Sapotta for Babies in Tamil: ஆறுமாத குழந்தைகளுக்கு ஸ்வீட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை நம்மால் தரமுடியாது ஆனால் இவற்றிற்கு இணையாக குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றால் அதுதான் சப்போட்டா பழம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இந்த பழத்தின் சதைப்பகுதியை நாம் சுவைக்கும் போது ஒரு ஸ்வீட் சாப்பிட்ட திருப்தி கண்டிப்பாக நம்முள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் உள்ளடக்கியது சப்போட்டா பழம். ஆம் இயற்கையாகவே சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் மற்றும் உடலுக்கு நன்மை செய்யும் வைட்டமின்கள் ஆகியவை நிறைந்து காணப்படுகின்றன.
இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக செய்து ஒரு மலமிளக்கியாக செயல்படுகின்றன. மேலும் இதில் குளுக்கோஸ் சத்து நிறைந்திருப்பதால் குழந்தைகளுக்கு நல்ல ஆற்றலை அளிக்கக்கூடியது.இதன் சிறப்பு என்னவென்றால் குழந்தைகளுக்கு 6 மாதம் முதலே இந்த பழத்தை நன்றாக மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டா பழத்தின் நன்மைகள்
- சப்போட்டா பழத்தில் வைட்டமின்- ஏ அதிகமாக உள்ளதால் குழந்தைகளின் கண்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது.
- இதிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் குழந்தைகளின் எலும்புகளை வலுப்படுத்த கூடியது.
- இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் அண்டாமல் தடுக்கின்றது.
- இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது.
- குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்க வல்லது.
Sapotta for Babies in Tamil:
குழந்தைகளுக்கான சப்போட்டா பழக்கூழ்
- நன்கு பழுத்த சப்போட்டா பழம்
செய்முறை
- பிரஷ்ஷான சப்போட்டா பழத்தை எடுத்துக் கொள்ளவும். சப்போட்டா பழத்தை அறுத்து நடுவிலுள்ள கொட்டைகளை தனியே பிரித்து எடுக்கவும்.
- சப்போட்டா பழத்தின் சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுக்கவும் மிக்ஸியில் நன்கு அரைக்கவும் இதனுடன் நாம் பார்முலா மில்க் அல்லது தாய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம்.
இதனை ஆறு மாத குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இன்னும் சிறிது மாதங்கள் கழித்து மிக்ஸியில் அரைத்து கொடுப்பதற்கு பதிலாக கரண்டியினால் நன்றாக மசித்துக் கொடுக்கலாம். சிறுவர்களுக்கு சப்போட்டா பழத்துடன் வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் போன்று கொடுக்கலாம்.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply