Rava Puttu: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும்? என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் இது உங்களுக்கான பாரம்பரியமான ரவா புட்டு.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
புட்டு என்பது நாம் ஆரம்ப கால முதலே வீடுகளில் தயாரிக்கும் சிற்றுண்டிகளில் ஒன்று தான் என்றாலும் குழந்தைகள் பொதுவாக அதை விரும்ப மாட்டார்கள். மேலும் நாமும் அரிசி மாவு புட்டு தான் அடிக்கடி வீட்டில் செய்வோம்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் புட்டு ரெசிபியானது சற்று வித்தியாசமான ரவா புட்டு. செய்வதற்கு மிகவும் எளிது என்பதால் சற்று என்று குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் இந்த ரவா புட்டை செய்து பார்க்கலாம்.
Rava Puttu :
இது செய்வதற்கு வீட்டில் உள்ள ரவை,தேங்காய் மற்றும் பால் போன்றவை என்பதால் எளிதாக செய்து முடித்து விடலாம். இந்த ரெசிபியை பார்ப்பதற்கு முன்னால் இதில் நிறைந்துள்ள நன்மைகளை பார்க்கலாம்:

- ரவையில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் உடலுக்கு தேவையான எனர்ஜியை தரக்கூடியது. எனவே குழந்தைகள் நீண்ட நேரம் விளையாடுவதற்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது.
- ரவா எளிமையான உணவு என்பதால் குழந்தைகளுக்கு எளிதாக செரிமானம் ஆகிவிடும்.
- குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ரவையில் நிறைந்துள்ளதால் மூளையினை சுறுசுறுப்பாக வைக்க வல்லது.
- மேலும் குழந்தைகள் வளர்வதற்கு தேவையான இரும்பு சத்து மெக்னீசியம் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியமானது.
- ரவையில் புட்டு மட்டும் அல்லாமல் காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து உணவு தயாரித்து கொடுக்கும் பொழுது அது உடலுக்கு மேலும் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
- சிறிது சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வை தரும் என்பதால் வேறு வகையான சிற்றுண்டிகள் உண்பதற்கு குழந்தைகளுக்கு கவனம் செல்லாது.
Rava Puttu:
- ரவை- 1 கப்
- துருவிய தேங்காய்- அரை கப்
- வெதுவெதுப்பான பால்- அரை கப்
- நாட்டு சக்கரை -1-2 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- சிறிதளவு
- நறுக்கிய நட்ஸ் வகைகள்-1 டே.ஸ்பூன்
- நெய்- 2 டீ.ஸ்பூன்
Rava Puttu
செய்முறை
- ரவையை மிதமான சூட்டில் வைத்து நறுமணம் வரும் வரை வறுக்கவும். பின்பு ஆறவிடவும்.
- பாலை சிறிது சிறிதாக ரவையில் ஊற்றி மெதுவாக பிசையவும். ஆனால் ரவை உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.
- இட்லி குக்கரில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு வேக விடவும்.
- ஒரு கடாயில் 1 முதல் 2 டீ.ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றவும்.
- நறுக்கி வைத்த டிரை ஃப்ரூட்ஸ்களை லேசாக நறுமணம் வரும் அளவிற்கு வறுக்கவும்.
- ரவையின் மீது நட்ஸ் மற்றும் தேங்காய் பூ தூவி குழந்தைகளுக்கு பரிமாறவும்.
வீட்டில் உள்ள ரவை, பால் மற்றும் தேங்காய் பூ இவை மட்டுமே போதும் என்பதால் குழந்தைகளுக்கு சட்டென்று ஸ்நாக்ஸ் செய்வதற்கு இது ஒரு நல்ல தீர்வாகும். மேலும் இதில் நறுக்கிய முந்திரி,பாதாம் மற்றும் பிஸ்தா போன்றவையும் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு மேலும் நன்மை அளிக்கக் கூடியது.

Rava Puttu:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
ரவா புட்டு குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதா?
ரவை புட்டு எளிதில் செரிமானம் ஆகும் என்பதால் குழந்தைகளுக்கு தாராளமாக கொடுக்கலாம்.
நாட்டு சக்கரை சேர்க்காமல் செய்து கொடுக்கலாமா?
நீங்கள் சக்கரை வேண்டாம் என்று நினைத்தால் வாழைப்பழத்தை மசித்து குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம்.











Leave a Reply