Potato cheese Recipe for babies: உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் கலந்த ஹெல்த்தி வெயிட் கெய்னிங் ரெசிபி!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று.குழந்தைகளுக்கு தேவையான கால்சியத்தை அளிப்பதில் சீஸ் முக்கிய பங்கு வகிக்கின்றது.உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளது.இவை இரண்டும் சேர்ந்த டேஸ்டியான ரெசிபிதான் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்.உருளைக்கிழங்கு மற்றும் சீஸ் இவை இரண்டுமே குழந்தையின் உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்க செய்பவை.இதனை 8 மாத குழந்தைகளுக்கு பிங்கர் ஃபுட்டாக கொடுக்கலாம்.மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்னாக்ஸாகவும் கொடுக்கலாம்.
உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்
தேவையானவை
- உருளைக்கிழங்கு -4
- ரவை – 2 டே.ஸ்பூன்
- மிளகு – 1/2 டீ. ஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீ.ஸ்பூன்
- துருவிய சீஸ்- 1 கப்
Potato cheese Recipe for babies:
செய்முறை
1.குக்கரில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.
2.உருளைக்கிழங்கை அதில் போடவும்.
3.விசில் வரும்வரை நன்றாக வேகவைக்கவும்.
4.உருளைக்கிழங்கு தோலினை நீக்கி நன்றாக மசிக்கவும்.
5.ரவை சேர்க்கவும்.
6.மிளகு மற்றும் கரம்மசாலா சேர்க்கவும்.
7.மாவு பதத்திற்கு வருமாறு நன்றாக பிசையவும்.
8.சிறிது மாவை எடுத்து கொண்டு கப் போன்று ஷேப் செய்து கொள்ளவும்.
9.துருவிய சீஸை நிரப்பி பந்து போல உருட்டவும்.
10.கோதுமை ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.
11.மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
12.சூடாக பரிமாறவும்.
ஒரு வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது உப்பு சேர்க்காத சீஸை வாங்க வேண்டும்.௧ வயதிற்கு மேல் உப்பு சேர்த்து கொள்ளலாம்.இந்தியன் சீஸை வாங்குவது சிறந்தது.சீஸிற்கு பதிலாக வீட்டிலேயே தயாரித்த பன்னீர் கொடுக்கலாம்.இந்த டேஸ்டியான உருளைக்கிழங்கு சீஸ் பாலை உங்கள் குழந்தைகள் கட்டாயம் விரும்பி உண்பார்கள்!
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply