Oats kanji for babies in Tamil: குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்த உடனே நாம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஒன்று குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவில் அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆகியவை அடங்கிய உணவை கொடுக்க வேண்டும் என்பதே. ஆனால் இவற்றையெல்லாம் அடங்கிய காய்கறி மசியல்கள் மற்றும் பழங்கள் மசியல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு தினமும் கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு உணவின் மீது சலிப்பு ஏற்படும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படி என்றால் குழந்தைகளுக்கு எவ்வாறு உணவின் மீது நாட்டம் கொண்டு வருவது என்று தானே யோசிக்கின்றீர்கள்? குழந்தைகளுக்கு ஒரே வகையான உணவை திரும்பத் திரும்ப கொடுப்பதை காட்டிலும் நாம் அன்றாடம் கொடுக்கும் உணவின் சுவை, நிறம் மற்றும் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் ஆகியவற்றை சிறிதளவு மாற்றினாலே போதும் குழந்தைகளுக்கான சுவையான உணவு ரெடியாகிவிடும்.அப்படி ஒரு வித்தியாசமான ரெசிபியை தான் நாம் இன்று பார்க்க போகின்றோம்.
பொதுவாகவே ஆறு மாத காலம் முதல் குழந்தைகளுக்கு ஓட்ஸ் கஞ்சியை கொடுக்கலாம் என நான் ஏற்கனவே பரிந்துரைத்திருக்கின்றேன். குழந்தைகளுக்கு ஆறு மாத கால உணவு அட்டவணையிலும் ஓட்ஸ் கஞ்சி இடம் பெற்றிருக்கும். ஆனால் ஓட்ஸ் கஞ்சியை இருமுறைக்கு மூன்று முறை தொடர்ந்து கொடுக்கும்பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்பட்டால் அதனுடன் பழங்கள் சேர்த்து வித்தியாசமாக கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள்.
பொதுவாகவே ஓட்ஸ் உடன் எந்த வகையான பழங்கள் சேர்த்தாலும் அதனுடைய சுவை அதிகரித்து காணப்படும் என்பதை ஒட்ஸ் இன் சிறப்பு. எனவே நாம் கொடுக்கும் ஓட்ஸ் மற்றும் பேரிக்காய் இரண்டும் பல வகையான சத்துக்களை கொண்டிருப்பதால் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவாக இது இருக்கும். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் ஓட்ஸ் மட்டும் பேரிக்காயில் அடங்கியுள்ள நன்மைகளை நாம் பார்க்கலாம்.
Oats kanji for babies in Tamil:
- ஓட்சில் இயற்கையாகவே நார்சத்துக்கள், புரோட்டின், கார்போஹைட்ரேட்டுகள், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் ஆகியவை அடங்கியுள்ளன. எனவே இந்த குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலை தரக்கூடிய உணவு வகையாகும்.
- பேரிக்காய் பொருத்தவரை வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பல வகையான வைட்டமின்கள் அடங்கி இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- ஓட்ஸ் மட்டும் பேரிக்காயில் அடங்கியுள்ள நார்ச்சத்துகளின் காரணமாக குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அண்டாது.
- ஓட்சில் கலந்து இருக்கும் கார்போஹைட்ரேடுகள் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் விளையாடுவதற்கான சக்தியை அளிக்கவல்லது.
- ஓட்சில் கலந்துள்ள பீட்டா குலுக்கான் எனப்படும் ஒரு வகையான சத்து இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகின்றது.
- பேரிக்காயில் வைட்டமின் சி மற்றும் அன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் எதிர்ப்பு சக்தியை அளிக்கக்கூடியது.
- பேரிக்காயில் இயற்கையாகவே இனிப்பு சத்து நிறைந்துள்ளதால் நீங்கள் குழந்தைகளுக்காக வேறு வகையான இனிப்பூட்டியை சேர்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இதன் இனிப்பு சுவையின் காரணமாக குழந்தைகளும் உணவினை விரும்பி உண்பர்.
Oats kanji for babies in Tamil:
Oats kanji for babies in Tamil:
- ஓட்ஸ்- அரை கப்
- பேரிக்காய்- 1
- தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை
- ஓட்சினை எண்ணெய் சேர்க்காமல் பானில் வறுத்துக் கொள்ளவும்.
- அதில் நறுக்கி வைத்த பேரிக்காய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் பேரிக்காய் மென்மையாக ஆகும் அளவிற்கு வேக விடவும்.
- அடுப்பினை ஆஃப் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
- குழந்தைகளுக்கான சத்தான பேரிக்காய் ஓட்ஸ் கஞ்சி ரெடி.
- குழந்தைகளுக்கு காலை மற்றும் மதிய நேரத்தில் கொடுப்பதற்கு ஏற்ப ஒரு சத்தான உணவாக இந்த ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சி அமையும்.
- இதன் சுவையும் சற்று வித்தியாசமாக இருப்பதால் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பர்.
Oats kanji for babies in Tamil:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ஓட்சினை வறுக்காமல் நேரடியாக சேர்த்துக் கொடுக்கலாமா?
ஓட்சினை அப்படியே கொடுக்காமல் வறுத்து அதனுடன் பேரிக்காய் சேர்த்து வேக வைத்து கொடுக்கும் பொழுது சுவை நன்றாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி உண்பர்.
எத்தனை மாதம் முதல் குழந்தைகளுக்கு இந்த ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சியை கொடுக்கலாம்?
குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முடிந்தவுடன் திட உணவு உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் இந்த கஞ்சியை நீங்கள் தாராளமாக கொடுக்கலாம்.
பேரிக்காய் தவிர வேறு ஏதேனும் பழங்கள் சேர்க்கலாமா?
பேரிக்காய் தவிர ஆப்பிள்,வாழைப்பழம் போன்றவற்றை சேர்த்தும் நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
ஓட்ஸ் பேரிக்காய் கஞ்சி
Ingredients
- ஓட்ஸ்-அரை கப்
- பேரிக்காய்-1
- தண்ணீர்-தேவையான அளவு
Leave a Reply