Oats Walnut Kanji for Babies: குழந்தைகளின் சுவை மொட்டுகளுக்கு ஏற்றவாறு உணவு சமைத்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு உண்மையில் சவாலான விஷயம்தான். ஏனென்றால், குழந்தைகள் இரண்டு நாள் சாப்பிட்ட உணவினை மூன்றாவது நாள் கொடுக்கும் பொழுது சாப்பிட மறுப்பது வழக்கமான விஷயம் தான்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
அப்படி என்றால் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு விதவிதமான உணவு கொடுக்க வேண்டும் என்று எங்களிடம் கேட்கும் அம்மாக்கள் ஏராளம். அவர்களுக்காகத் தான் ஆரோக்கியமான, சுவையான உணவுகளை பார்த்து பார்த்து உங்களுக்கு நாங்கள் அறிமுகப்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி குழந்தைகளுக்கு சுவையினையும் ஆரோக்கியத்தையும் ஒன்றாக கொடுக்கக்கூடிய ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி. இதில் உள்ள அத்தனை பொருட்களும் ஒன்றாக சேர்த்தால் கண்டிப்பாக சுவையாக இருக்கும் என்று பெயரை கேட்டாலே உங்களுக்கு தோன்றுகின்றது அல்லவா?
உண்மையில் ரெசிப்பியும் குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் சுவையாக தான் இருக்கும். இந்த கஞ்சி ஆனது குழந்தைகளுக்கு காலை உணவாக கொடுப்பதற்கு ஏற்றது.
Oats Walnut Kanji for Babies:
Oats Walnut Kanji for Babies:
குழந்தைகளுக்கு ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள்:
- ஓட்ஸ்ல் குழந்தைகளுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. எனவே குழந்தைகள் நாள் முழுவதும் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜி தர வல்லது.
- மேலும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு உணவு எளிதில் செரிமானம் ஆவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கல் அண்டாமல் தடுக்கின்றது
- ஓட்ஸ், உலர் திராட்சை மற்றும் வால்நட் இவை மூன்றுமே ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். மேலும் ஓட்ஸ் நார்ச்சத்துக்கள்,மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி ஆகியவற்றை கொண்டுள்ளது.
- உலர் திராட்சையில் பொட்டாசியம், கால்சியம்,இரும்புச்சத்து மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதுடன் எலும்புகளையும் வலுவாக்குகின்றது.
- வால்நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் இ, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன.
- எனவே குழந்தைகளின் மூளை திறனை அதிகப்படுத்தி இதயத்தை வலுவாக்கும் திறனும் இதற்கு உள்ளது.
- மூளைகளின் செயலாற்றுத் திறனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன. குழந்தைகளின் மூளையில் உள்ள திசுக்கள் வளர்வதற்கும், அவர்களின் ஞாபகத்திறனை மேம்படுத்துவதற்கும், ஒருமுகப்படுத்துவதற்கும் இதில் உள்ள அமிலங்கள் துணை புரிகின்றன.
- மேலும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் என்பவை உடலில் உள்ள செல்கள் பழுதடையாமல் பாதுகாக்க கூடியவை. எனவே இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, பல்வேறு நோய்கள் உடலில் அண்டாமல் தடுக்கின்றது.
- ஓட்ஸ் உலர் திராட்சை வால்நட் இவை மூன்றும் இதயத்தை மேம்படுத்தும் திறன் உடையன. ஓட்ஸில் கொலஸ்ட்ரால் குறைவு என்பதால் இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கின்றது.
மொத்தத்தில் இந்த கஞ்சியினை குழந்தைகளுக்கு கொடுப்பது எல்லா வகையிலும் நன்மை பயக்கக் கூடியது.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது நாம் பால் சேர்த்து கொடுக்கலாம். இது கஞ்சியினை மேலும் கொஞ்சம் சுவையாக்கும்.
Oats Walnut Kanji for Babies:
- ஓட்ஸ் -கால் கப்
- வால்நட் -3-4
- உலர் திராட்சை – 2-3 டீஸ்பூன்
- தேன்- 1 டீ.ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு)
- தண்ணீர் அல்லது பால்
Oats Walnut Kanji for Babies:
செய்முறை
1.கடாயில் தண்ணீர் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
2.அதில் உலர் திராட்சை மற்றும் நறுக்கிய வால்நட் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறவும்.
3.ஐந்து நிமிடங்களுக்கு இந்த கஞ்சியினை சிறிது கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
4.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக பால் சேர்க்கலாம்.
5.மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பினை அணைக்கவும்.
6.ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு தேன் சேர்த்து கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை அறிய 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
இந்த கஞ்சியினை எப்பொழுது இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
பால் மற்றும் தேன் சேர்க்காமல் ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த கஞ்சி இணை கொடுக்கலாம்.
இந்த கஞ்சியுடன் பழங்கள் சேர்த்து கொடுக்கலாமா?
தாராளமாக பழங்களை நன்கு மசித்து இந்த கஞ்சியுடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இந்த கஞ்சியில் பால் சேர்க்கலாமா?
ஒரு வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது பால் சேர்த்து கொடுத்தால் கஞ்சி என்னும் சுவையாக இருக்கும்.
இதில் முந்திரி, பாதாம் போன்றவை சேர்க்கலாமா?
உங்கள் குழந்தைகளின் சுவைக்கு ஏற்ப முந்திரி பாதாம் போன்றவற்றை நன்கு பொடியாக்கி இதில் கலந்து தாராளமாக கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கான ஓட்ஸ் வால்நட் உலர் திராட்சை கஞ்சி
Ingredients
- ஓட்ஸ்-கால் கப்
- வால்நட்-3-4
- உலர்திராட்சை – 2-3 டீஸ்பூன்
- தேன்-1 டீ.ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு)
- தேன்-1 டீ.ஸ்பூன் (ஒரு வயதிற்கு மேலேஉள்ள குழந்தைகளுக்கு) தண்ணீர்அல்லது பால்
Notes
- கடாயில் தண்ணீர் மற்றும் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
- அதில் உலர் திராட்சை மற்றும் நறுக்கிய வால்நட் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கிளறவும்.
- ஐந்து நிமிடங்களுக்கு இந்த கஞ்சியினை சிறிது கட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக பால் சேர்க்கலாம்.
- மேலும் இரண்டு நிமிடங்கள் கிளறி அடுப்பினை அணைக்கவும்.
- ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு தேன் சேர்த்து கொடுக்கலாம்.
Leave a Reply