை நாம் உட்கொள்வதன் மூலம் நம் உடலை ஆரோக்யமாகவும் நோய்கள் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள முடியும்.
1. பச்சை நிற காய்கறிகள்
முட்டைக்கோஸ், காலிபிளவர், கீரை வகைகள், ப்ரக்கோலி, தக்காளி மற்றும் பச்சை நிறத்தாலான காய்கறிகள் உடலில் ஏற்படும் தொற்றுநோய்களை எதிர்த்து போராடும் தன்மையை இயற்கையிலேயே கொண்டுள்ளது. இந்த காய்கறிகளில் எல்லாம் போதுமான சத்துகள், பீட்டா கரோட்டின், கேரட்டினாய்ட்ஸ் போன்ற உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் மற்றும் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளை வழங்குகிறது.
2. பூமிக்கு அடியில் விளையும் காய்கறிகள்
சீன மருத்துவத்தைப் பொறுத்தவரை நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் உணவுகளில் பிரதான இடம் பிடித்திருப்பது பூமிக்கு அடியில் விளைவிக்கப்படும் காய்கறிகள் தான். சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், உருளைக் கிழங்கு போன்ற காய்கறிகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உணவுக் குழாய் மற்றும் செரிமான மண்டலத்தை இது வலுவானதாக மாற்றும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.
3. பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சி
வெங்காயம் மற்றும் பூண்டில் உள்ள சல்பர் தன்மையானது கேன்சருக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. பூண்டு, வெங்காயம் மற்றும் இஞ்சி ஆகிய 3 பொருட்களில் உள்ள சல்பர் கலவை மற்றும் சேர்மப் பொருளானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டில் உள்ள அனிசிலின் என்ற சேர்மப் பொருளும், வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்ற பொருளும், இஞ்சியில் உள்ள ஷேகோல்ஸ் மற்றும் ஜிஞ்சரால்ஸ் என்ற கூட்டுப்பொருளும் நோய்களை நெருங்க விடாமல் எதிர்த்து போராடும் தன்மை கொண்டது.
மேலும் செரிமானக் கோளாறுகளை தடுப்பதுடன், வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்கிறது. மேலும் இதய ஆரோக்கியத்திற்கும் இந்த பொருட்கள் உகந்த ஒன்றாக இருக்கிறது.
4. கேப்சிகம்
மிளகாயில் உள்ள விதைகளில் அதிகமான கேப்சாய்சின் சத்துகள் நிரம்பி இருக்கிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்தானது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலை எதிர்த்து போராடும் தன்மை கொண்டதாக உள்ளது.
5. ஸ்குவாஷ் அல்லது பரங்கிக்காய்
இதில் ஏராளமான ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மாங்கனீசு, மக்னீசியம் போன்ற சத்துகளுடன் அதிகமான போலேட் சத்தும் இதில் இருக்கிறது.
6. ஆப்ரிகாட் அல்லது வாதுமை பழம்
இந்த பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்துகள் உள்ளன. குழந்தைகளுக்கு தேவையான அதிக நார்ச்சத்தும் இதில் உள்ளது.
7. சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்ச், எலுமிச்சை, கொய்யா பழம் போன்ற பழ வகைகளில் அதிகமான வைட்டமின் சி சத்தும் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகளும் உள்ளது.
8. பெர்ரி பழ வகைகள்
ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் கிரான்பெர்ரி போன்ற பெர்ரி பழ வகைகளில் பைட்டோ கெமிக்கல் மற்றும் பிளேவனாய்டு சத்துகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டதாக உள்ளது.
9. பருப்பு வகைகள்
பருப்பு வகைகளில் உள்ள புரதச்சத்து, போலேட் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
10. பச்சைப் பட்டாணி
பச்சைப் பட்டாணியில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளது. பிளேவனாய்ட், கேரட்டினாய்டு, பினோலிக் ஆசிட் மற்றும் பாலிபினால் போன்ற சத்துகள் அதிகம் நிரம்பி இருக்கிறது.
11. முளை கட்டிய தானியங்கள்
முளை கட்டிய உணவுப் பொருட்களில் சத்துகள் எல்லாம் பல மடங்கு அதிகரிக்கிறது. அதாவது ஒரு தானியம் முளைத்து வெளியே வரும் போது அதில் உள்ள சத்துகள் எல்லாம் ஊட்டம் மிக்க ஒன்றாக மாறி விடுகிறது. இந்த சத்துகளை உடல் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதுபோல் முளைகட்டிய தானியங்களை நீங்கள் பயன்படுத்தும் போது குழந்தைகளுக்கு தேவையான சத்துகளும் எளிதாகவே கிடைக்கும். முளை கட்டிய தானிய வகைகளில் இருந்து நீங்கள் சத்துமாவு மிக்ஸ் செய்யலாம். மேலும் முளை கட்டிய கேழ்வரகில் இருந்து பொடி செய்து அதனையும் குழந்தைக்கு தரலாம்.
12. கொட்டைகள் மற்றும் விதைகள்
பாதாம் போன்ற கொட்டை வகைகள், வால்நட், பரங்கி விதை, ஃப்லாக்ஸ் சீட்ஸ், சூரியகாந்தி விதை போன்ற விதை வகைகளையும் நீங்கள் குழந்தைக்கு தரலாம். இந்த இரண்டு பொருட்களிலும் அதிகமான வைட்டமின் இ சத்துகள் உள்ளன. இந்த சத்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயலாற்றுகிறது.
உலர் தானிய பொடியை நீங்கள் குழந்தைகளுக்காக வீட்டிலேயே தயாரிக்கலாம். உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்பினால் எங்களிடம் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்…
13. தயிர் மற்றும் யோகர்ட்
தயிரில் நல்ல பாக்டீரியா சத்து அல்லது புரோபயோடிக் எனப்படும் சத்துகள் உள்ளன. இந்த புரோபயாடிக் சத்துகள் நிரம்பிய பொருட்கள் இப்போது சந்தைகளில் அதிக அளவு கிடைக்கிறது. இதனை நீங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொருட்கள் அனைத்தும் உடலில் நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் தன்மை இந்த பொருட்களுக்கு உண்டு.
14. மஞ்சள்
மஞ்சளில் நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை உண்டு. இதில் உள்ள குர்குர்மின் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட் ஆக செயல்படுவதுடன், உயிர்வளியேற்ற எதிர்ப்பொருளாவும் உள்ளது.
உங்கள் குழந்தைக்கு மசாலா பொருட்களை எப்போது கொடுக்கலாம்? என்பது குறித்து தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யுங்கள்.
15. தேன்
தேனில் நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மை கொண்ட சத்துகள் உள்ளன. மேலும் குழந்தையின் தொண்டை பகுதியில் ஏற்படும் கரகரப்பை சரிசெய்கிறது.
கவனிக்க :
ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு தேன் கொடுக்க கூடாது
16. ஹெல்த் மிக்ஸ் வகைகள்
சிறுவர்களை பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் உணவு வகைகளை வேண்டாம் என்று சொல்லும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு நீங்கள் ஹெல்த் மிக்ஸ் வகைகளை கொடுக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் வகையில் அது அமைந்து விடும். மேலும் பருப்பு வகைகள், விதைகள், கொட்டைகள், தானியங்கள் என எல்லாம் ஒன்றாக சேர்த்து ஹெல்த் ட்ரிங்காக குழந்தைக்கு கொடுக்கும் போது அது அவர்களுக்கு பிடித்தமான ஒன்றாக மாறி விடுவதுடன் அவர்களுக்கு தேவையான சத்துகளையும் வழங்கும். கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்கலாம்…
சத்துமாவு ஹெல்த் மிக்ஸ்
முளைகட்டிய சத்துமாவு ஹெல்த் மிக்ஸ்
தானிய சத்துமாவு மிக்ஸ்
நேந்திரம் பழ பொடி
மல்டி கிரெய்ன் ஹெல்த் ட்ரிங்
“ஆரோக்கியமான உணவு தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படை”
இதுமட்டுமின்றி உங்கள் குழந்தைக்கு போதுமான தூக்கமும் அவசியம். குழந்தைக்கு தேவையான அளவு ஓய்வு கிடைக்கும் போது உடலில் செல்கள் சேதமாவது தடுக்கப்படுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் தன்மையும் கிடைக்கும்.
குழந்தைகளுக்கு மன அழுத்தம் மற்றும் கவலைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் தன்மை கொண்டது. இதுமட்டுமின்றி குழந்தைக்கு உடல் உழைப்பு அவசியம் தேவை. தினமும் கொஞ்ச நேரமாவது குழந்தையை வெளியே சென்று விளையாட அனுமதியுங்கள்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply