Sevvalai Dates Masiyal : இதுவரை சிறுவர்களுக்கு கொடுக்கக்கூடிய பல ஆரோக்கியமான ரெசிபிகளை பார்த்த நமக்கு இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிப்பியானது எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஒரு ஆரோக்கியமான ரெசிபி.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
நமக்கு மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை வைத்து ஆரோக்கியமான இந்த ரெசிபியை எளிதில் செய்து முடிக்கலாம்.
குழந்தைகளுக்கு செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகிய இரண்டுமே ஆரோக்கியம் அளிக்கக்கூடியது என்பது நாம் ஏற்கனவே அறிந்த விஷயம் தான்.
ஆனால் இவை இரண்டையுமே கலந்து எட்டு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு எவ்வாறு ஆரோக்கியமான ரெசிபியாக கொடுப்பது என்பதை பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு பொதுவாக ஒரு வயது வரை நாம் கொடுக்கும் உணவு வகைகளில் உப்பு மற்றும் சர்க்கரை போன்றவை கலக்காமல் கொடுப்பதுதான் சிறந்தது. ஆனால் பழங்களில் கிடைக்கும் இயற்கையான சர்க்கரையை நாம் கொடுக்கலாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் சீனி, நாட்டு சக்கரை ஆகியவற்றை கலப்பதற்கு பதிலாக, வாழைப்பழத்தை மசித்து கொடுத்தால் இயற்கையான இனிப்பு சத்து கிடைக்கும். இவற்றை கொடுப்பதற்கு முன்னால் இந்த இரண்டு உணவு பொருட்களில் நிறைந்த நன்மைகளை பார்க்கலாம்.

Sevvalai Dates Masiyal:
செவ்வாழை பழத்தின் நன்மைகள்:
- செவ்வாழைப்பழத்தில் இறக்கையாகவே வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.
- இது நார் சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது.
- பொட்டாசியம் நிறைந்துள்ளதால் குழந்தைகளின் தசை மற்றும் நரம்புகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.
- மேலும் சிவப்பு வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்க வல்லது.
- குழந்தைகளின் வயிற்றுக்கு எளிதான உணவு தான் சிறந்தது என்பதால் சிறந்த உணவாக இருக்கும்.
- பேரிச்சம்பழத்தில் ஹீமோகுளோபின் அதிகம் என்பதால் ரத்தசோகை வராமல் தடுக்கக்கூடியது.
- குழந்தைகளுக்கு இயற்கையான இனிப்பு சுவையினை கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் பேரிச்சம் பழத்தை சேர்த்து கொடுப்பதற்கு சிறந்த மாற்றாகும்.
- பேரிச்சம் பழத்தில் இயற்கையாகவே உள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய வேதிப்பொருட்கள் குழந்தைகளின் உணவிற்கு இயற்கையான இனிப்புச் சுவையினை சேர்க்கின்றது.
- இதை நிறைந்துள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை மூளை திறனுக்கு உதவுகிறது.
- மேலும் பேரிச்சம்பழத்தில் உள்ள நார் சத்துக்கள் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்க கூடியது. மேலும் இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக இருப்பதால் நச்சுத்தன்மையிலிருந்து நம் உடலை பாதுகாக்கின்றது.
Sevvalai Dates Masiyal:
செவ்வாழை -1
பேரிச்சை – 2-3 (கொட்டை எடுத்து ஊற வைத்தது)
Sevvalai Dates Masiyal
செய்முறை
1.பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
2.செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
3.மிக்ஸியில் செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும்.
4.குழந்தைகளுக்கு பரிமாறவும்.
இந்த ரெசிபியினை 8 மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம். செவ்வாழைப்பழம், பேரிச்சம் பழம் ஆகிய இரண்டுமே குழந்தைகளுக்கு நன்மை என்பதால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ இந்த ரெசிபியை நீங்கள் செய்து கொடுக்கலாம்.
பேரிச்சம் பழத்திற்கு பதிலாக செவ்வாழை பழத்துடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் போன்றவை சேர்த்தும் அரைத்து கொடுக்கலாம்.
செவ்வாழைப்பழத்துடன் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் கொடுக்கும் பொழுது குழந்தைகளின் உடல் எடையானது நன்கு ஆரோக்கியமாக அதிகரிக்க இது உதவும்.
ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு பதிலாக பசும்பால் சேர்த்தும் கொடுக்கலாம். ஆனால் ஒரு வயதிற்கு முன்னே பசும்பால் உபயோகப்படுத்தக் கூடாது.
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Sevvalai Dates Masiyal:
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
செவ்வாழை பேரிச்சம்பழ ரெசிபியை எந்த மாதத்தில் இருந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்?
இந்த ரெசிபியை 8 மாதத்திற்கு மேல் குழந்தைகளுக்கு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
இவற்றுடன் வேறு ஏதேனும் சேர்க்கலாமா?
குழந்தைகளுக்கு பாதாம், முந்திரி போன்றவற்றை ஊற வைத்து இவற்றுடன் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்.
இதனுடன் பசும்பால் சேர்க்கலாமா?
ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு பசும்பால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்பதால் அதனை சேர்க்கக்கூடாது. ஒரு வயதிற்கு மேலே உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சி ஆற வைத்த பசும்பால் சேர்த்து அரைத்துக் கொடுக்கலாம்.
செவ்வாழை பேரிச்சை மசியல்
Ingredients
- தேவையானவை
- செவ்வாழை -1
- பேரிச்சை - 2- 3 கொட்டை எடுத்து ஊற வைத்தது
Notes
- பேரிச்சம் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும் .
- செவ்வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
- மிக்ஸியில் செவ்வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் ஆகியவற்றை ஒன்றாக அரைக்கவும்.
- குழந்தைகளுக்கு பரிமாறவும்.
Leave a Reply