Paneer Paniyaram: புரோட்டின் சக்தி என்பது வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்களில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கு எப்படி வைட்டமின்கள் மிகவும் முக்கியமோ தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
புரதம் என்பது மாமிச உணவுகளில் அதிகம் கிடைக்கின்றது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அடிக்கடி மாமிச உணவு கொடுப்பது என்பது சாத்தியமாகாத விஷயம்.
இதற்கு மாற்றாக புரதச்சத்து அதிகம் உள்ள இந்த மாதிரியான வெஜு உணவுகளை தேர்வு செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அதற்கு சரியான தேர்வு தான் பன்னீர் பணியாரம்.
பன்னீரில் இயற்கையாகவே புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு இதனை தாராளமாக கொடுக்கலாம். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் இது இருக்கும்.
பன்னீர் ரெசிபி என்று பொதுவாக பன்னீர் ஃப்ரை மற்றும் பன்னீர் பட்டர் மசாலா போன்ற ரெசிபிகளை தான் நாம் செய்து கொடுத்திருப்போம். இந்த முறை இது போன்று வித்தியாசமாக செய்து உங்கள் குழந்தைகளை அசத்துங்கள்.
Paneer Paniyaram
பன்னீரில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:
Paneer Paniyaram:

- பன்னீரில் நிறைந்துள்ள புரோட்டின் தசைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பன்னீரில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை எலும்புகள் மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- பன்னீரில் இயற்கையாகவே ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளதால் இவை குழந்தைகளுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன.
- வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கையான பன்னீர் ஆனது எளிமையாக ஜீரணமாகும் என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
- தண்ணீரில் நிறைந்துள்ள வைட்டமின் பி12 எனப்படும் சத்தானது மூளைகள் மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ரெசிபியை தாராளமாக கொடுக்கலாம்.
- இட்லி மாவு- 1 கப்
- பிரஸ் பன்னீர்- கால் கப்(துருவியது)
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- கருவேப்பிலை
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 1-2 டீ.ஸ்பூன்
செய்முறை
- துருவிய பன்னீர் வெங்காயம் கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பணியார சட்டியை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
- கலக்கி வைத்த மாவினை பணியாரம் குழிக்குள் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து மூடவும். பொன்னிறமானவுடன் திருப்பி போடவும்.
- சூடாக பரிமாறலாம்.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு ஏதேனும் வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த பணியாரம் சரியான தேர்வாகும். இதனை செய்வதற்கு வீட்டில் இருக்கும் தோசை மாவு மற்றும் பன்னீர் மட்டுமே போதும் என்பதால் எளிதாக செய்து முடிக்கலாம்.
குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களும் டீ குடிக்கும் நேரத்தில் ஏதேனும் ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் இதனை சாப்பிடலாம். காலை நேர டிபன் ஆக இட்லி தோசைக்கு பதிலாக இதனை செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Paneer Paniyaram

உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. இந்த பணியாரத்தை எந்த வயதில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்?
பன்னீர் பணியாரத்தை ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
2. வெங்காயம் சேர்க்காமல் இதனை செய்யலாமா?
வெங்காயம் சாப்பிடாத குழந்தைகளுக்கு வெங்காயத்தைச் சேர்க்காமல் வெறுமனே பணியாரத்தை மட்டும் ஊற்றிக் கொடுக்கலாம்.
3. வேறு ஏதேனும் காய்கறிகள் சேர்க்கலாமா?
இதனுடன் துருவிய கேரட் மற்றும் கீரை போன்றவை சேர்த்தும் செய்து கொடுக்கலாம்.
பன்னீர் பணியாரம்
Ingredients
- இட்லி மாவு- 1 கப்
- பிரஸ் பன்னீர்- கால் கப் துருவியது
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- கருவேப்பிலை
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 1-2 டீ.ஸ்பூன்
Notes
- துருவிய பன்னீர் வெங்காயம் கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பணியார சட்டியை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
- கலக்கி வைத்த மாவினை பணியாரம் குழிக்குள் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து மூடவும். பொன்னிறமானவுடன் திருப்பி போடவும்.
- சூடாக பரிமாறலாம்.











Leave a Reply