Pasi paruppu Payasam:பண்டைய காலம் முதல் பாரம்பரியமாக நம் உணவு பட்டியலில் இடம் பெற்று வரும் ரெசிபிகளில் பாயாசமும் ஒன்று.நம் வரலாற்று கதைகள் மற்றும் புராண கதைகளிலும் பாயாசம் இடம் பெற்றிருக்கின்றது.விரத காலங்களிலும்,விசேஷ பூஜைகளிலும் பாயாசம் தவறாமல் இடம் பெரும்.வாழையிலை இட்டு அறுசுவை உணவு உண்ணுப்பொழுதும் கடைசியில் பாயசத்தோடு முடிக்கும்பொழுது தான் விருந்து உண்ட திருப்தியே கிட்டும். பாயாசங்களில் பலவகை உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்.அதில் உடலுக்கு நன்மை அளிக்கும் சுவையான பாயச வகைதான் பாசிப்பருப்பு பாயாசம்.அதை நாம் எப்படி செய்யலாம் என்பதை இந்த ரெசிபியில் காணலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
பாசிப்பருப்பு பாயாசம்:
Pasi paruppu Payasam:
தேவையானவை
- பாசிப்பருப்பு – ¼ கப்
- பசும்பால் – ¼ கப் ( 1கப் = 200 ml)
- தேங்காய்ப்பால்- ¼ கப்
- ஆர்கானிக் வெல்லத்தூள்– ½ கப்
- முந்திரி – 4-5
- உலர்திராட்சை- 4-5
- கிராம்பு – 2
- ஏலக்காய்த்தூள்- ¼ டீ.ஸ்பூன்
- நெய் – 1 டே.ஸ்பூன்
இதையும் படிங்க: குழந்தைகளுக்கான நலங்கு மாவு தயாரிக்கும் முறை:
செய்முறை:
1.குக்கரில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
2.முந்திரி,உலர்திராட்சை மற்றும் கிராம்பை வாசனை வரும்வரை வறுக்கவும்.
3.வறுத்தவற்றை ஓரமாக வைக்கவும்.அதே நெய்யில் பாசிப்பருப்பை போட்டு 1-2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வறுக்கவும்.
4.பருப்புடன் 3/4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் 2 விசில் வைக்கவும்.
5.அடுப்பிலிருந்து இறக்கி பிரஷர் வெளியேறியதும் குக்கரை திறக்கவும்.
6.பருப்பை கரண்டியால் நன்றாக மசிக்கவும்.வெல்லத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
7.அடுப்பில் வைத்து வெல்லத்தூள் நன்றாக கரையும் வரை கிளறவும்.ஏலக்காய் தூளை தூவவும்.
8.பின்பு பாலை ஊற்றி நன்றாக கலக்கவும்.
9. 2-3 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும். கடைசியாக தேங்காய்ப்பால் சேர்த்து கிளறவும்.
10.வறுத்து வைத்த முந்திரி மற்றும் திராட்சையை தூவி பரிமாறவும்.
இதையும் படிங்க: ஒரு வயதுக்கு குறைவான குழந்தைக்கு ஏன் பசும்பால் தரக் கூடாது?
பாசிபருப்பில் புரதசத்துக்களும் நார்சத்துக்களும் அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.இதில் மேலும் உடலுக்கு நன்மை விளைவிக்கும் பாஸ்பரஸ்,கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்களும் அடங்கியுள்ளன.ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது சர்க்கரை சேர்க்க கூடாது.அதற்கு பதில் ஆர்கானிக் நாட்டுசர்க்கரை சேர்க்கலாம்.குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது நட்ஸ் சேர்க்காமல் டிரை புரூட்ஸ் பவுடர் கலந்து கொடுக்கலாம்.
மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் சர்க்கரையைஎப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply