Poosanikkai Alva for Babies:எண்ணிலடங்கா நன்மைகளை உள்ளடக்கிய நீர்ச்சத்துள்ள சிறந்த நாட்டுக்காய்தான் பூசணிக்காய்.ஆனால் நம்மில் பலருக்கும் பிடிக்காது என்பதால் வீட்டில் அடிக்கடி செய்ய மாட்டோம்.குழந்தைகளும் பலரும் விரும்பி உண்ண மாட்டார்கள்.பூசணிக்காயை அல்வாவாக செய்து கொடுக்கும் பொழுது பூசணிக்காய் சென்ற இடம் தெரியாது .
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கும் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.இதில் நான் சர்க்கரைக்கு பதிலாக டேட்ஸ் பவுடர் சேர்த்துள்ளதால் 8 மாத குழந்தை முதல் இந்த பூசணி அல்வாவினை கொடுக்கலாம்.ட்ரை புரூட்ஸ் பவுடரும் கலந்துள்ளதால் சுவையும் நன்றாக இருக்கும்.
குழந்தைகளுக்கான பூசணி அல்வா
- துருவிய பூசணி – 1 கப்
- டேட்ஸ் பவுடர் – ¼ கப்
- நெய்- 1 டே .ஸ்பூன்
- ட்ரை புரூட்ஸ் பவுடர் – 1 டே.ஸ்பூன்
- தண்ணீர் – ½ கப்
- ஏலக்காய்த்தூள் – இம்மியளவு
டேட்ஸ் பவுடரை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Poosanikkai Alva for Babies:
செய்முறை
1.பான் சூடானதும் நெய் ஊற்றவும்.
2.துருவிய பூசணி சேர்த்து நன்றாக வதக்கவும்.
3.சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
4.டேட்ஸ் பவுடர் சேர்க்கவும்.
5.ட்ரை புரூட்ஸ் பவுடர் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறவும்.
6.கெட்டியாகும் வரை நன்கு கிளறவும்.
7.இதமாக பரிமாறவும்.
பூசணிக்காயின் நன்மைகள்:
- பூசணிக்காயின் விதைகளில் விட்டமின் B, விட்டமின் A, மினரல்ஸ், தாது உப்புக்கள், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
- உடல் சூட்டை தனிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- குழந்தைகளின் நரம்புகளுக்கு பலமளிக்கக்கூடியது.
- ரத்தத்தை சுத்திகரிக்க செய்கின்றது.
- வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழிக்க வல்லது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply