Sathumaavu Barfi in Tamil: வகை வகையான செர்லாக்குகள் இன்று வலம் வந்தாலும் நம் பாட்டிகள் நமக்கு சிறு வயதில் அளித்ததென்னவோ சத்துமாவுதான். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு சத்து மாவை சாப்பிட செய்வதற்குள் வீட்டிற்குள் பெரிய போராட்டமே நடந்து முடிந்துவிடும்.ஆனால் அதையே குழந்தைகளுக்கு விருப்பமான பிளேவரில் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள் அல்லவா?அதற்கான ரெசிபிதான் இந்த சத்துமாவு பர்பி.ஆம்! இனிப்பை விரும்பாத குழந்தைகளே இல்லை எனலாம்.ஆனால் இனிப்புகளை கடைகளில் வாங்கிக்கொடுக்கும் பொழுது அதில் கலந்துள்ள சர்க்கரை குழந்தைகளின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும்.ஆனால் சத்துமாவு,கோதுமை மாவு,நெய் மற்றும் ஆர்கானிக் நாட்டுசர்க்கரை ஆகியவை கலந்த சத்துமாவு பர்பி குழந்தைகளுக்கு ஆரோக்கியமானது.குழந்தைகளும் விரும்பி உண்பர்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Sathumaavu Barfi in Tamil:
தேவையானவை
- நெய்- 1/3 கப்
- மை லிட்டில் மொப்பெட் சத்துமாவு பவுடர் -1/2 கப்
- மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் வெல்லம்- 1/2 கப்
- கோதுமை மாவு -1/2 கப்
- பாதாம் துருவல்- 1 டே.ஸ்பூன்
- ஏலக்காய் தூள்- ½ டீ.ஸ்பூன்

மை லிட்டில் மொப்பெட் ஆர்கானிக் சர்க்கரையை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம். நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
சத்துமாவு பர்பி
செய்முறை:
1.கனமான பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்.நெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும்.

2.நெய் உருகியதும் அடுப்பை மிதமாக்கி சத்துமாவு மற்றும் கோதுமை மாவை சேர்க்கவும்.மாவை 5 – 7 நிமிடங்களுக்கு இடைவிடாமல் நெய்யில் நன்றாக வறுக்கவும்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான நலங்கு மாவு செய்வது எப்படி?
3.வறுத்த பின் மாவின் நிறம் மாறி நல்ல வாசனை வரும்.மாவை பாத்திரத்தில் பிடிக்காதவாறு வறுக்க வேண்டும்.

4.வறுத்த மாவில் வெல்லத்தூளை சேர்த்து நன்கு கிளறவும்.மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கலவையை வறுக்கவும்.

5.கடைசியில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும்.

6.ட்ரேயில் நெய் தடவி தயாரித்து வைத்த கலவையை நிரப்பவும்.பர்பி மிக்ஸை கரண்டியின் பின் புறத்தால் நன்றாக அழுத்தவும்.
7.பாதாம் துருவலை மேலே தூவவும்.

8.கலவை ஆறியவுடன் பிடித்தமான வடிவத்தில் கட் செய்து சுவைத்து மகிழுங்கள்.

காற்று புகாத டப்பாவில் அடைத்தால் இரண்டு வாரங்களுக்கு நன்றாக இருக்கும்.பண்டிகை காலங்களில் இந்த இனிப்பினை செய்து அனைவரும் சுவைத்து மகிழலாம்.ஒரு டம்ளர் பாலுடன் இந்த பர்பியை காலை உணவாக எடுத்து கொள்ளலாம். சத்துமாவு பர்பி நீங்கள் அரை மணி நேரத்தில் செய்து முடிக்க கூடிய எளிமையான ரெசிபியாகும்.

இதையும் படிங்க: குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 15 உணவுகள்
மை லிட்டில் மொப்பெட் சத்துமாவை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply