Pachai Pattani Puree in Tamil:பச்சை பட்டாணியை வைட்டமின்களின் ஆற்றல் மையம் என்று அழைக்கலாம்.உடலுக்கு தேவையான அத்தனை நற்குணங்களையும் உள்ளடக்கியது.இதை குழந்தைகளுக்கு ஆறு மாதத்திலிருந்து மசியலாக கொடுக்கலாம்.பச்சைபட்டாணியில் குழந்தைகளின் உடலுக்கு தேவையான நார்ச்சத்துக்கள்,இரும்புச்சத்து,வைட்டமின்-கே,மெக்னீசியம் மற்றும் புரதச்சத்துக்கள் அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.இதனுடன் பட்டர் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளை அளிக்கின்றது.சீரகத்தூள் எளிதில் செரிமானம் அடைய செய்கின்றது.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பச்சை பட்டாணி பட்டர் மசியல்
- பச்சைப்பட்டாணி – 1 கப்
- பட்டர் – 1 டீ.ஸ்பூன்
- சீரகத்தூள் – இம்மியளவு
Pachai Pattani Puree in Tamil:
செய்முறை
1) பானில் தண்ணீரை எடுத்து கொள்ளவும்.
2) பச்சை பட்டாணியை பாத்திரத்தில் போட்டு பானில் வைக்கவும்.
3) 5-10 நிமிடங்களுக்கு ஆவியில் வேகவைக்கவும்.
4)வேகவைத்த பச்சை பட்டாணியை நன்கு மசிக்கவும்.
5)பானில் பட்டரை சூடாக்கவும்.
6)மசித்த பச்சை பட்டாணியை அதில் சேர்க்கவும்.
7)சீரகத்தூள் சேர்க்கவும்.
8)சில நிமிடங்களுக்கு வதக்கவும்.
9)பச்சைபட்டாணி பட்டர் மசியல் ரெடி.
குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது பிரெஷான பச்சை பட்டாணியை கொடுத்திடுங்கள்.பதப்படுத்தப்பட்ட பட்டாணியினை தவிர்த்திடுங்கள்.ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது நன்றாக மசிக்க வேண்டும்.பச்சை பட்டாணியில் பீட்டா குலுக்கன் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.பச்சை பட்டாணியினை மட்டும் தனியாக மசித்து கொடுத்தால் குழந்தைகள் உண்ணாமல் இருக்கலாம்.சுவையினை அதிகரிப்பதற்காக பட்டர் சேர்த்துள்ளேன்.குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.ஆரோக்கியமான பச்சை பட்டாணி மசியலை நீங்களும் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply